Saturday, April 25, 2020

சம்பளமின்றி பணியாற்றும் டாக்டர்கள் அரசு உடனடி நடவடிக்கை எடுக்குமா?

Added : ஏப் 24, 2020 23:22

கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரியில், முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள அரசு டாக்டர்கள், 100 பேருக்கு, இரண்டு மற்றும் ஓராண்டாக சம்பளம் வழங்கப்படவில்லை.

அரசு மருத்துவர்களாக பணியில் இருப்பவர்கள், முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர, குறிப் பிட்ட ஒதுக்கீடு உண்டு. நீட் தேர்வு எழுதி தான், முதுநிலை படிப்பில் சேர முடியும். இவர்கள், படித்துக் கொண்டே, அரசு மருத்துவமனைகளிலும் பணியாற்ற வேண்டும். தொடர்ந்து அரசு பணியில் இருப்பதால், அதற்கான சம்பளத்தை, அரசு வழங்க வேண்டும்.

ஆனால், கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் மற்றும் ஓராண்டுக்கு முன் சேர்ந்த அரசு மருத்துவர்களுக்கு, இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை.தனியார் கட்டுப்பாட்டில் இருந்த சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரியை, அரசு ஏற்று, பல ஆண்டுகள் ஆகி விட்டது. அரசின் கட்டுப்பாட்டில் தான், இந்தக் கல்லுாரி உள்ளது. இரண்டு ஆண்டுகளில், முதுநிலை படிப்பில், அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்கள், நுாற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லுாரிகளில், முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்களுக்கு, 2017 -18ம் ஆண்டு முதல், சம்பளம் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்து, 2020 பிப்ரவரியில், சுகாதார துறை செயலர், பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.இரண்டாம் ஆண்டு முடிப்பவர்களுக்கு, 24 மாதங்களுக்கான சம்பளமும், ஓராண்டு முடிப்ப வர்களுக்கு, 12 மாத சம்பளமும் வழங்கப்பட வேண்டும்.

பிப்ரவரியில் அரசாணை பிறப்பித்தும், சம்பளம் வழங்கப்படவில்லை.சம்பளமே பெறாமல், சொந்த செலவில் எவ்வளவு நாட்களை கழிக்க முடியும் என அரசு மருத்துவர்கள் வேதனைப் படுகின்றனர். தற்போது, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கை களிலும், இந்த மருத்துவர்கள் உள்ளனர்.வைரஸ் பரவலை தடுக்க, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிலையில், களத்தில் நிற்கும் அரசு டாக்டர்களுக்கும் மாத சம்பளம் மற்றும் சம்பள பாக்கி தொகையை அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024