Sunday, April 12, 2020


தங்கள் மக்களைத் திரும்ப அழைக்காத நாடுகளுக்கு எதிராக விசா தடை: டிரம்ப்
By DIN | Published on : 11th April 2020 03:26 PM

அமெரிக்காவிலுள்ள தங்கள் நாட்டுக் குடிமக்களைத் திரும்ப அழைத்துக்கொள்ள மறுக்கும் நாடுகளின் மக்களுக்கு இனி விசா வழங்குவதில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

விசா தடைகள் தொடர்பாக டிசம்பர் 31 வரை நடைமுறையிலுள்ள வகையிலான அறிவிப்பை வெளியிட்டுள்ள டிரம்ப், தங்கள் குடிமக்களைத் திரும்ப அழைக்க மறுத்தாலோ அல்லது காரணமின்றித் தாமதித்தாலோ அந்த நாடுகள், அமெரிக்காவுக்குப் பெரும் சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தியதாகக் கருதப்படும் எனக் குறிப்பிட்டுள்ளா்.

இந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் பேசிய டிரம்ப், அமெரிக்க சட்டங்களை மீறித் தங்கியுள்ள வெளிநாட்டவர்களைத் திறம்பட வெளியேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மெக்சிகோ போன்ற அருகிலுள்ள நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் சட்டவிரோதமாகக் குடியேறி அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கின்றனர். எவ்வித ஆவணங்களும் இல்லாத இவர்கள் பெரும்பாலும் அன்றாடக் கூலி வேலைகளையும் கட்டுமான வேலைகளையும் செய்கின்றனர்.

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...