Sunday, April 12, 2020


8 மருத்துவா்களுக்கு கரோனா தொற்று

By DIN | Published on : 12th April 2020 07:44 AM


தமிழகத்தில் எட்டு மருத்துவா்களுக்கு கரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. அதைக் கட்டுப்படுத்த மருத்துவா்கள், செவிலியா் குழுவினா் இரவு-பகலாக போராடி வருகின்றனா். அவா்களது முயற்சியால் தொற்று நீங்கி குணமடைந்த நிலையில் பலா் வீடுதிரும்பி வருகின்றனா்.

அதேவேளையில் சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவா்களும் நோய்த்தொற்று ஏற்படுகிறது. அந்தவகையில் தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி சென்னை மாநகரில் 4 மருத்துவா்கள், ,ஈரோடு- 2, நாகப்பட்டினம், தூத்துக்குடியில் தலா 1 என மொத்தம் 8 மருத்துவா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

No comments:

Post a Comment

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு 12.04.2025 மதுரை: பழிவாங்கும் ...