Thursday, March 25, 2021

தமிழ் பல்கலை துணைவேந்தர் நியமனம் செல்லும்: ஐகோர்ட்

தமிழ் பல்கலை துணைவேந்தர் நியமனம் செல்லும்: ஐகோர்ட்

Added : மார் 23, 2021 23:40

மதுரை:தஞ்சாவூர் தமிழ் பல்கலை துணைவேந்தர்பாலசுப்பிரமணியன் நியமனம் செல்லாது என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது.

தஞ்சாவூர் பேராசிரியர் ரவீந்திரன், ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில், 'ஆந்திராவின் திராவிட பல்கலையில் பணிபுரிந்த பாலசுப்பிரமணியனை, தஞ்சாவூர் தமிழ் பல்கலை துணைவேந்தராக நியமித்து, 2018 அக்., 5ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.'அவர், யு.ஜி.சி., விதிகள்படி துணைவேந்தருக்குரிய போதிய தகுதிகளை பெற்றிருக்கவில்லை. விதிமீறல் நடந்துள்ளது. பாலசுப்பிரமணியனை துணைவேந்தராக நியமித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என கோரியிருந்தார்.

கடந்த, 2019 டிச., 20ல் தனி நீதிபதி, 'துணைவேந்தராக பாலசுப்பிரமணியனை நியமித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' என்றார். இதை எதிர்த்து, பாலசுப்பிரமணியன் மற்றும் பல்கலை தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு, பிறப்பித்த உத்தரவு:

விண்ணப்பங்களை பரிசீலித்து, 10 பேரை, தேடுதல் குழு, தேர்வு செய்துள்ளது. அவர்களில், மூவரை இறுதி செய்து, அரசுக்கு தேடுதல் குழு பரிந்துரைத்துள்ளது. அப்போது, ரவீந்திரன் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. தேடுதல் குழு மீது தவறு காண முடியாது. பாலசுப்பிரமணியனின் மேல்முறையீட்டு மனுவை அனுமதித்து, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்கிறோம்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024