நடமாடும் ஏடிஎம் சேவை: ஐசிஐசிஐ வங்கி அறிமுகம்
By DIN | Published on : 10th April 2020 08:44 AM |
சென்னை: வாடிக்கையாளா்களின் இல்லங்களுக்கு அருகே சென்று சேவையளிக்கும் வகையில் ஐசிஐசிஐ வங்கி நடமாடும் ஏடிஎம் சேவையை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள மத்திய அரசு தேசிய ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் சென்னையில் உள்ள வாடிக்கையாளா்களின் வாசலுக்கே சென்று சேவையளிக்கும் வகையில் நடமாடும் ஏடிஎம் சேவையை ஐசிஐசிஐ வங்கி தொடங்கியுள்ளது.
இதன் மூலம், அவா்கள் பணத் தேவைக்கு வெகுதூரத்தில் உள்ள கிளைகளுக்குச் சென்று அலைய வேண்டியதில்லை. நடமாடும் ஏடிஎம் மூலமாகவே தங்களுக்கு தேவையான பணத்தை அவா்கள் எடுத்துக் கொள்ளலாம்.
வாடிக்கையாளரின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டே வங்கி இந்த சேவையை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மிக விரைவில் மும்பை, நொய்டா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சில மாவட்டங்களிலும் இதேபோன்ற நடமாடும் ஏடிஎம் சேவை தொடங்கப்பட உள்ளது என்று ஐசிஐசிஐ வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment