Saturday, April 4, 2020

தமிழகத்தில் நாளை இரவு 9.00 மணி முதல் 9.09 மணி வரை மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள்: தமிழ்நாடு மின்சார வாரியம்

By DIN | Published on : 04th April 2020 11:07 AM

தமிழகத்தில் நாளை இரவு 9.00 மணி முதல் 9.09 மணி வரை மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தொடா்ந்து தீவிரமடைந்து வருகிறது. அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, வரும் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. இந்தச் சூழலில் பிரதமா் மோடி நாட்டு மக்களுக்கு காணொலி வாயிலாக சில அறிவுறுத்தல்களை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

அதில் கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) எதிராக 130 கோடி இந்தியா்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதை வெளிப்படுத்தும் நோக்கில், மக்கள் அனைவரும் வரும் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்குத் தொடங்கி 9 நிமிடங்களுக்கு வீட்டில் விளக்குகளை ஏற்ற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தாா். 

இந்த நிலையில் தமிழகத்தில் நாளை இரவு 9.00 மணி முதல் 9.09 மணி வரை மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் என்றும் அனைத்து மின்சாதனங்களையும் அணைத்து விட்டு ஒரே நேரத்தில் ஆன் செய்தால் மின்சார பிரச்னை ஏற்படும் என்றும் அதில் விளக்கமளித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024