Saturday, October 5, 2019

பாசிட்டிவ் எனர்ஜி' தரும் நவராத்திரி கொலு

Updated : அக் 05, 2019 07:52 | Added : அக் 04, 2019 23:58



'போனவாட்டி உங்க வீட்டு கொலு நல்லா இருந்திச்சு... இந்த வருஷம் என்ன கான்செப்ட் வைக்கப் போறீங்க?''நீங்க மட்டும் என்னவாம்...புதுசா நீங்க வச்சிருந்த அந்த மரப்பாச்சி பொம்மைங்க செமயா இருந்திச்சு'கோவிலில் நான்கைந்து பெண்கள் சந்தித்துக் கொண்டால், இப்படித்தான் பரஸ்பரம் விசாரித்துக் கொள்கின்றனர்.புரட்டாசி மாதம் நவராத்திரி விழாவில், கொலு வைத்தல் என்பது பாரம்பரிய பக்தி நிகழ்ச்சியாகும்.

துர்காதேவி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரையும், மேடையில் வைத்து அலங்கரித்து வழிபடுவதுடன், நல்லோரின் நட்பை ஏற்று போற்றுதலும், பக்தியை பெருகச் செய்வதும், கொலுவின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.தேவியரின் மந்திரங்களை தினமும் சொல்லி பூஜை செய்வதுடன், விரதமிருந்து வழிபடுவதால் கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடுவது, குடும்பத்தில் நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து, அன்பும் ஒற்றுமையும் ஓங்குவது, இல்லத்தில் செல்வம் சேருவது, பருவநிலை மாறுதல்களால் அதிகரிக்கும் கொசுக்களை வீட்டுக்குள் வரவிடாமல் செய்து, நோய்களின் தாக்குதல்களில் இருந்து விடுபடுவது... என எண்ணற்ற நன்மைகள் கொலுவின் பிரதிபலிப்பாக உள்ளன.

சிலர் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு புதிய 'கான்செப்டை', அடிப்படையாக வைத்து கொலு வைக்கின்றனர். கோவையில் இந்தாண்டு கொலு அமைத்துள்ள பலரது வீடுகளில், நடுநாயகமாக படுத்திருக்கிறார், அத்திவரதர்.கடந்த 45 ஆண்டுகளாக கொலு வைத்து வரும், சிவானந்தா காலனியை சேர்ந்த ரமா வெங்கட், ''மகாளய அமாவாசையில் கலசம் வைத்து ஆரம்பிக்கும் கொலுவானது, விஜயதசமியன்று நிறைவடைகிறது.

10 நாட்கள் நடக்கும் கொலு நிகழ்ச்சியில், சிவப்பு சந்தன மரத்தால் உருவாக்கப்பட்ட மரப்பாச்சி பொம்மை முக்கியம். தினமும் காலை பூஜைகள் செய்வது, தேவியருக்கு உகந்த துதிகள் படிப்பது என, பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.அம்பாள், மகிசாசுரனை அழித்த விஜயதசமியன்று வடை, பாயசம் வைத்து கொலு நிறைவடைகிறது. கொலுவின் போது, வீடு முழுவதும் 'பாசிட்டிவ் எனர்ஜி' இருக்கும். அனைவரிடமும் சந்தோஷம், குறைகளை மறப்பது, ஆன்மிக சிந்தனை மலர்வது என ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றன,'' என்கிறார்.
கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடுவது, குடும்பத்தில் நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து, அன்பும் ஒற்றுமையும் ஓங்குவது, இல்லத்தில் செல்வம் சேருவது, பருவநிலை மாறுதல்களால் அதிகரிக்கும் கொசுக்களை வீட்டுக்குளு் வரவிடாமல் செய்து, நோய்களின் தாக்குதல்களில் இருந்து விடுபடுவது... என எண்ணற்ற நன்மைகள் கொலுவின் பிரதிபலிப்பாக உள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024