Added : மார் 26, 2021 02:47
சென்னை:மதுரை, கோவை, புதுச்சேரி, நாகர்கோவில் உட்பட, 11 நகரங்கள் இடையே, 18 எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
* சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, வரும், ஏப்., 10 முதல், சனிக்கிழமைகளில் காலை, 6:05 மணிக்கு இயக்கப்படும் கரீப்ரத் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 10:30 மணிக்கு, ஹஜ்ரத் நிஜாமுதீன் சென்றடையும்
* ஹஜ்ரத் நிஜாமுதீனில் இருந்து, ஏப்.,12 முதல், திங்கள்கிழமைகளில், மாலை, 3:35 மணியில் இருந்து, மறுநாள் இரவு, 8:50 மணிக்கு, சென்னை எம்.ஜி.ஆர்.,சென்ட்ரல் வந்தடையும்
* சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, ஏப்., 10 முதல், செவ்வாய்கிழமை தவிர மற்ற நாட்களில், தினமும் காலை, 7:10 மணிக்கு இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ், மதியம், 2:15 மணிக்கு கோவை சென்றடையும்
* கோவையில் இருந்து, மாலை, 3:05 மணிக்கு புறப்பட்டு இரவு, 10:15 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் வந்தடையும்l கோவையில் இருந்து, ஏப்., 10 முதல், புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் அதிகாலை, 5:45 மணிக்கு இயக்கப்படும் உதய் எக்ஸ்பிரஸ், நண்பகல், 12:40 மணிக்கு கர்நாடகா மாநிலம், பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் சென்றடையும்
* கிருஷ்ணராஜபுரத்தில் இருந்து, மதியம், 2:15 மணிக்கு புறப்பட்டு, இரவு, 9:00 மணிக்கு கோவை சென்றடையும்
* மதுரையில் இருந்து, ஏப்., 20 முதல், ஞாயிறு, செவ்வாய்க்கிழமைகளில், அதிகாலை, 12:50 மணிக்கு இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில், சென்னை எழும்பூர் வழியாக, இரண்டாவது நாள் மாலை, 6:35 மணிக்கு டில்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் சென்றடையும்
*ஹஜ்ரத் நிஜாமுதீனில் இருந்து, ஏப்., 22 முதல் செவ்வாய், வியாழக்கிழமைகளில் அதிகாலை, 5:20 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூன்றாவது நாள் அதிகாலை, 12:05 மணிக்கு மதுரை சென்றடையும்
* மதுரையில் இருந்து, ஏப்., 17 முதல், வியாழன், சனிக்கிழமைகளில் இரவு, 8:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 6:55 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்
* எழும்பூரில் இருந்து, வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், இரவு,10:05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 8:10 மணிக்கு மதுரை சென்றடையும்
*கோவையில் இருந்து, ஏப்.,16 முதல் வெள்ளிக்கிழமைகளில், இரவு, 11:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 7:20 மணிக்கு, சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் வந்தடையும்
*சென்ட்ரலில் இருந்து, ஏப்., 17 முதல், சனிக்கிழமைகளில் இரவு, 10:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 6:30 மணிக்கு கோவை சென்றடையும்
* புதுச்சேரியில் இருந்து, ஏப்., 15 முதல், வியாழக்கிழமைகளில், மாலை, 4:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 10:00 மணிக்கு கர்நாடகா மாநிலம், மங்களூர் சென்ட்ரல் சென்றடையும்
*மங்களூர் சென்ட்ரலில் இருந்து, ஏப்., 16 முதல் வெள்ளிக்கிழமைகளில, மாலை, 4:35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 9:50 மணிக்கு புதுச்சேரி சென்றடையும்
* புதுச்சேரியில் இருந்து, ஏப்., 11 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில், பகல், 12:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள்அதிகாலை, 3:10 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்
* கன்னியாகுமரியில் இருந்து. ஏப்., 12ல் முதல் திங்கள்கிழமைகளில், மதியம், 1:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 4:40 மணிக்கு புதுச்சேரி சென்றடையும்
* தாம்பரத்தில் இருந்து, ஏப்., 26 முதல், தினமும் இரவு, 11:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 2:20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்
* நாகர்கோவிலில் இருந்து, ஏப்., 27 முதல் தினமும் மாலை, 3:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை, 7:25 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.இந்த ரயில்களுக்கு முன்பதிவு இன்று துவங்குகிறது.
No comments:
Post a Comment