சென்னை-- லண்டனில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு, வரும் 31ம் தேதி முதல், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தன் விமான சேவையை மீண்டும் துவக்குவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை விமான நிலையம் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவல்:லண்டன் நாட்டின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு 31ம் தேதி, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தன் சேவையை மீண்டும் துவக்குகிறது.
இந்த விமானம், செப்., 1ல் சென்னை விமான நிலையம் வந்து சேரும்.இந்த விமான சேவை வாரத்தில் மூன்று நாட்கள் இருக்கும். லண்டனில் இருந்து சென்னைக்கு, ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து லண்டனுக்கு திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் விமான சேவை உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment