Sunday, July 11, 2021

கிளம்பிட்டாய்ங்கய்யா... ‛வாட்ஸ் ஆப் வெரிபிகேஷன் ஸ்கேம்' திருடர்கள்: ஓ.டி.பி.,யை சொல்லிடாதீங்க

கிளம்பிட்டாய்ங்கய்யா... ‛வாட்ஸ் ஆப் வெரிபிகேஷன் ஸ்கேம்' திருடர்கள்: ஓ.டி.பி.,யை சொல்லிடாதீங்க

Updated : ஜூலை 11, 2021 10:39 | Added : ஜூலை 11, 2021 10:34

மதுரை: 'அடிச்சு கூட கேட்பாங்க சொல்லிடாதீங்க' என வடிவேலு காமெடியில் வருவது போல் 'ஓ.டி.பி.,யை - ஒன் டைம் பாஸ்வேர்டு' சொல்லிடாதீங்க... 'வாட்ஸ் ஆப் வெரிபிகேஷசன் ஸ்கேம்' என்ற திருடர்கள் கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாய்ங்க'... என சைபர் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

வாட்ஸ் ஆப் செயலியை 'கூகுள் பிளே ஸ்டோரில்' பதிவிறக்கி நம் அலைபேசி எண் பதிவு செய்து பயன்படுத்துகிறோம். நம் அலைபேசி எண்ணை தங்கள் போனில் உள்ள வாட்ஸ் ஆப் செயலில் பதிவு செய்து நம் தகவல்களை திருடுபவர்கள் தான் 'ஸ்கேம்' திருடர்கள். இவர்கள் நம் எண்ணை அவர்கள் வாட்ஸ் ஆப்பில் பதிவிடும் போது நம் அலைபேசி எண்ணுக்கு 4 இலக்க ஓ.டி.பி., எண்கள் வரும். உடனே நமக்கு போன் செய்து 'தவறாக உங்கள் எண்ணுக்கு ஓ.டி.பி.,வந்து விட்டது தயவு செய்து கூறுங்கள்' என மூளைச் சலவை செய்கிறார்கள்.

நாமும் ஏதோ ஒரு அவசரத்தில் யார், என்ன என்று கேட்காமல் ஓ.டி.பி.,யை கூறி விட்டால் அவ்வளவு தான் நம் 'வாட்ஸ் ஆப் சாட்' முழுதும் திருடர்கள் அலைபேசியில் ஓப்பனாகும். இந்த நேரத்தில் நம் அலைபேசியின் வாட்ஸ் ஆப் செயலி 'லாக் அவுட்' ஆகிவிடும். ஆனால் அதை கவனித்து மீண்டும் நாம் 'லாக் இன்' ஆகும் இடைப்பட்ட நேரத்தில் நம் தகவல்கள் திருடப்பட்டிருக்கும். வாட்ஸ் ஆப்பில் நண்பர்கள், குடும்பத்தினருக்கு நாம் அனுப்பிய ஏ.டி.எம்., பாஸ்வேர்ட், ஆதார் எண் உள்ளிட்ட பல ரகசியங்கள் திருடர்கள் கையில் சிக்கினால் நம் கதை கந்தல் தான்.

இதில் இருந்து தப்பிக்க நம்பகமான நபர்கள் தவிர வேறு யார் போன் செய்து ஓ.டி.பி.,யை கேட்டாலும் சொல்லவே கூடாது. பிரவுசிங் சென்டர் உள்ளிட்ட இடங்களில் ஏதாவது ஆவணங்கள் பெற செல்லும் போது நம் அலைபேசிக்கு வரும் ஓ.டி.பி.,யை அங்குள்ளவர் ஆவணத்திற்காக தான் பயன்படுத்துகிறாரா என்றும் கவனிக்க வேண்டும்.

'வாட்ஸ் ஆப் செட்டிங்ஸ்' மாற்றுங்கள்

தகவல் திருட்டை தடுக்க சில 'செட்டிங்'குகளை மாற்ற வேண்டும். வாட்ஸ் ஆப் செட்டிங், பிரிவில் அக்கவுண்ட் தேர்வு செய்து 'டூ ஸ்டெப் வெரிபிகேஷன்' கிளிக், எனேபில் செய்து 6 இலக்க பின் நம்பர் கொடுக்கவும். இதை செய்தால் திருடர்கள் ஓ.டி.பி., வைத்து நம் அலைபேசி எண்ணுள்ள வாட்ஸ் ஆப்பில் நுழையும் போது பின் நம்பர் கேட்கும்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...