Monday, March 2, 2020

'நிர்பயா' குற்றவாளிகள் மனு மீது இன்று விசாரணை

Added : மார் 01, 2020 23:51

புதுடில்லி: துாக்கு தண்டனையைஎதிர்த்து,'நிர்பயா' பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள, அக் ஷய் குமார் மற்றும் பவன் குப்தா தாக்கல் செய்துள்ள மனுக்கள் இன்று விசாரிக்கப்பட உள்ளது.

டில்லியில், 2012ல், மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.இந்தவழக்கில், முகேஷ் குமார் சிங், 32, பவன் குப்தா, 25, வினய் குமார் சர்மா, 26, அக் ஷய் குமார், 31, ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.தண்டனையை நிறைவேற்ற, ஏற்கனவே இரண்டு முறை நாள் குறிக்கப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டன.

இவர்களுக்கான தண்டனையை, நாளை காலை, 6:00 மணிக்கு நிறைவேற்ற, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பவன் குப்தா மற்றும் அக் ஷய் குமார் சார்பில், டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் புதிய மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.'துாக்கு தண்டனையைஎதிர்த்து, மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அது நிலுவையில்உள்ளதால், தண்டனையைநிறைவேற்றக் கூடாது' என, பவன் குப்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

'தண்டனையை குறைக்கும்படி, ஜனாதிபதிக்கு புதிய கருணை மனு அனுப்பப்பட்டுள்ளது. அதனால்,தண்டனையை நிறைவேற்றக் கூடாது' என, அக் ஷய் குமார் சார்பில் கூறப்பட்டுள்ளது.இவற்றை,டில்லி நீதிமன்றம்,இன்று விசாரிக்க உள்ளது.

இந்த நிலையில், பவன் குமார் தாக்கல் செய்துள்ள மறுசீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024