ஓட்டுச்சாவடிக்கு 13 உபகரணம்
Added : மார் 25, 2021 02:13
சென்னை:கொரோனா பரவலை தடுக்கும் வகையில், சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நாளன்று பயன்படுத்த, ஓட்டுச் சாவடிகளுக்கு, 13 வகையான பாதுகாப்பு உபகரணங்களை, தேர்தல் கமிஷன் வழங்க உள்ளது.
சட்டசபை தேர்தல், ஏப்., 6ல் நடைபெற உள்ளது. இதையொட்டி, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன், அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களும் அமைக்கப் பட்டு வருகின்றன. ஓட்டுப்பதிவு நாளன்று, கொரோனா பரவலை தடுக்கும் வகையில், வெப்ப நிலையை பரிசோதிக்கும், தெர்மல் ஸ்கேனர்; முழு உடற்கவசம், மூன்றடுக்கு முக கவசம், இரண்டு வகையான கையுறை, மூன்று வகையான சானிடைசர் உள்ளிட்ட, 13 வகையான பொருட்கள், ஓட்டுச்சாவடிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஒவ்வொரு வாக்காளரும், வெப்பநிலை பரிசோதனைக்கு ஆட்படுவதுடன், சானிடைசரில் கையை சுத்தம் செய்த பின், ஓட்டளிக்க அனுமதிக்கப்படுவர். முககவசம் அணியாமல் வரும் வாக்காளர்களுக்கு, ஓட்டுச்சாவடியில் முககவசம் அணிவிக்கப்படும்.ஓட்டுச்சாவடி அலுவலர்கள், பூத் ஏஜென்டுகளுக்கு கையுறை, முக பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படும். இதனால், ஓட்டுச் சாவடிகளில், கொரோனா பரவலை தடுக்க முடியும். வாக்காளர்களும், பாதுகாப்புடன் ஓட்டளிக்கலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment