Saturday, November 21, 2020

மருத்துவ படிப்பு கட்டணம் அரசு பள்ளி மாணவி தவிப்பு

மருத்துவ படிப்பு கட்டணம் அரசு பள்ளி மாணவி தவிப்பு

Added : நவ 21, 2020 02:15

அலங்காநல்லுார்:மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து மருத்துவ படிப்புக்கு 'சீட்' கிடைத்தும் கல்லுாரி கட்டணம் செலுத்த முடியாமல் மாணவி தீபிகா 17, தவிக்கிறார்.

பெற்றோர் ரவிச்சந்திரன், காமாட்சி கூலி தொழிலாளர்கள்.தீபிகா கூறியதாவது: நான் அரசு பள்ளியில் படித்து 'நீட்' தேர்வில் தகுதி பெற்றேன். என் பெற்றோர் செங்கல் காளவாசலில் பணிபுரிகிறார்கள். எனக்கு கவுன்சிலிங் கட்டணத்தை பள்ளி ஆசிரியர்கள் செலுத்தினர்.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரியில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கல்லுாரி மற்றும் விடுதி கட்டணம் ரூ.6.50 லட்சத்தை 15 நாட்களில் செலுத்த வேண்டும் என்கின்றனர். என் டாக்டர் கனவு நனவாக உதவி எதிர்பார்க்கிறேன் என்றார். மாணவிக்கு உதவ 99766 33474.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024