ஓட்டுச்சாவடியில் 'வெப் கேமரா' பொருத்தும் பணி துவக்கம்
Updated : மார் 28, 2021 01:40 | Added : மார் 28, 2021 01:39
சென்னை: தமிழகத்தில், 44 ஆயிரத்து, 758 ஓட்டுச்சாவடிகளில், 'வெப் கேமரா' பொருத்தும் பணி, நேற்று துவங்கியது.தமிழகத்தில், ஏப்., 6ல்சட்டசபை பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. கொரோனா நோய் பரவலைதடுக்கும் விதமாக, இம்முறை கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 88 ஆயிரத்து, 937 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், குறைந்தது, 50 சதவீதம் ஓட்டுச்சாவடிகளில், வெப் கேமரா பொருத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.அந்த வகையில், தமிழகத்தில், 44 ஆயிரத்து, 758 ஓட்டுச்சாவடிகளில், வெப் கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இணையதள இணைப்பு வசதி கிடைக்கும் ஓட்டுச்சாவடிகளைக் கண்டறிந்து, அவற்றில், வெப் கேமரா பொருத்தும் பணி, நேற்று துவங்கியது.இந்த ஓட்டுச்சாவடிகளின் ஓட்டுப்பதிவு, முழுமையாக, இணையதளத்தில் ஒளிபரப்பப்படும். இதை, அதிகாரிகளால் நேரடியாக கவனிக்க முடியும்.வெப் கேமரா பொருத்தப்படாத ஓட்டுச்சாவடிகளின் ஓட்டுப்பதிவு, வீடியோ கேமராவில் பதிவு செய்யப்படும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலெக்டர்களுடன் சாஹு ஆலோசனைசட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, நேற்று, மாவட்ட கலெக்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, ஆலோசனை நடத்தினார். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன், இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆனந்த், மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வரும், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, ஆலோசனை நடத்தினார்.
No comments:
Post a Comment