முதுநிலை மருத்துவ படிப்பில் சேர அழைப்பு
Added : மே 15, 2019 01:39
சென்னை:'முதுநிலை மருத்துவ படிப்பில் காலியாக உள்ள, 82 இடங்களில் சேர விரும்புவோர், மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு நேரில் வரலாம்' என, தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
முதுநிலை மருத்துவ படிப்பில், அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, 1,761 இடங்களும் நிரம்பின. ஆனால், ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, 'நான் கிளினிக்கல்' எனப்படும், மயக்கவியல், உடற்கூறியல் போன்ற படிப்புகளுக்கான, மாநில அரசு ஒதுக்கீட்டில், 48; நிர்வாக ஒதுக்கீட்டில், 34 என, 82 இடங்கள் நிரம்பாமல் உள்ளன.
இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வின், 'கட் - ஆப்' மதிப்பெண்ணை, மத்திய அரசு குறைத்துள்ளது. அதனால், பலருக்கு முதுநிலை மருத்துவம் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வாய்ப்புள்ள மாணவர்கள், இந்தாண்டே முதுநிலை மருத்துவத்தில் சேர, ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, 339 முதல், 313 வரை, கட் - ஆப் பெற்றுள்ள பொதுப்பிரிவினர்; 294 - 270 வரை, கட் - ஆப் பெற்றுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர், இதர பிற்படுத்தப்பட்டோர்; 316 - 291 வரை,கட் - ஆப் பெற்ற மாற்றுத்திறனாளிகள்,இன்றும், நாளையும், உரிய ஆவணங்களுடன், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு, நேரில் வரலாம்.மேலும் விவரங்களை, www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment