Wednesday, March 31, 2021

விடுமுறை நாட்களிலும் கருவூலம் மற்றும் கணக்கு துறை பணியாற்ற கோரிக்கை


விடுமுறை நாட்களிலும் கருவூலம் மற்றும் கணக்கு துறை பணியாற்ற கோரிக்கை

Added : மார் 30, 2021 21:42

சென்னை:'தேர்தல் செலவுக்குரிய பணத்தை உடனடியாக விடுவிக்க வசதியாக, ஏப்., 2 முதல், 4 வரை, தேவையான ஏற்பாடு களை செய்யுங்கள்' என, கருவூலத்துறை செயலருக்கு, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், அவர் கூறியிருப்ப தாவது: தமிழக சட்டசபை பொதுத் தேர்தலும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலும், ஏப்., 6ல் நடக்க உள்ளது. எனவே, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும், தேர்தல் செலவுக்கான பணத்தை பெற, கருவூலம் மற்றும் கணக்கு துறைக்கு, 'பில்'களை அனுப்புவர்.

அவற்றுக்கு உடனடியாக பணம் வழங்க வசதியாக, ஏப்., 2 முதல், 4 வரை, விடுமுறை நாட்களிலும், ஊழியர்கள் பணியாற்றும் வகையில், தேவையான நடவடிக்கையை எடுக்கவும். இது தொடர்பாக, அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்களுக்கும், உரிய அறிவுரை வழங்கவும்.இவ்வாறு, சத்யபிரதா சாஹு கூறிஉள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024