25.03.2021
அபாயப் பகுதிகளாக மாறும் தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம்
சென்னையில் கரோனா நோயாளிகள் அதிகமிருக்கும் மண்டலங்களான தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம் ஆகியவை கரோனா அபாயப் பகுதிகளாக மாறி வருகின்றன.
இவற்றுக்கு சற்றும் சளைத்ததல்ல என்ற வகையில் இராயபுரம், திருவிகநகர், அம்பத்தூர் மண்டலங்களிலும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாகக் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,43,287 ஆக உள்ளது. இவர்களில் 2,35,325 பேர் குணமடைந்துவிட்டனர். 4,211 பேர் கரோனாவுக்கு பலியாகிவிட்டனர். தற்போது 3,751 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 489 பேரும், கோடம்பாக்கத்தில் 418 பேரும், அண்ணாநகரில் 411 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது தவிர, ராயபுரத்தில் 363 பேரும் திருவிகநகரில் 358 பேரும் அம்பத்தூரில் 325 பேரும் சிகிச்சையில் உள்ளனர். சுமார் மூன்று மாதங்களாக கரோனா நோயாளிகள் எண்ணிக்கை மொத்த பாதிப்பில் 1 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது அது 2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மார்ச் மாதத்தில் கரோனா தொற்றுப் பரவல் எவ்வாறு படிப்படியாக அதிகரித்து வந்திருக்கிறது என்பதை இந்த புள்ளி விவரத்தைப் பார்த்தாலே புரியும்.
மார்ச் 24: 633
மார்ச் 23: 532
மார்ச் 22: 496
மார்ச் 21: 466
மார்ச் 20: 458
மார்ச் 19: 421
மார்ச் 17: 395
மார்ச் 16: 352
மார்ச் 15: 317
மார்ச் 14: 294
மார்ச் 13: 271
மார்ச் 11: 292
மார்ச் 10: 275
மார்ச் 09: 236
மார்ச் 08: 229
மார்ச் 07: 251
மார்ச் 05: 225
மார்ச் 04: 189
மார்ச் 01: 171
தமிழகத்திலும் கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்போரின் எண்ணிக்கை 9,746 ஆக அதிரித்துள்ளது. நேற்று புதிதாக 1,636 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
No comments:
Post a Comment