Monday, March 15, 2021

திருவாரூரில் இன்று ஸ்டாலின் பிரசாரம்

திருவாரூரில் இன்று ஸ்டாலின் பிரசாரம்

Added : மார் 14, 2021 23:56

சென்னை; தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இன்று தேர்தல் பிரசாரத்தை, திருவாரூரில் துவக்குகிறார்.

தி.மு.க., தலைமை அறிக்கை: தி.மு.க., மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, கட்சி தலைவர் ஸ்டாலின், இன்று, கருணாநிதி பிறந்த மண்ணான, திருவாரூர் தெற்கு ரத வீதியில் பிரசார பயணத்தை துவக்குகிறார். திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம் ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்கிறார்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'கூர்மையான போர்க்கருவி' தி.மு.க., தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம்: தி.மு.க., தேர்தல் அறிக்கை என்பது, பொதுமக்களின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்ட கதாநாயகன்; தொண்டர்களின் கையில் ஒரு பெரும் போர்க்கருவி. ஜனநாயக அறப்போர்க்களத்தில், கூர்மையான அந்தப் போர்க்கருவியை முழுவீச்சோடு பயன்படுத்த வேண்டும் என, கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து, கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள வற்றை தெளிவு படுத்துங்கள். இவை, வெறும் வாக்குறுதிகள் அல்ல; வருங்கால தமிழகத்தின் வளர்ச்சிக்கான வரைவு ஆவணம்; ஒப்பந்தப் பத்திரம் என்பதை எடுத்துக் கூறி, 234 தொகுதிகளிலும் முழுமையாக வெல்வோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024