Saturday, August 3, 2019

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் சான்று பெற வழிகாட்டி விதிகள் வெளியீடு

By DIN | Published on : 03rd August 2019 02:29 AM


பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் சான்று பெறுவதற்கான வழிகாட்டி விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:-

பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் சான்றிதழைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட மாணவர் அல்லது நபரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குக் கீழ் இருக்க வேண்டும். அதே சமயம், 5 ஏக்கர் விவசாய நிலம் அல்லது அதற்கு அதிகமாக இருந்தாலோ, ஆயிரம் சதுர அடிக்கு அதிகமாக அடுக்குமாடியில் வீடு சொந்தமாக வைத்திருந்தாலோ சான்றிதழ் பெற முடியாது.

இந்தச் சான்றிதழை பெற விரும்பும் மாணவர் அல்லது மாணவியின் வயது 18-க்கு குறைவாக இருக்க வேண்டும். இந்தச் சான்றிதழைப் பெற நினைக்கும் குடும்பத்தினர் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தால் அவர்கள் குறித்து கிராம நிர்வாக அலுவலர் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024