பொங்கல் பண்டிகையை கொண்டாடும் நாம் இன்றாவது விறகு அடுப்பில் மண் பானைகள் வைத்து பொங்கலை கொண்டாடி மகிழ முன்வர வேண்டும்.
இயற்கைக்கும், நமது வாழ்க்கைக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நமது
நன்றியை தெரிவிக்கும் வகையில் பொங்கல் திருநாள் பாரம்பரியமாகக்
கொண்டாடப்படுகிறது.
இதற்காக சூரியனுடைய சக்தியால் விளைந்த அரிசி,
மண்ணால் செய்த அடுப்பு, பானை ஆகியவற்றை வைத்து பொங்கலிட்டு, இனிக்கும்
கரும்பையும், மங்களப் பொருளான மஞ்சளையும் வைத்து பொங்கலோ பொங்கல் என்று
கூறி வழிபாடு செய்வது வழக்கம். அதோடு இயற்கை ஆதாரமாக உள்ள உழவுத்
தொழிலையும் போற்றும் விதத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையின் இயற்கை மூலம் விளைவித்த பொருள்களையே வைத்து கொண்டாடப்படுகிறது.
மண் அடுப்பில் விறகிட்டு, நெருப்பு மூட்டி, மண் பானை
வைத்து பொங்கலிடப்படுகிறது. இது தான் வழக்கமாக இருந்து வருகிறது.
இதன்படி, நமது முன்னோர் இயற்கையில் விளைந்த காய்கறிகள், கிழங்கு வகைகள், நவ
தானியங்கள், உள்ளிட்டவற்றை ஒன்றாக கலந்து சமைத்து காய்கறியை சூரியனுக்கு
படைத்து வருகின்றனர்.
பொதுவாக மண் பானையில் சமைக்கப்படும் உணவுகள் ருசியாகவும், உடல் நலத்துக்கு நன்மை விளைவிக்கக் கூடிய உணவாகவும் கருதப்படுகிறது.
கிராமங்களில் விறகு அடுப்பில் மண் பானையில் தான் முன்பெல்லாம் சமையல்
செய்து வந்தனர். தற்போது அறிவியல் வளர்ச்சி காரணமாகவும், கால மாற்றத்துக்கு
ஏற்பவும் பழைய வழக்கம் மாறி வருகிறது.
நகர்ப்புறங்களில் தான் அறிவியல்
வளர்ச்சி காரணமாக நவீன உபகரணங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
கிராமப்புறங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மண்பானை கலாசாரம் கூட தற்போது
மாறிவிட்டது. நகர்புறத்துக்கு இணையாக கிராமங்களிலும் சமையல் எரிவாயு
அடுப்பு, மின்சார அடுப்பு என நவீன அடுப்புகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
அதோடு மண் பானைக்கு பதிலாக எவர்சில்வர் பாத்திரங்கள், குக்கர்களும்
பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதனால் இயற்கையான உணவு தயாரிக்கும் முறை மாறிப்
போயுள்ளது. அதனால் உடல் நலத்திலும் குறைபாடுகள் ஏற்பட்டு வருகின்றன.
பாரம்பரிய தமிழர்களின் விளையாட்டான ஜல்லிக்கட்டு தேவையென தற்போது போராடி
வருகிறோம். அதேபோல நமது உடல்நலத்திற்கு நன்மை தரக்கூடிய இயற்கையாக சமையல்
செய்யும் முறையையும் நாம் கடைப்பிடிக்க முயற்சி செய்ய வேண்டியது
அவசியமாகிறது.
எரிவாயு அடுப்பில் குக்கர் வைத்து பொங்கல் வைத்து
பண்டிகையை கொண்டாடும் கலாசாரம்தான் தற்போது நடைமுறையில் உள்ளது. நாம்
இயற்கை முறையை கைவிட்டு விட்டாலும் ஆண்டுக்கு ஒருமுறை பொங்கல் பண்டிகையின்
போதாவது மண் அடுப்பில் மண் பானை வைத்து சமைத்து இறைவனுக்கு படைக்க அனைவரும்
முன்வர வேண்டும்.
இயற்கை முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும்போது
நமது உடல் நலத்துக்கு நன்மை தருவதோடு மட்டுமல்லாமல் மண் பானை, மண் அடுப்பு
ஆகியவற்றை தயாரிக்கும் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு அதன் மூலம் வருவாயும்
கிடைக்கும்.
ஆகவே பொங்கல் பண்டிகையின்போது இயற்கையான முறையில் மண் அடுப்பு மற்றும் மண்பானை வைத்து பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம்.
Dailyhunt
விஜய்-யின் பைரவா: சினிமா விமரிசனம்
ஒரு வழக்கமான வெகுஜன மசாலா திரைப்படம் இது. விஜய் போன்ற மக்கள்
திரளின் பெரும் அபிமானம் பெற்ற நடிகர்கள், தங்களின் பாதுகாப்பான
பாதையிலிருந்து விலகவே விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கும்
இன்னொரு சலிப்பான படைப்பு. சமகால சமூகப் பிரச்னைகளை ஊறுகாயாகத்
தொட்டுக்கொண்டு அதன்மூலம் தன்னை அவதார நாயகனாக முன்நிறுத்திக் கொள்ளும்
எம்.ஜி.ஆர் காலத்து ஃபார்முலாவை 'பைரவா'வும் சலிக்க சலிக்கப்
பின்பற்றியிருக்கிறது. 'கத்தி' திரைப்படத்தில் விவசாயிகளின் பிரச்னைகளைப்
பற்றி பேசுவதாக அமைந்த பாவனை, இத்திரைப்படத்தில், ரவுடிகளாக இருந்தவர்கள்
கல்வித் தந்தைகளாக மாறியிருக்கிற ஆபத்தைப் பற்றியதாக மாறியிருக்கிறது.
அவ்வளவே. மற்றபடி வெகுஜன திரைப்படத்தின் அதே வழக்கமான விஷயங்கள்.
***
நாயகன்
(விஜய்) சென்னையில் கலெக்ஷன் ஏஜெண்ட்டாகப் பணிபுரிபவன். பெரும் நிதியைக்
கடனாக வாங்கிவிட்டு பிறகு வங்கி அதிகாரியை மிரட்டி ஏமாற்ற முயலும்
ரவுடிக்கும்பலை அடித்து உதைத்து பணத்தை மீட்கும் சாகசங்களோடு படம்
தொடங்குகிறது. அதிகாரியின் மகளுடைய திருமணத்துக்குச் செல்லும்போது
நாயகியிடம் (கீர்த்தி சுரேஷ்) வழக்கம்போல் முதல் சந்திப்பிலேயே காதலில்
விழுகிறான். அவளுக்குப் பின்னால் சில ஆபத்துகள் ஒளிந்திருப்பதை அறிகிறான்.
என்னவென்று விசாரிக்கிறான். நாயகி படிக்கும் மருத்துவக் கல்லூரி தொடர்பான
மோசடிகளை அறிகிறான். கசாப்புக் கடை வைத்திருந்த ரவுடியொருவன் தனது பலத்தின்
மூலமும் அரசியல் தொடர்பின் மூலமும் கட்டியிருக்கும் வணிக சாம்ராஜ்யத்தை
நாயகன் வீழ்த்தும் காட்சிகளோடு படம் நிறைகிறது. முதல் பாதி சென்னையிலும்
பிற்பாதி நெல்லையிலும் நிகழுமாறு காட்சிகள் அமைகின்றன.
வெகுஜன
மனநிலைக்கு இணக்கமான ஒரு திரைப்படத்தை உருவாக்குவது அத்தனை சுலபமான
விஷயமில்லை. எந்த அடுக்கில் காட்சிகளை எப்படி அடுக்கினால் அவர்கள்
ரசிப்பார்கள் என்பது தொடர்பான நுணுக்கங்கள் அத்துப்படியாக
தெரிந்திருக்கவேண்டும். இயக்குநர் பரதனுக்கு இதில் அடிப்படையான திறமை
வாய்த்திருக்கிறது. 'பைரவா'விலும் அப்படி ரசிக்கக்கூடிய சில காட்சிகள்
இருக்கின்றன. இந்தக் கதை சொல்லும் திறமையை வைத்துக்கொண்டு ஒரு புதிய
களத்தில், பாணியில் இறங்கி விளையாடினால் பார்வையாளர்கள் நிச்சயம்
வரவேற்பார்கள். ஆனால் தேய்வழக்கான திரைக்கதை, காட்சிகளின் மிகையான
வடிவமைப்பு போன்றவை சலிப்பூட்டுகின்றன.
விஜய்க்கு
42 வயதாகிறது. ஆனால் இன்னமும் தன் இளமையைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்
என்பது ஆச்சர்யம். ஒரு காட்சியில் தன் சட்டையைக் கழற்றி விட்டு ஓடுகிறார்.
அவர் தன் உடலை கச்சிதமாக வைத்துக் கொண்டிருக்கும் விதம் பாராட்ட வைக்கிறது.
ஆனால் இளமை மாறாதிருப்பதைப் போலவே அவருடைய நடிப்பிலும் பல வருடங்களாக
மாற்றமில்லை என்பதுதான் அதிகம் சோர்வூட்டக்கூடியது. 'பைரவா'வில் அவருடைய
தலையில் 'விக்' சேர்ந்திருப்பதுதான் கவனிக்கத்தக்க மாற்றம்.
கீர்த்தி
சுரேஷ் வழக்கமான நாயகி. சில கோணங்களில் அழகாகவே இருக்கிறார். ஜெகபதி பாபு
வழக்கமான வில்லன். துணை வில்லனான டேனியல் பாலாஜி சிறிது வித்தியாசம் காட்ட
முயன்றிருக்கிறார். ஆனால் பாவம், அவரும்தான் என்ன செய்யமுடியும்?
Laughing
gas துணை கொண்டு பாத்திரங்களைச் சிரிக்க வைப்பது போல சில காட்சிகள்
வருகின்றன. சதீஷூம் தம்பி ராமையாவும் அவ்வாறே நம்மைச் செயற்கையாக சிரிக்க
வைக்க முயல்கிறார்கள். ஒன்றும் தேறவில்லை. விஜயராகவன் போன்ற அற்புதமான
மலையாள நடிகர்கள் எல்லாம் ஓரமாக வந்து வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
***
இதன்
உருவாக்கத்தில் குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியவர்களாக ஒளிப்பதிவாளர்
எம்.சுகுமாரையும் சண்டைக்காட்சி வடிவமைப்பாளர் அனல் அரசுவையும் சொல்ல
வேண்டும். இவர்களின் கூட்டணி ஒத்திசைவில் சண்டைக்காட்சிகள் மிகையாக
இருந்தாலும் அனல் தெறிக்கிறது. ஆனால் இவர்கள் போன்றவர்களின் அசாதாரணமான
உழைப்பு மோசமான திரைக்கதைகளுக்காக வீணாகிக்கொண்டிருக்கும் பரிதாபமும் தமிழ்
சினிமாவில் தொடர்ந்து நிகழ்கிறது.
தாம் நிரம்பும்
பாத்திரத்துக்கேற்ப நீர் தன்னை உருமாற்றிக் கொள்வதற்கேற்ப, சந்தோஷ்
நாராயணன் போன்ற புதுமையான இசையமைப்பாளர்களும் வணிகப்படங்களுக்கேற்ப மாற
வேண்டிய பரிதாபம். 'நில்லாயோ' பாடல் மட்டும் அருமை. 'காற்றின் உடலா,
பெண்பால் வெயிலோ' என்று வசீகரிக்க முயன்றிருக்கிறார் வைரமுத்து. இதர
பாடல்கள் சப்தங்களின் தொகுப்பு. 'வர்லாம் வா' பாடலும் அதன் இசையும்
அவசியமான இடங்களில் படத்தின் விறுவிறுப்புக்கு நன்றாக உதவியிருக்கிறது. ஒரு
சண்டைக்காட்சியில் வழக்கமான பின்னணி இசையாக அல்லாமல் மாறுதலான இசையை
சந்தோஷ் முயன்றிருப்பது வரவேற்கத்தக்கது.
விறுவிறுப்பான காட்சியோடு
தொடங்கும் திரைப்படம், கீர்த்தி சுரேஷ் தன் ஃபிளாஷ்பேக்கை விவரிக்கும்
நீளமான பின்னணிக் காட்சிகளால் சுவாரசியத்தை இழந்துவிடுகிறது. பிறகு நாயகன்
வில்லனை வெற்றி கொள்ளும் காட்சிகள். அத்தனை பலம் பொருந்திய வில்லனை ஒற்றை
ஆளாக நாயகன் எதிர்கொள்வது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. எதிலுமே புதுமையோ,
வித்தியாசமோ இல்லை. நாயகனின் உடலில் எரிபொருளை வீசி தீப்பற்ற வைக்கும்
காட்சி சற்று ஆர்வத்தை தூண்டி, பிறகு எதுவுமே இல்லாமல் அணைந்து போகிறது.
போலவே இதன் கிளைமாக்ஸ். இப்படியொரு உச்சக்காட்சியை சிந்திப்பதற்கெல்லாம்
ஹாலிவுட்டுக்கே சவால் விடும் மூளையமைப்பும் துணிச்சலும் வேண்டும்.
திருநெல்வேலியில் காவல்துறை அதிகாரியாக இருக்கும் நாயகியின் தந்தையே
அங்குள்ள கல்லூரி மோசடிகளை அறியாத அப்பாவியாக இருக்கிறார் என்பது போன்று பல
தர்க்கப் பிசிறுகள்.
சமூகப் பிரச்னைகளைத் தங்களின்
வணிகத்துக்காகத் தந்திரமாகப் பயன்படுத்தும் இதுபோன்ற திரைப்படங்கள் தமிழ்
சினிமாவின் ஆகப் பெரிய சோகங்களுள் ஒன்று.
Dailyhunt
பொங்கல் பண்டிகையைத் தவிர்க்கும் சிங்கிலிப்பட்டி கிராம மக்கள்: அசம்பாவிதம் நேர்வதைத் தவிர்க்க விநோதப் பழக்கம்
நாய் பொங்கலை சாப்பிட்டதால் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக கடந்த 3
தலைமுறையாக பொங்கல் பண்டிகையைத் தவிர்த்து வரும் சிங்கிலிப்பட்டி கிராம
மக்கள், நிகழாண்டும் பண்டிகை கொண்டாட்டத்தை வழக்கம் போல் தவிர்த்துள்ளனர்.
அதனால் பண்டிகைக்கு உரிய எவ்வித ஆரவாரமும் இன்றி சிங்கிலிப்பட்டி கிராமம்
காட்சியளிக்கிறது.
நாமக்கல் அருகே சிங்கிலிப்பட்டி கிராமத்தில்
கடந்த 3 தலைமுறைகளாக பொங்கல் பண்டிகை கொண்டாடத்தை தவிர்த்து வருகின்றனர்.
அதுபோல, இந்தாண்டும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை சிங்கிலிப்பட்டி கிராம
மக்கள் வழக்கம் போல் புறக்கணிப்பு செய்துள்ளனர்.
இதுகுறித்து
சிங்கிலிப்பட்டி கிராம மக்கள் கூறியது: பொங்கல் பண்டிகை மற்ற கிராமங்களைப்
போல் இக்கிராமத்திலும் கொண்டாடப்பட்டு வந்தது.
ஆனால், கடந்த மூன்று தலைமுறைகளாக பண்டிகை கொண்டாடுவது
தவிர்க்கப்படுகிறது. மூன்று தலைமுறைக்கு முன்பு பொங்கல் பண்டிகை சமயத்தில்
சுவாமிக்கு படைப்பதற்காக பானையில் பொங்கல் வைக்கப்பட்டிருந்தது. அந்த
பொங்கலை ஏதேச்சையாக நாய் சாப்பிட்டது. அதையடுத்து, அதை
அப்புறப்படுத்திவிட்டு மாற்றுப் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைக்கப்பட்டது.
அச்சமயத்தில் கிராமத்தில் நன்றாக இருந்த பசு மாடுகள் அடுத்தடுத்து
உயிரிழந்தன. அதன்காரணமாக அந்தாண்டு பொங்கல் பண்டிகை கைவிடப்பட்டது.
எனினும், அதற்கடுத்தடுத்த ஆண்டுகளிலும் பொங்கல் பண்டிகை சமயங்களில்
அசம்பாவம் ஏற்படுவது தொடர் கதையாகியது.
அதனால் கிராம மக்கள் முடிவு
செய்து பண்டிகை கொண்டாட்டத்தை கடந்த 3 தலைமுறையாகத் தவிர்த்து வருகிறோம்.
கிராம மக்களின் பயத்தைப் போக்க அதே கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி
மன்றத் தலைவர் இளங்கோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் வைத்து
வழிபாடு நடத்தினார். அப்போது அவரது வீட்டில் இருந்த பசு இறந்தது. அதனால்
பண்டிகை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டோம். நாங்கள் மட்டுமின்றி கிராமத்தில்
இருந்து வெளியேறியவர்களும் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதில்லை என்றனர்.
இதுகுறித்து
முன்னாள் ஊராட்சித் தலைவர் இளங்கோ கூறியது: மக்கள் மத்தியில் நிலவும்
பயத்தைப் போக்க பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினேன். அப்போது மாடு இறந்தது.
மாட்டின் வயிற்றில் இரும்புக் கம்பி சிக்கியதால் மாடு இறந்தது. பொங்கல்
கொண்டாட்டத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. இந்தாண்டு 15ஆம் தேதி
கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திடலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்த
உள்ளேன் என்றார்.
Dailyhunt
ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் யார்? உச்ச நீதிமன்றம் விளக்கம்
ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் தொடர்பான விவரத்தை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு
வழக்கில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள தீர்ப்பை பொங்கல்
பண்டிக்கை கொண்டாடப்படவுள்ள சனிக்கிழமைக்கு (ஜனவரி 14) முன்பாக அளிக்க
வேண்டும் என ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை முன்வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்ற
நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நிராகரித்தது. இந்த அமர்வில்
நீதிபதி ஆர். பானுமதி இடம் பெற்றிருந்ததார்.
இந்நிலையில்,
ஜல்லிக்கட்டு வழக்கு தமிழகத்தில் நடைபெற்ற போது அப்போட்டிக்கு தடை விதித்த
நீதிபதி ஆர்.பானுமதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்விலும் இருப்பதால்,
ஜல்லிக்கட்டு தீர்ப்பு சாதகமாக கிடைக்க வாய்பிப்பில்லை என்பது போல சில
ஊடகங்களில் ஒரு பிரிவு ஆர்வலர்கள் வியாழக்கிழமை பேட்டியளித்தனர்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக்
மிஸ்ரா தலைமையிலான அமர்வு வெள்ளிக்கிழமை காலையில் வழக்குகளை விசாரிக்கும்
முன்பு, ஜல்லிக்கட்டு தீர்ப்பு விவகாரத்தில் நீதிபதி ஆர். பானுமதியின்
பெயரை தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகளுக்காக தனது அதிருப்தியை
வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு வழக்கில்
தீர்ப்பளிக்கவுள்ள நீதிபதிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றச் செய்தித்
தொடர்பாளர் ராகேஷ் சர்மா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
வருமாறு: ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் பங்கேற்க வகை செய்யும்
அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி ஆண்டு 7-ஆம் தேதி வெளியிட்டது.
இதை எதிர்த்து இந்திய விலங்குகள் நல வாரியம், பீட்டா பிராணிகள் நல அமைப்பு
ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு (ரிட் மனு 242016) தொடுத்தன.
இது
தொடர்பான மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன்
ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கு தொடர்பான தீர்ப்பு கடந்த
டிசம்பர் 7-ஆம் தேதி மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. எனவே,
ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எஃப்.
நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வே தீர்ப்பளிக்கும். இந்த அமர்வில் நீதிபதி
ஆர். பானுமதி இடம் பெறவில்லை என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீட்டா
கோரிக்கை: இதனிடையே, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் வகையில்
மத்திய அரசு ஏதேனும் அவசரச் சட்டம் கொண்டு வரும் பட்சத்தில் அதற்கு
ஒப்புதல் அளிக்கக்கூடாது எனக் கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு,
வழக்கின் மனுதாரரான பிராணிகள் நல அமைப்பான பீட்டா கடிதம் எழுதியுள்ளது.
இந்தக் கடிதத்தின் நகலை தமிழக அரசின் தலைமைச் செயலர், காவல் துறை தலைமை
இயக்குநர் ஆகியோருக்கும் பீட்டா அமைப்பு அனுப்பியுள்ளது.
சென்னை: ஜெயலலிதா மறைந்ததும், அவர் வகித்த அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர்
பதவியை பிடிப்பதற்காக சசிகலா தீவிரமாக களம் இறங்கிய போது, கட்சியின் மூத்த
தலைவர்களான, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.முனுசாமி
உள்ளிட்டவர்கள், சசிகலாவை கடுமையாக எதிர்த்தனர். வாக்குறுதி: அது,
பொதுக்குழுவில் பிரச்னையாக வெடிக்கலாம் என கருதிய சசிகலா உறவினர்கள்,
கட்சியின் மூத்த தலைவர்கள் பலரையும் சந்தித்து சமாதானம் பேசினர்.
அப்போது,
அவர்களுக்கு கட்சியிலும் ஆட்சி - அதிகாரத்திலும் முக்கியத்துவம் அளிப்பதாக
உறுதிமொழி அளித்ததாகக் கூறப்படுகிறது. நினைத்த மாதிரி, சசிகலா, பொதுக்
குழுவால் தேர்வாகி விட்டார். ஆனால், உறுதி மொழி அளித்தபடி, மூத்த தலைவர்கள்
யாருக்கும் கட்சியிலும்; ஆட்சியிலும் எந்தப் பொறுப்பும்
அளிக்கப்படவில்லை.இதற்கிடையில், சசிகலாவை கடுமையாக விமர்சித்ததோடு, அவர்
தலைமையை ஏற்றெல்லாம் தன்னால் செயல்பட முடியாது என, அதிரடியாக பேசினார்
கட்சியின் பேச்சாளரான நாஞ்சில் சம்பத்.
வான் கோழி மயிலாகாது என்றெல்லாம், சசிகலாவை
தரைமட்டத்துக்கு கீழே இறக்கிப் பேசினார். உடனே அவரை அழைத்துப் பேசிய
சசிகலா, அவருடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அனுப்பியதாகக்
கூறப்படுகிறது.
இதையறிந்ததும், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட
மூத்த தலைவர்கள், சசிகலா மீதும், உறுதி மொழி அளித்த அவரது உறவுகள் மீதும்
கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.இது குறித்து,
அ.தி.மு.க.,வின் மூத்த தலைவர்களோடு நெருக்கமாக இருக்கும் சிலர் கூறியதாவது:
சசிகலாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த செங்கோட்டையனுக்கு,
கட்சியில் பொருளாளர் பதவியும் மீண்டும் வேளாண்மைத் துறை அமைச்சர் பதவியும்
தருவதாக கூறியுள்ளனர். முடிந்தால் சசிகலா அமைச்சரவையில் துணை முதல்வர்
வாய்ப்பும் வழங்கப்படும் என்றெல்லாம் சொல்லி சமாதானப்படுத்தியே,
அம்மாவுக்குப் பின் சின்னம்மாதான் என்று சொல்ல வைத்துள்ளனர்.
அதேபோன்ற உறுதி மொழிகளே கே.பி.முனுசாமிக்கும் அளிக்கபப்பட்டுள்ளது.
கட்சியில் துணைப் பொதுச் செயலர் பதவியும் ஆட்சி - அதிகாரத்தில்
முக்கியத்துவம் வாய்ந்த பதவியும் வழங்கப்படும் என்றும்
கூறப்பட்டிருக்கிறது. இவர்களைப் போலவே, கட்சியில் அதிருப்தியுடன் இருந்து
வரும் மூத்த தலைவர்கள் பலரையும் அழைத்து, சசிகலாவுக்கு ஆதரவாக இருக்கக்
கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்காக, நிறைய பேரிடம் வாக்குறுதிகளும்
அளிக்கப்பட்டது.
ஆனால், சொன்னபடி யாருக்கும் எதுவும்
செய்யப்படவில்லை. அதேநேரம், சசிகலாவை கடுமையாக எதிர்த்தார்; விமர்சித்துப்
பேசினார் என்பதற்காக, நாஞ்சில் சம்பத்தை அழைத்து பேசி, எதிர்பார்ப்புகளை
பூர்த்தி செய்துள்ளனர். அதையும் நினைத்து முத்த தலைவர்கள்
கொந்தளிக்கின்றனர். இதனால், மீண்டும் சசிகலாவுக்கு எதிர்ப்பான நிலையை
மேற்கொள்ளலாமா என, அவர்கள் ஆலோசிக்கத் துவங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் அவரது அரசியல் எதிர்காலம் கடும் சிக்கலுக்குள்ளாகும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Dailyhunt
தீபாவுக்கு குவியும் கூட்டம்; குமையும் அமைச்சர்கள்
DINAMALAR
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியலில் குதிப்பது
கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலையில், அவரது இல்லம் தேடி, தினந்தோறும்
ஆயிரக்கணக்கான அ.தி.மு.க., தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தி.மு.க., -
தே.மு.தி.க., உள்ளிட்ட பல கட்சித் தொண்டர்களும், தீபாவின் பின்னால் அணி
திரள தயாராகி விட்டனர். பல்வேறு இயக்கங்கள்: ஈரோடு, சேலம், அரியலூர்,
பெரம்பலூர், திருப்பூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களும் தீபா
பேரவை, அம்மா தி.மு.க., எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா அ.தி.மு.க., என்று பல்வேறு
பெயர்களில் இயக்கங்களை தன்னிச்சையாக துவங்கி உள்ள அ.தி.மு.க., தொண்டர்கள்,
தீபாவை தலைமையேற்க அழைப்பு விடுத்துள்ளனர்.தொண்டர்கள் இப்படி எல்லா
எதிர்ப்புகளையும் மீறி, தீபா பின்னால் அணிவகுப்பது, தீபாவுக்கே ஆச்சரியமாக
உள்ளது.
அதனால், தீவிரமாக அரசியலில் ஈடுபடுவது குறித்து, அவர்
ஆலோசித்து வருகிறார்.இந்நிலையில், கரூரிலும்; சென்னையிலும்; ஈரோட்டிலும்
தீபா ஆதரவாளர்கள் கூட்டத்தைப் பார்த்து, ஒட்டுமொத்த தமிழக அமைச்சரவையும்
ஆடிப் போய் உள்ளதாகக் கூறப்படுகிறது.இது குறித்து, அமைச்சரவை வட்டாரங்கள்
கூறியதாவது: தமிழகம் முழுவதும் சசிகலாவுக்கு செல்வாக்கை பெருக்க செய்ய
வேண்டும் என, கட்சியினருக்கு, மேலிட உத்தரவாகச் சொல்லப்பட்டது. இதையடுத்து,
கட்சிகளின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும், சசிகலாவின் செல்வாக்கை
பெருக்க நடவடிக்கை எடுக்குமாறு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது. ஒவ்வொரு
மாவட்டத்திலும், சசிகலாவின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக நிறைய
நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்
ஆங்காங்கே உள்ள மாவட்ட
அமைச்சர்கள்.தொண்டர்களை அழைத்தால், யாரும் வருவதில்லை. ஐநூறு ரூபாய் பணம்;
அழைத்துச் சென்று, திரும்பி வந்து விடுவதற்கு வாகன வசதி; பிரியாணி
பொட்டலம்; வாட்டர் பாட்டில் என, எல்லாவற்றையும் கொடுத்த பின்னரும்,
அமைச்சர்களால் பெரிய அளவில் கூட்டம் கூட்ட முடியவில்லையாம்.
தீபா
ஆதரவாளர் கூட்டம்: சமீபத்தில் கரூரில், தீபா ஆதரவாளர்கள் கூட்டிய
கூட்டத்திற்கு, ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட, அ.தி.மு.க.,வினர், கைக் காசை
செலவு செய்து, வந்தது, அரசியல் வட்டாரத்தை பீதிக்குள்ளாக்கி இருக்கிறது.
காலை நாலரை மணிக்கெல்லாம், தீபாவுக்காக போஸ்டர் ஒட்டி கேன்வாஷ் செய்யும்
தன்னெழுச்சி தொண்டர்கள், அமைச்சர்களின் நிலைமையை நினைத்து நினைத்து
சிரித்து மகிழ்கின்றனர்.இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
சென்னை : முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வம், அ.தி.மு.க.,வின் பொதுச்
செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு, இவ்வளவு பணிவு காட்ட
வேண்டியதில்லை. என்னதான், அவர் பணிவு காட்டியே வளர்ந்தவர் என்றாலும், அவர்
வகிக்கும் பதவி முதல்வர் பதவி. அவர், சசிகலாவின் காலில் விழுவது,
ஒட்டுமொத்த தமிழகமே, சசிகலாவின் காலில் விழுவதற்கு சமமானது. எனவே, அதை
உணர்ந்து பன்னீர்செல்வம் நடந்து கொள்ள வேண்டும் என, அவருக்கு
நெருக்கமானவர்கள் பலரும் தொடர்ந்து அவரிடம் வலியுறுத்தி வருகின்றனர். அதை
வலியுறுத்தி, பொதுமக்கள் பலரும், பன்னீர்செல்வத்துக்கு கடிதங்கள் எழுதி
உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதையெல்லாம் நன்கு அறிந்து கொண்ட பின்னரும்,
பன்னீர்செல்வம், சசிகலாவிடம் பணிவு காட்டுவதை நிறுத்திக் கொள்ளவில்லை.
இந்த சூழலில், சமீபத்தில், பன்னீர்செல்வத்தை சந்தித்த
தமிழக மூத்த அமைச்சர்கள் சிலர், நீங்கள் தமிழத்தின் முதல்வராக
இருக்கிறீர்கள்; உங்கள் பணிவு எல்லோரும் அறிந்ததுதான். அதற்காக, நீங்கள்
யார் காலிலும் விழ வேண்டியதில்லை என, சொல்லியிருக்கின்றனர்.அப்போது,
அவர்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறார் பன்னீர்செல்வம். அந்த விளக்கம்
வித்தியாசமாக இருக்க, அதனால்தான், அவர் அந்த இடத்தில்
உட்கார்ந்திருக்கிறார் என கூறியபடியே, திரும்பியுள்ளனர் அந்த
அமைச்சர்கள்.இது குறித்து, மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கமான அ.தி.மு.க.,
பிரமுகர்கள் கூறியதாவது:நான் விருப்பப்பட்டு, எந்த பதவியிலும் அமர்ந்து
கொள்ளவில்லை. முதல்வர் பதவி என்பது, என்னுடைய விசுவாசத்துக்குப் பரிசாக,
மறைந்த ஜெயலலிதா அளித்தது.
அதன் தொடர்ச்சியாகத்தான், தற்போது,
நெருக்கடியான கால கட்டத்தில் மூன்றாவது முறையாக
முதல்வராக்கப்பட்டுள்ளேன்.ஏற்கனவே முதல்வராக பொறுப்பேற்ற இரண்டு முறையும்,
என்னை விட எல்லா திறமையும்; அனுபவமும் பெற்ற மறைந்த ஜெயலலிதா,
அமைச்சரவையில் இல்லாமல் விலகி இருக்க, சட்டரீதியில் நேரிட்டது. அந்த
சமயத்தில், நான் தன்னிச்சையாக செயல்பட்டால், அதை அவரே கூட விரும்பாமல்
போகலாம். அப்படி செயல்படும் போது ஏற்படும் நெருக்கடியைத் தவிர்ப்பது
சிரமம். அவருக்கு இருக்கும் திறமைக்கு, அவர் கொடுத்த பதவியை வைத்து சவால்
விடுவது போல ஆகிவிடும்.
அப்படியொரு சூழலை ஏற்படுத்த நான்
விரும்பவில்லை. அதனால்தான், தமிழக நலன்கள் குறித்து, நான் அப்போது பெரிதாக
எடுத்துக் கொள்ளவில்லை. அமைதியாகவே இருந்தேன். ஆனால், இப்போது நிலைமை
அப்படியில்லை.
நான் யாருக்கும் பாத்தியப்பட்டவன் இல்லை.
அதனால்தான், தன்னிச்சையாக செயல்படுகிறேன்.நான் இப்படி செயல்படுவது கூட,
சிலருக்குப் பிடிப்பதில்லை. என்னை, பல வழிகளிலும் செயல்படவிடக்கூடாது என
முயற்சிக்கின்றனர். அதற்காக, நான் கவலைப்படுவது கிடையாது.
இப்போது
கூட, என்னை தொடர்ச்சியாக முதல்வராக செயல்பட அனுமதிக்க மாட்டார்கள்
என்பதுதான், கிடைத்திருக்கும் செய்தி.இந்த சூழ்நிலையில், முதல்வராக
இருக்கும் நானே, அவர்களுடைய காலுக்கு கீழே என வெளியுலகிற்கு காட்ட வேண்டும்
என்பதற்காகவே, என்னை குனிந்து வணக்கம் போடச் சொன்னவர்கள்; பின், காலில்
விழச் சொன்னார்கள். விழுந்தால் பிரச்னையில்லை என்பதை உணர்ந்தேன்;
விழுந்தேன்.இதனால், என் கவுரவம் குறைந்து போவதாக நான் உணரவில்லை. காலில்
விழ அனுமதிப்பவர்களுக்கு எதிராகத்தான், இது செல்லும் என்பதை அறிந்துதான்
அதை செய்தேன். தமிழகத்தின் முதல்வராக இருக்கும் ஒருவர், இன்னோருவர் காலில்
விழும்போது, மக்களின் வெறுப்பு முதல்வர் மீது செல்லாது; பரிதாபம்தான்
ஏற்படும்.
கோபம்; வெறுப்பு எல்லாம், காலில் விழச் செய்கிறவர்
மீதுதான் திரும்பும். இதையறிந்துதான், விரும்பியதை செய்து வருகிறேன்.
இதெல்லாம் நடக்க நடக்க, காலில் விழும்போது அதை தடுக்காததோடு, அதை விரும்பி
ஏற்பவருக்கு எதிராக மக்கள் மனநிலை திரும்பும் என்பதுதான் கணக்கு.மக்கள்,
அவர்கள் மீது கடும் அதிருப்தியில் இருப்பதற்கு, இதெல்லாம் கூட ஒரு காரணம்
என சொல்லி, மூத்த அமைச்சர்களிடம், சசிகலா காலில் விழுவதற்கு, காரணம்
சொல்லியிருக்கிறார் பன்னீர்செல்வம். இதை கேட்ட அமைச்சர்கள், அதிர்ச்சியில்
உறைந்து போய், பின் திரும்பி உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Dailyhunt
சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சிறுவாபுரி முருகன்!
சொந்த வீடு பற்றிய கனவு என்பது எல்லோருக்குமே இருக்கும். ஆனால்,
எல்லோராலும் அந்தக் கனவை அத்தனை எளிதாக அடைந்து விட முடிவதில்லை. கையில்
பணமிருந்தும் சொந்த வீடு அமையாதவர்கள் பலர் உண்டு. ஆனால், அப்படியெல்லாம்
நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் உள்ளத்தின் உந்துசக்தியாக இருந்து
உங்களுக்குரிய சொந்த வீட்டை அமைத்துத் தருகின்றேன் என்கிறார், சிறுவாபுரி
முருகன்.
ஆம், சிறுவாபுரிக்குச் சென்று உள்ளன்போடு
வணங்கினால், நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும் என்கின்றனர்
இக்கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள். குறிப்பாக சொந்தமாக வீடு
அமையவேண்டும் என இங்கு வேண்டிக்கொள்ள வருபவர்களே அதிகம்.
சென்னை,
கல்கத்தா நெடுஞ்சாலையில் 33 கிலோமீட்டர் பயணம் செய்தபின் இடது புறமாக
பச்சைப்பசேல் வயல்களைக் கடந்து 3 கிலோமீட்டர் போனால் சிறுவாபுரி முருகனை
தரிசிக்கலாம்.
சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை
வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். இவ்வூர்,
சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்றும் பல
பெயர்களால் அழைக்கப்படுகிறது. ராமாயண காலத்தில், ராமருக்கும் லவகுசனுக்கும்
போர் நடந்த இடம் என்றும் கூறப்படுகிறது.
பசுமை கட்டிநிற்கும்
நெல்வயல்களைக் கடந்து போனோமென்றால், சிறுவாபுரி கிராமத்தின் வடகிழக்கு
மூலையில் இருக்கிறது, அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி கோயில். கோயிலின் உள்ளே
கம்பீரமான ராஜ கணபதி, அருணாசலேஸ்வரர் மற்றும் அபீத குஜலாம்பாள்,
சூரியனார், சண்டிகேஸ்வரர், நாகார், ஆதிமூலர், நவக்கிரகங்கள் கால பைர்வர்,
அருணகிரிநாதர், மயூரநாதர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
ஐந்து
நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரமும் உயரமான கொடிமரமும் இந்தக் கோயிலின் சிறப்பு
அம்சங்கள். அருணகிரிநாதர் திருப்புகழில் இந்த திருத்தலம் பற்றி
பாடியுள்ளார். மூலவர் பால சுப்ரமணிய சுவாமி நான்கரை அடி உயரத்தில் நின்ற
திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பால சுப்பிரமணியரைத் தவிர அனைத்து தெய்வங்களும் மரகதப் பச்சைக்கல்லால்
ஆனவை. இதைபோல் வேறெங்கும் காணமுடியாது. கோயிலின் தல விருட்சமாக மகிழ மரம்
திகழ்கின்றது. திருக்கார்த்திகை, நவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம்
ஆகிய விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
நிலம், வீடு,
வீட்டு மனை என பூமி சார்ந்த எந்த விஷயம் என்றாலும் இங்கு வந்து வணங்கிச்
சென்றால், உடனே அவர்களுக்கு அமைவது நிதர்சனமான உண்மை.
தை மாதத்தின் முதல் நாள் இன்று பிறந்தது. தை பிறந்தால் வழிபிறக்கும்
என்று நமது முன்னோர்கள் சொல்வதுண்டு. இந்நாளை உத்தராயண புண்ணியகாலத் தொடக்க
நாள் என்றும் நம் முன்னோர்கள் சொல்வார்கள். இந்நாள், உலகமெங்கும்
பரவியிருக்கும் தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு மகத்தான பொங்கல்
திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
உழவுக்கு உயிரூட்டு விதமாகவும், இயற்கை
அன்னைக்கு நன்றி சொல்லும் விழாவாகவும் இந்நாள் தமிழர்களால்
கொண்டாடப்படுகிறது.
நாட்டில் தொடர்ந்து நல்ல மழை பெய்யவும், நாடு
செல்வ செழிப்போடு வளரவும், தை மாதம் முதல் நாளில் பொங்கலிட்டு இயற்கையை
வழிபடுவது தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார விழாவாக இருந்து வருகிறது.
இதுவே தமிழர்களின் பண்பாட்டுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
காலையில் சிக்கனம் பிடிக்க வேண்டியது நேரத்திலா... வேலையிலா...
வழக்கமாக, காலையில் மொபைலில் அலாரம் அடித்ததும் எடுத்து அணைத்துவிட்டு
தூங்கிவிடுபவர்கள்தான் அதிகம். என்றாவது ஒருநாள் கண் விழித்துப் பார்த்தால்
ஒரு மணிநேரம் முன்பே எழுந்திருப்போம். உடனே, இனிமேல் தினமும்,
முன்கூட்டியே எழுந்துவிட வேண்டும் எனும் சபதம் எல்லாம் எடுப்போம். சரி...
ரொம்பவே சீக்கிரம் எழுந்தாச்சு. எல்லா வேலைகளையும் மெதுவாக, நிதானமாக
செய்யலாம் என மனதுக்குள் ஒரு குரல் கேட்கும்.
அது சாத்தானின் குரல். உடனே அதை 'அப்பாலே போ' எனத்
துரத்தி விட வேண்டும். இல்லையெனில் நீங்கள் சீக்கிரம் எழுந்ததற்கு அர்த்தமே
இல்லாமல் போய்விடும்.
சீக்கிரமே எழுந்து விட்டதால், நியூஸ்
பேப்பர் படிப்பது தொடங்கி, அலுவலகத்திற்கு புறப்படுவது வரை எல்லாவற்றிலும்
சோம்பல் படர்ந்து விடும். எந்தெந்த விஷயங்களை சோம்பல் அமர்ந்து, உங்களின்
நேரத்தை தின்னும், அதை எப்படி சரி செய்யலாம் எனப் பார்ப்போமா?
பல்
துலக்குவதில் எத்தனை விதமான டெக்னிக்ஸ் இருக்கு என ட்ரை பண்ணுவோம்.
அப்படியே வாட்ஸ்அப்பில் என்னதான் வந்திருக்கு எனப் பார்க்க ஆரம்பிப்போம்.
வழக்கமான நாள் என்றால் GM, GD MG என விதவிதமான (!) குட் மார்னிங்
மெசேஜ்களைக் கண்டுகொள்ளாமல் கடந்துவிடுவோம். ஆனால் இன்றுதான் சீக்கிரமே
எழுந்தாச்சே என ஒவ்வொன்றாக பார்த்து, சிலருக்கு பதிலும் அனுப்புவோம்.
அவரும் பதிலுக்கு ஏதேனும் அனுப்பினால், மாற்றி மாற்றி மெசேஜ் அனுப்ப...
நிமிடங்கள் கரைந்துவிடும். அதனால், முக்கியமான மெசேஜ்களுக்கு மட்டும் பதில்
அளிப்பதையே தொடருங்கள்.
பிறகு, நியூஸ் பேப்பர். வழக்கமாக தலைப்புச்
செய்திகளிலேயே அவசரம் காட்டும் நாம், 'என்னது... இன்னைக்கு பேப்பர் 16
பக்கங்கள்தானா?' எனக் கேட்கும் அளவுக்கு வரி விளம்பரம் வரை படிப்போம்.
தேவையான, ஆர்வமான செய்திகளை மட்டுமே படித்தாலே நேரம் மிச்சமாகும்.
அடுத்தது,
சமையல். வழக்கமான நாள் என்றால் வெங்காயமும் தக்காளியும் 'இன்றைக்காவது
எங்களை விட்டுவிடேன்' எனக் கெஞ்சும். இன்றோ சீக்கிரம் எழுந்த மமதையில்
ஃப்ரிட்ஜில் இரண்டு முட்டைகள் இருக்கே! அதை வைத்து வித்தியாசமாக ஏதாவது
செய்யலாமா இல்லை, காலி ஃப்ளவர் பக்கோடா போட்டுப் பார்க்கலாமா... என ஆசைகள்
எழும். அதில் ஒன்றை முயற்சி செய்தாலும் அரை மணிக்கும் மேலே நேரம் போயே
போச்சு. அதனால், தினந்தோறும் செய்யும் சமையலில், நேரம் அதிகம்
எடுத்துக்கொள்ளாத சின்னதாக ஏதேனும் ஸ்பெஷல் மட்டுமே போதும்.
நெக்ஸ்ட்.
குளியல். இன்னைக்குத்தான் நேரமிருக்கே என நமக்குள் இருக்கும் பாத்ரூம்
சிங்கரை அழைத்துவிடுவோம். அவரும் சுவாரஸ்யமாக பாடிக்கொண்டே இருக்க, நீரோடு
நேரமும் வழிந்தோடி விடும். அதனால் சிங்கருக்கு ஒரு பாட்டுக்கு மட்டுமே
அனுமதி கொடுங்கள் போதும்.
அதிகாலையில் எழுந்தால் மனம் சந்தோஷமாக
இருப்பதுபோல, குழந்தைகள் மீது அன்பும் அதிகமாகி விடும். அதனால் அவர்களோடு
விளையாட ஆரம்பித்து, ஜாலியாக நேரம் நீண்டுக்கொண்டே போனால், குழந்தைகள்
குளிப்பதற்கு முன்பே, வாசலில் ஸ்கூல் வேன் ஹாரன் கேட்கும். அன்புக்கு
சின்னதாக அலாரம் வைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு, துணிகளை அயர்ன்
செய்யும்போது, நேரமிருக்கே என இன்னும் சில துணிகளைச் சேர்த்து அயர்ன்
செய்வது, மேக்கப்-ல் இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்வது என
ஒவ்வொன்றும் பத்து நிமிடங்களை எடுத்துக்கொள்ள, தினமும் பிடிக்கும் 8:50
பேருந்தைப் பிடிக்க முடியாமல் போய்விடும்.
எனவே, இன்றைக்கு ஒரு
மணிநேரம் முன்கூட்டியே எழுந்திருக்கிறோம். அதனால் வழக்கமான வேலைகளை
நிதானமாக செய்யத் திட்டமிட்டாலே பதட்டமில்லாத காலை பொழுது வாய்க்கும்.
- புதியவள்
Dailyhunt
சென்னையில் எப்படியிருக்கிறது சட்டம்-ஒழுங்கு? : போலீஸின் பலமும்-பலவீனமும்!
