Wednesday, May 15, 2019

ரயில் டிரைவர் ஆஜராக உத்தரவு

Added : மே 15, 2019 01:49

மதுரை:சென்னை - நெல்லை அந்தியோதயா ரயிலை வேகமாக ஓட்டிய டிரைவர், விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரத்தில் புறப்பட்ட, நெல்லை அந்தியோதயா ரயில், மதுரை நோக்கி நேற்று காலை வந்தது. வாடிப்பட்டி - சோழவந்தான் இடையே, பராமரிப்பு பணி நடப்பதால், ரயிலை, 30 கி.மீ., வேகத்தில் இயக்க உத்தரவிடப்பட்டிருந்தது.ஆனால், ரயில், அதிவேகத்தில் அந்த இடத்தை கடந்தது. இது குறித்து, கோட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, கோட்ட இயக்க பிரிவு அலுவலகத்தில், இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு, டிரைவர் ரமேஷ்குமார், கார்டு உட்பட ஒன்பது பேருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Minister says no Pongal gift due to financial crisis

Minister says no Pongal gift due to financial crisis  TIMES NEWS NETWORK 10.01.2025 Chennai : Chief minister M K Stalin on Thursday launched...