Friday, October 4, 2019

தேர்வு குளறுபடி: பல்கலை, 'பல்டி'

Added : அக் 04, 2019 01:03

சென்னை:பி.எட்., தேர்வு மதிப்பெண்கள் திருத்தப்படாததால், மாணவர்கள் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், தமிழகத்தில், 700க்கும் மேற்பட்ட, பி.எட்., கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் படிக்கும், பி.எட்., மாணவர்களுக்கு, ஜூனில் தேர்வுகள் நடந்தன. இதில், முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, கடந்த வாரம், தேர்வு முடிவுகள்வெளியிடப்பட்டன. இதில், தேர்வே எழுதாதவர்கள் கூட தேர்ச்சி பெறும் அளவுக்கு, பெரும் குளறுபடிகள் காணப்பட்டன.
இது குறித்து, பல்கலை நிர்வாகம் அளித்த விளக்கத்தில், 'தொழில்நுட்ப கோளாறு நடந்துள்ளது. அதை சரிசெய்து, சரியான மதிப்பெண் அறிவிக்கப்படும்' என, கூறப்பட்டது. ஆனால், அதை செய்ய முன்வராமல், மாணவர்கள் அனைவரும் கட்டணம் செலுத்தி, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்குமாறு, பல்கலை அறிவித்துள்ளது.அதனால், மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த பிரச்னையை, நீதிமன்றத்திற்கு எடுத்து செல்ல முடிவு செய்து உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024