நெரிசலில் கொடைக்கானல்
Added : மே 12, 2019 23:38
கொடைக்கானல் : கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் வாகன நெரிசலில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதால் வாகனங்களிலேயே பயணிகள் தங்கி வருகின்றனர்.கொடைக்கானலில் அக்னி நட்சத்திர தாக்கம் இருந்த போதும் மாலை நேரத்தில் இடியுடன் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. இதமான சூழலில் குளு, குளு சீதோஷ்ணநிலை ரசிக்கும்படியாக உள்ளது.கோடை விடுமுறையை அடுத்து உள்ளுர் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
கடந்த இரு தினங்களாக சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்தது. பெருமாள்மலை-வெள்ளி நீர்வீழ்ச்சி, மூஞ்சிக்கல், கோக்கர்ஸ்வாக், ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி, வனச்சுற்றுலா தலங்கள் என நகரின் பிரதான ரோடுகள் போக்குவரத்து நெரிசலில்தள்ளாடியது.ஒரு வழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டு கூடுதல் போலீசார் நியமித்தப் போதும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே உள்ளது. இன்ப சுற்றுலா வருவோர் நெரிசலின் பிடியில் மனம் இறுக்கமடைந்தனர். தங்கும் விடுதி தட்டுப்பாடு மற்றும் அதிக கட்டணத்தால் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் உறங்கும் பரிதாப நிலையே நீடிக்கிறது.
உணவு விடுதிகளில் விலை பட்டியல் இல்லாமல் அதிக விலைக்கு உணவுகள் விற்கப்படுவதால் பயணிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். வெள்ளி நீர்வீழ்ச்சி, பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ்வாக், குணா குகை, மோயர் சதுக்கம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பயணிகளின் வருகையால் களைகட்டியது.

No comments:
Post a Comment