Friday, October 4, 2019

போதிய பயணியர் இன்றி விமான சேவை ரத்து

Added : அக் 04, 2019 00:12

சென்னை:மதுரை செல்லும் விமானத்தில், போதிய பயணியர் இல்லாததால், அந்த விமான சேவை, நேற்று ரத்து செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து, நேற்று காலை, 9:40 மணிக்கு, 'ஏர் இந்தியா' விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான, 'அலையன்ஸ் ஏர்' விமானம், மதுரைக்கு புறப்பட தயாராக இருந்தது. மதுரை செல்ல, 23 பயணியர் மட்டுமே இருந்ததால், அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது. 'அலையன்ஸ் ஏர்' விமானத்தில், மதுரை செல்ல முன்பதிவு செய்திருந்த, 23 பயணியரும், நேற்று காலை, 11:30 மணிக்கு, மதுரை செல்லும், 'ஏர் இந்தியா' விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024