Friday, October 4, 2019

திருமணத்திற்கு முன் மருத்துவ பரிசோதனை: வழக்கு

Added : அக் 04, 2019 02:36

மதுரை:திருமணத்திற்கு முன் தம்பதியருக்கு மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்க சட்டம் கொண்வர தாக்கலான வழக்கில், இவ்விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு நகலை மனுதாரர் சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:திருமணத்திற்கு பின் தம்பதியரிடையே கருத்து வேறுபாட்டால் விவாகரத்து அதிகரித்துள்ளது. நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகம் தாக்கலாகின்றன. இதற்கு பாலியல் மற்றும் மருத்துவ ரீதியான குறைபாடுகளே காரணம். இதனால் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். பெண்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகிறது. ஐரோப்பா மற்றும் சில அரபு நாடுகளில் திருமணத்திற்கு முன் தம்பதியருக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


திருமணத்திற்கு முன் தம்பதியருக்கு மருத்துவ பரிசோதனை செய்வதை கட்டாயமாக்க சிறப்புச் சட்டம் கொண்வர தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனைகள் கட்டணச் சலுகை அளிக்க உத்தவிட வேண்டும். இவ்வாறு ரமேஷ் மனு செய்தார்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு,'இவ்விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு நகலை, மனுதாரர் 3 வாரங்களில் சமர்ப்பிக்க வேண்டும்' என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024