Friday, October 4, 2019

இன்று முதல் ஆயுதபூஜை, விஜயதசமி கொண்டாட்டம்

Added : அக் 04, 2019 00:43

சென்னை:ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகள், வரும், 7, 8ம் தேதிகளில் கொண்டாடப்படுகின்றன.

அதாவது, வரும், திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில், இந்த பண்டிகைகள் வருவதால், சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய, நான்கு நாட்கள், அரசு விடுமுறையாக கிடைக்க உள்ளது. இதனால், அரசு ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர் என, பலரும், சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அவர்களின் பயணத்துக்கு உதவும் வகையில், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு, தமிழக அரசு தினமும் இயக்கும், 2,225 பஸ்களுடன் சேர்த்து, இன்று முதல் மூன்று நாட்கள், 1,695 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. மேலும், சென்னையிலிருந்து வெளியூர் செல்வோர், கூட்ட நெரிசலில் சிக்காமல் தவிர்க்க, பஸ் நிலையங்கள் பிரிக்கப்பட்டு, அங்கிருந்து சிறப்பு பஸ்கள் புறப்பட உள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024