Tuesday, March 17, 2020

அண்ணா பல்கலை தேர்வு அறிவிப்பு

Added : மார் 17, 2020 00:39

சென்னை;அண்ணா பல்கலையின், செமஸ்டர் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை மற்றும் அதன் சென்னை வளாகத்தில் உள்ள கல்லுாரிகளுக்கு, பல்கலையின் கூடுதல் தேர்வு துறை இயக்குனரகம் சார்பாக, செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
மற்ற இணைப்பு கல்லுாரிகளுக்கும், உறுப்பு கல்லுாரிகளுக்கும், அண்ணா பல்கலையின், தேர்வு துறை இயக்குனரகம் சார்பில், செமஸ்டர் தேர்வு நடத்தப்படுகிறது. தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லுாரிகளுக்கு, அந்தந்த கல்லுாரிகளே, தேர்வை நடத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும், முதலாம் பருவ தேர்வு, நவம்பர், டிசம்பர் மாதங்களிலும், இரண்டாவது பருவ தேர்வு, ஏப்ரல், மே மாதங்களிலும் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், இந்த கல்வி ஆண்டுக்கான, இரண்டாம் பருவ தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில், அனைத்து பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான, இரண்டாம் பருவ தேர்வு, ஏப்., 18ல் துவங்கி, மே, 21 வரை நடத்தப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. பாடத்திட்டம் மற்றும் மண்டல கல்லுாரிகளுக்கான தேர்வு விபரங்கள், அண்ணா பல்கலையின், www.annauniv.edu என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 7.4.2025