Saturday, October 5, 2019

எழும்பூர் ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தம்

Added : அக் 05, 2019 00:05

ஸ்ரீவில்லிபுத்துார் : திருநெல்வேலி மற்றும் செங்கோட்டையிலிருந்து சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் அக்., 10 முதல் டிச.7 வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படுகிறது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 4 வது நடைமேடையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் இந்த இரு ரயில்களும் தாம்பரத்துடன் நிறுத்தப்படும். செங்கோட்டை மற்றும் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் நேரத்தில் மாற்றமில்லை. அட்டவணைப்படி தாம்பரத்தில் எந்த நேரம் புறப்படுமோ அதே நேரத்தில் அங்கிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024