Saturday, March 27, 2021

எட்டு வங்கிகளின் காசோலைகள் வரும் 1ம் தேதி முதல் செல்லாது


பொது செய்தி

இந்தியா

எட்டு வங்கிகளின் காசோலைகள் வரும் 1ம் தேதி முதல் செல்லாது

Updated : மார் 27, 2021 00:33 |

புதுடில்லி: பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு நடவடிக்கையை தொடர்ந்து, பழைய வங்கியின் பெயரில் உள்ள காசோலைகள், வரும், 1ம் தேதி முதல் செல்லாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகள் சந்தித்து வரும் நெருக்கடியை சமாளிப்பதற்காக, வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை, மத்திய அரசு படிப்படியாக நடைமுறைபடுத்தியது.தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை, பேங்க் ஆப் பரோடாவுடனும், கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடனும் இணைக்கப்பட்டன.ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி ஆகியவை, பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடனும், அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்பட்டன.

ஆனாலும், இணைப்புக்கு உள்ளான பழைய வங்கிகளின் காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தன. அவை, நாளடைவில் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு, புதிய வங்கியின் காசோலைகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், வரும், 1ம் தேதி முதல், தேனா வங்கி, விஜயா வங்கி, கார்ப் பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி, சிண்டிகேட் வங்கி, அலகாபாத் வங்கி ஆகிய, எட்டு வங்கிகளின் காசோலைகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்து உள்ளது.எனவே, மேற்குறிப்பிட்ட வங்கிகளின் காசோலையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், புதிய வங்கியின் காசோலை புத்தகங்களை கேட்டுப் பெறும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்குறிப்பிட்ட வங்கிகளின் காசோலைகளை, இனி யாரும் பெறக்கூடாது. ஏற்கனவே பெற்றிருந்தால், அதை மாற்றி பெறும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...