Sunday, October 6, 2019

பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை

Added : அக் 06, 2019 00:38

சென்னை: 'சாலையில் பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, போக்குவரத்து காவல் துறை எச்சரித்து உள்ளது.

சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:ஆயுத பூஜையை முன்னிட்டு, திருஷ்டி பூசணிக்காய் உடைப்பதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து, விபத்துகள் ஏற்படுகின்றன.எனவே, பொதுமக்கள்சாலைகளில் பூசணிக்காயை உடைக்க வேண்டாம். பாதுகாப்பான முறையில், தங்களது பூஜைகளை செய்ய வேண்டும்.மேலும், சாலையில் பூசணிக்காய் உடைத்து விபத்து ஏற்பட்டால், அதற்கு காரணமானோர் மீது, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024