Thursday, February 18, 2021

பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது


இந்தியா

பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது

Updated : பிப் 18, 2021 04:07

பொதுத் துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்., ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதன்படி நேற்று, பெட்ரோல், டீசல் விலை, லிட்டருக்கு, 25 காசு உயர்த்தப்பட்டது. இதையடுத்து, ராஜஸ்தானில், முதன் முறையாக, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 100.13 ரூபாயாக உயர்ந்தது. நாட்டிலேயே, ராஜஸ்தானில் தான், பெட்ரோலியப் பொருட்களுக்கு மதிப்பு கூட்டு வரி மிக அதிகமாக உள்ளது. அதன் காரணமாகவே, இங்கு பெட்ரோல், டீசல் விலையும் அதிகமாக உள்ளது.

ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில், அதிக, 'மைலேஜ்' தரக்கூடிய உயர் வகை பெட்ரோல் விலை, ஏற்கனவே, 100 ரூபாயை தாண்டி விட்டது. எனினும், ராஜஸ்தானில் தான், சாதாரண வகை பெட்ரோல் விலை, முதன் முறையாக, 100 ரூபாயை தாண்டியுள்ளது. மத்திய, மாநில அரசுகள், ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில், 60 சதவீதத்தை வரிகள் வாயிலாக வசூலிக்கின்றன;

இது, டீசலுக்கு, 54 சதவீதமாக உள்ளது.மத்திய அரசு, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 32.90 ரூபாய், டீசலுக்கு, 31.80 ரூபாய் கலால் வரி வசூலிக்கிறது. இதனுடன், மாநில அரசுகள் விதிக்கும் வரி காரணமாக, பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024