'டூப்ளிகேட்' ரேஷன் கார்டு; தொடர்கிறது தாமதம்
Added : ஆக 29, 2021 00:22
சென்னை-ரேஷன் கார்டு தொலைத்தவர்களுக்கு, 'டூப்ளிகேட்' கார்டு வழங்க, அதிகாரிகள் தாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
ரேஷன் கார்டை தொலைத்தவர்கள், டூப்ளிகேட் கார்டுக்கு, www.tnpds.gov.in என்ற, பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.அதாவது, இணையதள பக்கத்தில், 'நகல் குடும்ப அட்டை' என்ற பகுதியில் விண்ணப்பிக்க வேண்டும். அதை, உணவு வழங்கல் துறை உதவி ஆணையர்கள் அல்லது வட்ட வழங்கல் அதிகாரிகள் சரிபார்த்து, ஒப்புதல் தருவர்.பின், கார்டு அச்சிடப்பட்டு தயாரானதும், சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் வழங்கப்படும்; அதற்கு, 20 ரூபாய் கட்டணம். ஊரடங்கு, சட்டசபை தேர்தல் உள்ளிட்ட காரணங்களால், டூப்ளிகேட் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டது.
தற்போதும் அந்த கார்டை வழங்க, அதிகாரிகள் தாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.எனவே, டூப்ளிகேட் கார்டை விரைந்து வழங்க, உணவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பயனாளிகளிடம் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment