Saturday, February 13, 2021

ஆதார் பதிவு, திருத்தம் செய்ய அஞ்சல் துறை சிறப்பு முகாம்

ஆதார் பதிவு, திருத்தம் செய்ய அஞ்சல் துறை சிறப்பு முகாம்

Added : பிப் 13, 2021 00:02

சென்னை: அஞ்சல் துறையில் ஆதார் பதிவு, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம், இன்று நடக்கிறது.

இந்திய அஞ்சல் துறையில் ஆதார் பதிவு, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம், இன்று காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை அஞ்சலகங்களில் நடக்கிறது. பொது இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த முகாமில் புதிதாக ஆதார் பதிவு, முகவரி, புகைப்படம், பெயர், பாலினம், பிறந்த தேதி, மொபைல் போன் எண், மின்னஞ்சல் திருத்தம், 5 மற்றும் 15வது வயதில் பயோ மெட்ரிக் புதுப்பித்தல் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.

ஆதார் திருத்தங்களுக்காக, 50 ரூபாய் சேவை கட்டணமாக பெறப்படும். புதிதாக ஆதார் பதிவு செய்யும் சேவைக்கு கட்டணம் இல்லை.இவ்வாறு அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024