அண்ணா பல்கலையில் சிறப்பு நியமனங்கள்: மாதம் ரூ.1.5 லட்சம் வரை ஊதியம்
Added : மார் 01, 2020 22:34
சென்னை: அண்ணா பல்கலையில் சிறப்பு வகை பேராசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான ஊதியம் மற்றும் கல்வித்தகுதி குறித்து, 'சிண்டிகேட்' கூட்டத்தில், புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன் விபரம்:தொழில் துறையில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில், சிறப்பாக செயல்பட்டவர்களை, சிறப்பு பேராசிரியரான, 'விசிட்டிங் புரொபசர்' என்ற பதவியில் நியமிக்கலாம்.
ஆராய்ச்சிமதிப்புமிகு பேராசிரியர் என்ற, 'எமினென்ஸ் புரொபசர்' பதவிக்கு நியமிக்கப்படுவோர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பிரபலமானவர்களாகவும், ஆராய்ச்சி விருதுகளை பெற்றவர்களாக இருக்கவும் வேண்டும். சிறப்புமிகு, 'ஹானரரி புரொபசர்' என்ற பதவிக்கு, பிரபலமான விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களை நியமிக்கலாம்.இந்த பதவிகளுக்கு, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்சி., ஆகிய, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றி, ஓய்வுபெற்ற பேராசிரியர்களை தேர்வு செய்யலாம். மொத்தம் உள்ள பேராசிரியர்கள் பணியிடங்களில், 10 சதவீதத்தை, இந்த வகை பேராசிரியர்களை நியமிக்கலாம் என, விதிகள் வகுக்கப்பட்டுஉள்ளன. சிறப்பு நியமன பேராசிரியர்களுக்கு, 60 ஆயிரம் ரூபாய் முதல், 1.5 லட்சம் ரூபாய் வரை மதிப்பூதியம் அல்லது தொகுப்பூதியம் வழங்கப்படும்.
அனுமதிசிறப்புமிகு பேராசிரியர் என்ற, ஹானரரி பேராசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது; ஆராய்ச்சி மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு அவர்கள் பாடம் எடுப்பர்.இந்த சிறப்பு பேராசிரியர் நியமனத்துக்கான விண்ணப்பங்களை, கல்லுாரிகளின் முதல்வர்கள், பல்கலையின் துணைவேந்தருக்கு வழங்க வேண்டும். விண்ணப்பத்தில் உள்ள தகவல்களை, துணைவேந்தரே நேரடியாக பரிசீலித்து, விண்ணப்பித்தவருக்கு, அதிகபட்சம், ஓராண்டு வரை பணியில் ஈடுபட அனுமதிக்கலாம் என, விதிகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment