Saturday, May 11, 2019

ஷீரடிக்கு செல்ல வேண்டுமா? இதோ ஐஆர்சிடிசி சிறப்பு ஏற்பாடு!

Published on : 11th May 2019 11:23 AM 


ஷீரடி, பண்டரிபுரம், மந்த்ராலயம் ஆகிய ஆன்மிகத்தலங்களுக்குச் செல்ல வசதியாக சிறப்பு ரயிலை ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது. இந்த ரயில் ஜூன் 3-ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்படுகிறது.

இந்திய ரயில்வேயும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமும் (ஐஆர்சிடிசி) பாரத தரிசன சுற்றுலா திட்டத்தை கடந்த 2005-இல் தொடங்கி நடத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் 350-க்கும் அதிகமான சுற்றுலாக்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்து, ஆன்மிக தளங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

அந்த வகையில், ஷீரடி, பண்டரிபுரம், மந்த்ராலயம் ஆகிய தலங்களுக்குச் செல்ல சிறப்பு ரயிலை ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது. இந்த ரயில் மதுரையில் இருந்து ஜூன் 3-ஆம் தேதி புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக ஷீரடி, பண்டரிபுரம், மந்த்ராலயம் செல்கிறது.

இதுகுறித்து ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறியது:

6 நாள்கள் கொண்ட இந்த பயணத்தில் ஒரு நபருக்கு ரூ.5,670 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூங்கும் வசதி கொண்ட ரயில் கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்க வாகன வசதி ஆகியவை அடங்கும்.

மேலும், உடைமைகளை ரயிலிலேயே வைத்துவிட்டு தேவையானவற்றை மட்டும் எடுத்துச் செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டிக்கும் தகுதி வாய்ந்த மேலாளர்கள், பாதுகாவலர்கள், உணவு பரிமாறுபவர்கள், பெட்டி உதவியாளர்கள் போன்றவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த யாத்திரை தொடர்பான விவரங்களுக்கு 9003140680, 9003140681 ஆகிய செல்லிடபேசி எண்களில் தொடர்பு கொண்டும், www.irctctourism.com என்ற இணையதளத்தில் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம் என்றார் அவர்.

No comments:

Post a Comment

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’ Tamaghna.Banerjee@timesofindia.com  09.01.2025 Kolkata : Three days after she was...