Friday, October 4, 2019

நகைக்கடை கொள்ளை வழக்கில் திருப்பம்! - திருவாரூரில் நகைகளுடன் சிக்கிய கொள்ளையன்

மு.இராகவன்

சி.ய.ஆனந்தகுமார்

என்.ஜி.மணிகண்டன்

திருச்சி நகைக்கடை கொள்ளை தொடர்பாக திருவாரூர் அருகே ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நகைக்கடை கொள்ளை

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை தமிழகத்தையே அதிரவைத்தது. கல்லூரிக்கு அருகே உள்ள மைதானம் வழியாக வந்த கொள்ளையர்கள் கடையின் சுவரில் துளையிட்டு தரைதளத்தில் இருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

நகைக்கடை கொள்ளை

இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அக்கடையின் உரிமையாளர் கிரண்குமார், 28 கிலோ தங்க நகைகளும் 1.5 கிலோவுக்கும் மேற்பட்ட வைரம், வைடூரியங்கள் உள்ளிட்டவை கொள்ளை போனதாகத் தெரிவித்தார். இந்த நகைகளின் மதிப்பு ரூ.13 கோடி என்றும் அவர் கூறியிருந்தார்.


கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸார் 7 தனிப்படைகளை அமைத்தனர். திருச்சி மட்டுமல்லாது, நாகை, திருவாரூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். சந்தேகத்தின் பேரில் புதுக்கோட்டையில் வடமாநிலத்தைச் சேர்ந்த 6 பேரைக் கைது செய்த போலீஸார் அவர்களை திருச்சி அழைத்துவந்து விசாரித்தனர்.

நகைக்கடை கொள்ளை

இந்தநிலையில், திருவாரூர் விளமல் அருகே வாகன தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டினருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் அட்டைப் பெட்டியுடன் வந்த இருவரிடம் போலீஸார் விசாரித்தனர். போலீஸாரைக் கண்டதும் பின்னால் அமர்ந்திருந்த நபர் வாகனத்தில் இருந்து குதித்து தப்பியோடியிருக்கிறார். இதனால், சந்தேகமடைந்த போலீஸார் வாகனத்தை ஓட்டிவந்தவரை மடக்கிப் பிடித்து அட்டைப் பெட்டியில் என்ன இருக்கிறது என்று விசாரித்திருக்கிறார்கள். அந்த பெட்டியில் புத்தம்புதிய தங்க நகைகள் இருப்பதை அறிந்து போலீஸார், திருச்சி நகைக்கடையில் கொள்ளைபோன நகைகளாக இருக்குமோ என சந்தேகித்திருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்டவர் திருவாரூர் மடப்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும் தப்பியோடியவர் சுரேஷ் என்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கைது செய்யப்பட்ட மணிகண்டனிமிருந்து சுமார் 4.5 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அந்த நகைகளில் இருந்த பார் கோடுகள் திருச்சி நகைக்கடையில் கொள்ளைபோன நகைகளுடனான பார் கோடுடன் ஒத்துப்போவதால் அந்த நகைகள் கொள்ளைபோன நகைகள்தான் என்பதை போலீஸார் உறுதி செய்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நகைக்கடை கொள்ளை

தப்பியோடிய கொள்ளையன் சுரேஷ் என்பவர் திருவாரூர் பகுதியில் பிரபல கொள்ளையன் ஒருவரின் உறவுக்காரர் எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் திருவாரூர் சிக்கியுள்ள குற்றவாளிகளில் ஒருவரான மணிகண்டன் என்பவர் குறித்து தகவலறிந்த திருச்சி மாநகர போலீசார் திருவாரூர் விரைந்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024