மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 6ல் விண்ணப்பம்
Added : மே 16, 2019 03:31
சென்னை:'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்கு, ஜூன், 6ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என, மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், 23 மருத்துவ கல்லுாரிகளில், 3,150 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. சென்னை பல் மருத்துவ கல்லுாரியில், 100 இடங்கள் உள்ளன.இதில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன. மீதமுள்ள, 85 சதவீத இடங்கள், மாநில கவுன்சிலிங்கில் இடம்பெறுகின்றன. இதை தவிர, தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., 700; பி.டி.எஸ்., 1,100 இடங்கள் உள்ளன.
இந்நிலையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, 2019 - 20 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு, ஜூன், 6ம் தேதி முதல், www.tn.health.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். ஜூன், 26ம் தேதி, முதற்கட்ட கவுன்சிலிங் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறியதாவது:'நீட்' நுழைவுது்தேர்வு முடிவுகள், ஜூன், 5ம் தேதி வெளியாக உள்ளன. ஜூன், 6ம் தேதி, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம். இந்தாண்டு முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது.விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன், சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment