நரம்பியல் டாக்டர் கொலை வழக்கில் நாளை தீர்ப்பு
Added : ஆக 02, 2021 23:53
சென்னை : டாக்டர் சுப்பையா கொலை வழக்கில், நாளை தீர்ப்பு கூறப்படுகிறது.கடந்த 2013 செப்., 14ல், சென்னை ஆர்.ஏ.,புரத்தில், நரம்பியல் டாக்டர் சுப்பையா, கூலிப்படையினரால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த வழக்கில், 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், 2015 முதல் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், ஆகஸ்ட் 2ல் தீர்ப்பு வழங்கப்படும் என, சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அறிவித்திருந்தார்.இதன்படி தீர்ப்புக்காக, நேற்று அந்த வழக்கு பட்டியலிடப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரில், ஆசிரியர் பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம் ஆகியோர் ஆஜராகவில்லை.அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'உடல்நிலை சரியில்லாத காரணத்தால், இருவரும் ஆஜராக முடியவில்லை' என தெரிவித்தார்.இதையடுத்து தீர்ப்பை நாளை தள்ளிவைத்து, நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment