Friday, May 24, 2019

மீண்டும் எழுந்து நிற்போம்: தினகரன்

Added : மே 24, 2019 01:57

சென்னை, 'பீனிக்ஸ் பறவையை போல மீண்டும் எழுந்து நிற்போம்' என அ.ம.மு.க., பொதுச் செயலர், தினகரன் தெரிவித்துள்ளார்.அவர் தன் 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது: தேர்தலில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. எத்தனையோ இன்னல்கள், இடையூறுகளுக்கும் இடையே கட்சியை காக்க, மக்கள் பணியாற்ற சுயேச்சைகளாக களம் இறங்கியவர்கள்; இரவு, பகல் பார்க்காமல் உழைத்த கட்சி தொண்டர்கள்; அ.ம.மு.க.,விற்கு ஓட்டளித்து ஆதரவளித்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.ஜெயலலிதா கற்றுத்தந்த துணிவோடு, பீனிக்ஸ் பறவையை போல மீண்டும் எழுந்து நிற்போம். துாய்மையான அன்போடு, தமிழக மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் உரிமைகளுக்காக அ.ம.மு.க.,வின் குரல் எப்போதும் போல் ஓங்கி ஒலித்திடும். இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 10.01.2025