Thursday, March 25, 2021

ஏப். 26 முதல் அந்தியோதயா ரயில் மீண்டும் இயக்கம்

ஏப். 26 முதல் அந்தியோதயா ரயில் மீண்டும் இயக்கம்


25.03.2021
மதுரை - டெல்லி நிஜாமுதீன், மதுரை - சென்னை, தாம்பரம் - நாகர்கோவில் (அந்தியோதயா), புதுச்சேரி - கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்கள் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

மதுரை - டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் வாரம் இருமுறை சேவை அதிவிரைவு சிறப்புரயில் ஏப்ரல் 20 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மதுரையிலிருந்து ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 6.35 மணிக்கு நிஜாமுதீன் சென்று சேரும். மறுமார்க்கத்தில் டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் - மதுரை வாரம் இருமுறை சேவை அதிவிரைவு சிறப்பு ரயில் ஏப்ரல் 22 முதல் மறு அறிவிப்பு வரும் வரை செவ்வாய் மற்றும்வியாழக் கிழமைகளில் அதிகாலை 5.20 மணிக்கு புறப்பட்டு வியாழன் மற்றும் சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மதுரை வந்தடைகிறது.

மதுரை - சென்னை எழும்பூர் வாரமிருமுறை அதிவிரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து ஏப்ரல் 17 முதல் மறு அறிவிப்பு வரும்வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 6.55 மணிக்கு சென்னை சென்று சேரும். மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர் - மதுரை வாரமிருமுறை அதிவிரைவு சிறப்பு ரயில் சென்னையிலிருந்து ஏப்ரல் 18 முதல் மறு அறிவிப்பு வரும் வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.10 மணிக்கு மதுரை சென்று சேரும். இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

அந்தியோதயா

தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா தினசரி சேவை சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து ஏப்ரல் 26 முதல் மறு அறிவிப்புவரும் வரை இரவு 11 மணிக்கு புறப்பட்டுமறுநாள் மதியம் 2.20 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறுமார்க்கத்தில் நாகர்கோயில் - தாம்பரம் அந்தியோதயா தினசரி சேவை சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 27 முதல்மறு அறிவிப்பு வரும் வரை மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை7.25 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி,திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

புதுச்சேரி - கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 11 முதல் மறு அறிவிப்புவரும் வரை புதுச்சேரியிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். மறுமார்க் கத்தில் கன்னியாகுமரி - புதுச்சேரி வாராந்திரசிறப்பு ரயில் ஏப்ரல் 12 முதல் மறு அறிவிப்பு வரும் வரை கன்னியாகுமரியில் இருந்து திங்கட்கிழமைகளில் மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு புதுச்சேரி சென்று சேரும்.

இந்த சிறப்பு ரயில்கள் விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். புதுச்சேரி - கன்னியாகுமரி சிறப்பு ரயில் வள்ளியூர் ரயில் நிலையத்திலும், கன்னியாகுமரி - புதுச்சேரி சிறப்பு ரயில் சீர்காழி, கடலூர் துறைமுகம், திருப்பாதிரிப்புலியூர் ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...