Saturday, August 3, 2019

பி.ஆர்க்., கவுன்சிலிங் தேதிகள் அறிவிப்பு

Added : ஆக 03, 2019 00:53


சென்னை:பி.ஆர்க்., மாணவர் சேர்க்கைக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான, கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது. இதில், 83 ஆயிரத்து, 396 இடங்கள் நிரம்பின. இதை தொடர்ந்து, 'ஆர்கிடெக்ட்' என்ற, கட்டட வடிவமைப்பு கலை படிப்புக்கு, மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 50க்கும் மேற்பட்ட, ஆர்கிடெக்ட் கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்பப்பதிவு, ஏற்கனவே முடிந்தது.

இதையடுத்து, கவுன்சிலிங் நடத்தும் தேதி, நேற்று அறிவிக்கப்பட்டது. வரும், 6ம் தேதி, கவுன்சிலிங் துவங்க உள்ளது. முதல் நாளில், சிறப்பு பிரிவினருக்கும், பின், 7 மற்றும் 8ம் தேதிகளில், பொது பிரிவு மாணவர்களுக்கும், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.சென்னை, தரமணியில் உள்ள, மத்திய பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் நடக்கும் கவுன்சிலிங்கில், மாணவர்கள் நேரடியாக பங்கேற்க வேண்டும். மதிப்பெண் விபரங்கள், ஜாதி மற்றும் பள்ளி சான்றிதழ்களை, முன்கூட்டியே தயார் செய்து கொள்ள வேண்டும்.மேலும் விபரங்களை, தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டியின், tneaonline.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024