Monday, April 20, 2020

40 ஆயிரத்தைத் தாண்டியது பலி எண்ணிக்கை: அச்சத்தில் அமெரிக்கர்கள்

By DIN | Published on : 20th April 2020 12:26 PM 

அமெரிக்காவில் கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் இதுவரை பலி எண்ணிக்கை 40 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக அந்நாட்டு சுகாராத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் 1,500 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் அங்குப் பாதித்தோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அமெரிக்க மக்கள் பேரச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 

திங்கள்கிழமை நிலவரப்படி கரோனாவின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் அமெரிக்காவில் இதுவரை 7 லட்சத்து 64,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 40,565 பேரை இது பலி வாங்கியுள்ளது. அதேசமயம் 71,012 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

கரோனா நோய்த் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ள 2,073 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கரோனா உலகம் முழுவதும் 210 நாடுகளுக்குப் பரவியுள்ளது. உலகளவில் இதுவரை 2,407,699 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,65,093 பேரை இந்த நோய்த் தொற்று பலி வாங்கியுள்ளது. 



No comments:

Post a Comment

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு 12.04.2025 மதுரை: பழிவாங்கும் ...