வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் விவரத்தை அக். 26-க்குள் தெரிவிக்க வேண்டும்: காவல் ஆணையர் உத்தரவு
The Hindu Tamil
சென்னையில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் விவரத்தை அக்டோபர் 26-ம் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் எல்லைக்குள் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீட்டில் வாடகைக்கு குடியிருப்போரின் விவரங்களை காவல் நிலையங்களில் தெரியப்படுத்த வேண்டும் என்ற உத்தரவு ஏற்கெனவே அமலில் உள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டில் வாடகைக்கு வசிப்போரின் விவரங்களை வரும் அக். 26-ம்தேதிக்குள் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment