Wednesday, August 4, 2021

முறையாக பெற்ற பட்டம் செல்லும்!


முறையாக பெற்ற பட்டம் செல்லும்!

Added : ஆக 03, 2021 20:53

சென்னை:'திறந்தநிலை பல்கலையில் முறையாக பட்டம் பெற்றால், அரசு வேலை வாய்ப்பு பெறலாம்' என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை தெரிவித்துள்ளது.

பல்கலையின் பதிவாளர் ரத்னகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்த பின், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் இருந்து, முறையாக பட்டப்படிப்பை முடித்தால், அது மற்ற பல்கலைகளின் பட்டப்படிப்பு போல செல்லத்தக்கது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வழியே, அரசு வேலையும் பெற முடியும்.இதை, திறந்தநிலை பல்கலையில் பட்டம் படிக்க விரும்பும் மாணவர்கள், தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024