சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலை தெரியாமல் பேசிக் கொண்டிருக்கும் கமல்: அமைச்சர் சாடல்
சென்னை: அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலை தெரியாமல் கமல் பேசிக் கொண்டிருப்பதாக, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கருத்து தெரிவித்துள்ளார்.
பேராசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா மீது தமிழக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையத்தை நியமித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சனிக்கிழமையன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட விடியோ ஒன்றில், 'அமைச்சர் அன்பழகன் மீதான லஞ்ச குற்றச்சாட்டை தமிழக அரசு விசாரித்ததா என்று கேள்வி எழுப்பியதோடு, நேர்மைக்காக ஒருவர் வேட்டையாடப்பட்டால் அதைப் பார்த்துக் கொண்டு நான் சும்மா இருக்க மாட்டேன்' என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலை தெரியாமல் கமல் பேசிக் கொண்டிருப்பதாக, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் கே.பி.அன்பழகன் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், 'சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலை தெரியாமல் கமல் பேசிக் கொண்டிருக்கிறார். கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்கப் போகிறோம் என்பதற்காக எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறார்' என்று தெரிவித்துள்ளார்.
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamani
No comments:
Post a Comment