Sunday, September 8, 2019

ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதிட்ட சில பிரபலங்களின் 10 உயர் வழக்குகள் இதோ By DIN | Published on : 08th September 2019 01:09 PM

 


1959-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வழக்குரைஞராக தனது பணியை துவங்கிய ராம் ஜெத்மலானி குறிப்பிடத்தக்க பல வழக்குகளில் தனது வாத திறமையினை வெளிப்படுத்தியுள்ளார்.

தனது வாத திறமையால் பிரபலமான ராம் ஜெத்மலானி, வழக்குரைஞர்களில் மத்தியில் சூப்பர் ஸ்டார் வழக்குரைஞர் என பேசப்பட்டவர். அவர் இந்திய பிரபலங்களின் சர்ச்சைக்குரிய வழக்குகளில் ஆஜராகி வாதிட்டவர். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் வழக்குரைஞர்களில் ஒருவர் ராம் ஜெத்மலானி என்பது குறிப்பிடத்தக்கது.





குறிப்பாக, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை வழக்கு, பாஜக மூத்த தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சர் அத்வானிக்கு எதிரான ஹவாலா பணப்பரிவர்த்தனை வழக்கு, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தனது வாத திறமையினை வெளிப்படுத்தியது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்தது.



அதேப்போல், பங்குச் சந்தை மோசடி வழக்கில் ஹர்ஷத் மேத்தா மற்றும் கேதன் பரேக் ஆகியோரை ஆதரித்தது, அப்சல் குருவுக்கு மரண தண்டனையை ஆதரித்தது,



ஜெசிகா லால் கொலை வழக்கில் மனு சர்மாவை பிரதிநிதித்துவப்படுத்தியது, தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்காக ஆஜரானது, 2 ஜி வழக்கில் திமுக எம்பி கனிமொழிக்காக ஆஜரானது.



மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடியது என பல முக்கிய வழக்குகளில் தனது வாத திறமையினை வெளிப்படுத்தியுள்ளார்.



இவைத் தவிர, தற்போதைய ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சிபிஐ வழக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா பண மோசடி வழக்கு,



ஆசாரம் பாபு பாலியல் குற்ற வழக்கு, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தொடர்ந்த அவதூறு வழக்குகளில் ஆஜராகி வாதாடிய தனது வாத திறமையினை வெளிப்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024