கோடை விடுமுறை கொண்டாட ஒகேனக்கல்லில் திரண்ட மக்கள்
Added : மே 13, 2019 01:51
பென்னாகரம் : கோடை விடுமுறை மற்றும் கடும் வெயில் காரணமாக, நேற்று, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் ஒகேனக்கல்லில் திரண்டனர்.தர்மபுரி மாவட்டத்தின், சிறந்த சுற்றுலா தலமாக ஒகேனக்கல் உள்ளது. இங்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும், ஏராளமான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர்.நேற்று, வார விடுமுறை மற்றும் பள்ளி, கல்லுாரி கோடை விடுமுறையால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் குடும்பத்துடன் வந்தனர்.
அவர்கள் வந்த வாகனங்கள், சாலையின் இரு புறங்களிலும் நிறுத்த இடமின்றி, 2 கி.மீ.,க்கு அணிவகுத்து நின்றன. சுற்றுலா பயணியர் மசாஜ் செய்தும், மெயின் அருவி மற்றும் காவிரியாற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.ரோகு, கட்லா, ஆரால், கல்பாசை, ஜிலேபி, பாறை உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் விற்பனையாகின. ஒரு கிலோ மீன், 100 ரூபாய் முதல், 250 ரூபாய் வரை விற்பனையானது.சுற்றுலா பயணியர் குடும்பத்தோடு, காவிரியாற்றில் பாறைகளுக்கு இடையே பரிசல் சவாரி செய்து, காவிரியாற்றின் எழில்மிகு அழகை கண்டு ரசித்தனர்.கூட்டம் அதிகமாக இருந்ததால் லைப் ஜாக்கெட் பற்றாக்குறையால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, சுற்றுலா பயணியர் காத்திருந்து பரிசல் சவாரி செய்தனர். நடைபாதை மீது, சுற்றுலா பயணியர் கூட்டம் அலை மோதியது.
No comments:
Post a Comment