நீடிக்குமா வாட்ஸ் ஆப் புதிய விதிமுறைகளால் சிக்கல்
Added : ஜன 07, 2021 02:09
புதுடில்லி:வாட்ஸ் ஆப் செயலி யை பயன்படுத்துவதற்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட உள்ளன. அவற்றை ஏற்கும் அலைபேசிகளில் மட்டுமே வாட்ஸ் ஆப் இயங்கும். இது பிப். 8 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
வாட்ஸ் ஆப் செயலியில் யார் வேண்டுமானாலும், என்ன தகவலை வேண்டுமானாலும் பதிவிட முடியும். பகிர்ந்து கொள்ளவும் முடியும். இதனால் பல்வேறு சிக்கல்களை வாட்ஸ் ஆப் எதிர்கொண்டது. இதையடுத்து பதிவுகளை பகிர்வதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஒரு பதிவை அதிக பட்சம் 5 பேருக்கு மட்டுமே பகிர முடியும், அதிகம் பகிரப்பட்ட பதிவுகளை ஒரு முறை மட்டுமே மீண்டும் பதிவிட முடியும் உள்ளிட்ட பல மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டன. இருந்தும் பிரச்னைகள் குறையவில்லை.
இதையடுத்து முக்கிய விதிமுறைகளை வாட்ஸ் ஆப் அமல்படுத்த உள்ளது. பகிரப்படும் தகவலின் உண்மைத்தன்மைக்கு பகிர்பவரே பொறுப்பு உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளன. அந்த அம்சத்துடன் கூடிய விதிமுறையை ஏற்றால் மட்டுமே அந்த அலைபேசியில் செயலி தொடரும். இல்லையெனில் செயலி அழிந்துவிடும். இந்த நடைமுறையை பிப்.8 முதல் அமல்படுத்த இருப்பதாக வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment