ரேஷன் கடைகள் இன்று விடுமுறை
Added : ஏப் 09, 2020 23:29
இன்று விடுமுறை அறிவிப்புமாதத்தின் முதலாவது, இரண்டாவது வெள்ளிக்கிழமை, ரேஷன் கடைகளுக்கு விடுமுறை. அதற்கு மாற்றாக, அந்த வார ஞாயிற்றுக் கிழமைகளில், கடைகள் செயல்படும். தமிழக அரசு, 'கொரோனா' தடுப்பு கால நிவாரணமாக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாயுடன், ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குகிறது.
இந்த பணி, இம்மாதம், 2ம் தேதி துவங்கியது. மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையான, 3ம் தேதி, ரேஷன் கடைகளுக்கு விடுமுறையாக இருந்தாலும், அவை வழக்கம் போல செயல்பட்டன. இதனால், இன்றும், ரேஷன் கடைகள் செயல்படுமா என்ற சந்தேகம், பலரிடமும் எழுந்தது. கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் வழங்கும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், இன்று கடைகளுக்கு, வழக்கம் போல விடுமுறை விடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment