Thursday, March 25, 2021

வங்கிகளுக்கு விடுமுறை அதிகாரிகள் விளக்கம்

வங்கிகளுக்கு விடுமுறை அதிகாரிகள் விளக்கம்

Added : மார் 24, 2021 22:44

புதுடில்லி:வரும், 27ம் தேதி முதல், ஏப்ரல், 4ம் தேதி வரையிலான ஒன்பது நாட்களில், வங்கிகளுக்கு, ஏழு நாள் விடுமுறை என, சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருவதாக, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மார்ச், 27ம் தேதி நான்காவது சனிக்கிழமை; 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை; 29ம் தேதி திங்கட்கிழமை ஹோலி பண்டிகை; 31ம் தேதி, நிதியாண்டின் இறுதி நாள்.ஏப்., 1ம் தேதி வங்கிக் கணக்கு முடிக்கும் நாள்; ஏப்., 2ம் தேதி புனித வெள்ளி மற்றும் ஏப்., 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்கள் விடுமுறை என, தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:வங்கிகளுக்கு நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை. வரும், 29ம் தேதி திங்கட்கிழமை, தமிழகத்தில் ஹோலி பண்டிகைக்கு விடுமுறை கிடையாது. வட மாநிலங்களில், உள்ளூர் விடுமுறை விடப்படும். இதே போல், வரும், 31ம் தேதி, 2020 - 21ம் நிதியாண்டின் நிறைவு நாள் என்பதால் விடுமுறை கிடையாது.ஏப்., 1ம் தேதி வங்கிக் கணக்கு முடிக்கும் தினம் என்பதாலும், 2ம் தேதி புனித வெள்ளி என்பதாலும் வங்கிகளுக்கு விடுமுறை.

ஏப்., 3ம் தேதி, முதல் சனிக்கிழமை என்பதால், அன்று வங்கிகள் வழக்கம் போல் செயல்படும். எனவே, வங்கிகளுக்கு, ஏழு நாட்கள் விடுமுறை என, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024