சென்னையில் சட்டம்- ஒழுங்கு எப்படியிருக்கிறது என்று
யாரையாவது பிடித்து நிறுத்திக் கேட்டால், ''ஏதோ இருக்குதுங்க" என்று
மட்டும் சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார்கள். சென்னை
பாதுகாப்பாகத்தான் இருக்கிறதா என்று கேட்டாலும் இதே பதில்தான் கிடைக்கும்.
ஜெயலலிதா முதல் மந்திரியாக இருந்தால் சட்டம்-ஒழுங்கு சிறப்பான முறையில்
இருக்கும் என்ற பொதுவான இமேஜ், 2011 - 16 - ம் கால கட்ட அ.தி.மு.க ஆட்சி
காலத்தின்போதே உடைந்து போனது. அதன்பின்னர் ஜெ. மறைவு, கட்சி - ஆட்சியில்
தலைமை மாற்றம் ஏற்பட்டது. இப்போது தங்களின் அன்றாட வாழ்க்கைக்கான
பாதுகாப்பை முழுமையாக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு
ஏற்பட்டிருக்கிறது.
முதல் மந்திரியாக ஓ.பி.எஸ் நீடிப்பாரா அல்லது
அந்த இடத்துக்கு வேறொருவர் வரப் போகிறாரா என்ற கேள்வியும் நடுவில் புகுந்து
பொதுமக்களை திணறலில் வைத்துள்ளது. இந்தக் குழப்பத்துக்கு இடையே போலீஸார்
நிலையோ இன்னும் மோசம்.
டெக்னாலஜி போலீஸ் கமிஷனர்...
2016-ல்
சென்னை போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் 3-வது முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வரலாற்றில் 3 முறை கமிஷனர் பதவி வகித்தவர்
ஜார்ஜ்தான். சென்னை போலீசாரால், 'டெக்னாலஜி கமிஷனர்' என்று அழைக்கப்படும்
ஜார்ஜ், முதல்முறை கமிஷனராகப் பொறுப்பேற்றதுமே, கமிஷனர் அலுவலகத்தில் 32
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
கேமராக்கள் அனைத்துமே புயல், மழை என எந்த சீதோஷ்ண நிலையிலும் துல்லியமாக செயல்படும் தன்மை கொண்டவை.
செயற்கைக் கோள் இணைப்புடன் செயல்படும் இந்த கேமராக்களின் பதிவுகளை, போலீஸ்
கமிஷனர் தன்னுடைய செல்போனில் எங்கிருந்தும் பார்க்கும்படி
கட்டமைக்கப்பட்டிருந்தது.போலீசார் ஷிப்டு முறையில் இந்த கேமரா காட்சிகளைப்
பார்த்து நடவடிக்கை எடுக்கும் விதமாக பிரத்யேகமான 24 மணி நேர கட்டுப்பாட்டு
அறையும் உள்ளது.
என்ன சொல்கிறார் ஜார்ஜ் ?
மூன்றாவது முறையாக சென்னையின் போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்ற ஜார்ஜ் அன்று
செய்தியாளர்களிடம் பேசியபோது, "சென்னையில் ஏற்கெனவே அமலில் உள்ள 3 வகையான
சிறப்புத் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த உள்ளோம்.
ஒவ்வொரு போலீஸ்
நிலைய எல்லையும், 3 செக்டார்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு செக்டாரிலும்
3 போலீசார் வீதம் 9 போலீசார் ரோந்து பணியில் இருப்பார்கள்.
இந்த
ரோந்துப்பணி 3 'ஷிப்ட்'களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு 'ஷிப்டிலும்' 8
மணி நேரம் வீதம் ரோந்து போலீசார் பணியாற்றுவார்கள். 380 கார்கள் மற்றும்
503 மோட்டார் சைக்கிள் வாகனங்கள் சென்னை போலீஸ் செயல்பாட்டில் உள்ளன.
முதியோர் உதவி மையத்துக்காக 1253 என்ற இலவச தொலைபேசி இணைப்பு
ஒதுக்கப்பட்டுள்ளது. (ஜனவரி 12, 2017 இரவு 12.17-க்கு நாம் இந்த எண்ணை
தொடர்புகொண்ட போது, "என்ன உதவி வேண்டும்?" என்று தூக்கக் கலக்கம் இல்லாத
பெண் காவலர் குரல் கம்பீரமாகக் கேட்டது) இந்த இலவச தொலைபேசியில்
தொடர்புகொண்டு பேசினால் போலீசார் தேவையான உதவிகளை தேடி வந்து செய்வார்கள்.
வீட்டின் உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் விவரங்களை புகைப்படத்துடன்
அருகிலுள்ள போலீஸ் நிலையங்களில் தாமாக முன்வந்து பதிவுசெய்ய வேண்டும். இது
வீட்டு உரிமையாளர்களுக்கும் நல்லது.
வெளிமாநிலங்களிலிருந்து
சென்னைக்கு வேலை தேடி தினமும் ஆட்கள் வருகிறார்கள். இவர்களுக்கு வேலை
கொடுப்பவர்கள் இவர்களின் பெயர் விவரம் மற்றும் முகவரி, புகைப்படம்
போன்றவற்றை சேகரித்து வைத்திருக்க வேண்டும். முதியோர் பாதுகாப்பு, ஒவ்வொரு
'ஷிப்டிலும்' 8 மணி நேர ரோந்து, வாடகைதாரர்கள் மற்றும் வெளி மாநில கூலித்
தொழிலாளிகளின் பெயர் விவரங்களை போலீசாருக்கு அளித்தல் ஆகிய நடைமுறையில்
உள்ள மூன்று திட்டங்களும் மேலும் வலுவாகக் கொண்டு செல்லப்படும்." என்றார்.
திணறும் போலீசார், பின்னணி இதுதான்...
கேரள
மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த எஸ்.ஜார்ஜ், எம்.ஈ., எம்.டெக்.,
எம்.பி.ஏ., எம்.பில் பட்டங்களைப் பெற்றவர். 1984-ம் ஆண்டு பேட்ஜ்
(வரிசைப்பிரிவு) ஐ.பி.எஸ். அதிகாரி. 'அட்வான்ஸ்டு கமிஷனர்' என்ற பெயரை
போலீசாரிடம் ஜார்ஜ் பொதுவாகப் பெற்றிருந்தாலும் பொதுமக்களிடமும், கீழ்
பணியாற்றும் போலீசாரிடமும் அது முழுதாக எடுபடவில்லை. காரணம்....
அனைவரிடமும் ஜார்ஜ் கடைப்பிடிக்கும் இடைவெளிதான். ரெவ்யூ மீட்டிங்கே இல்லை...
மாதாந்திர க்ரைம் ரிவ்யூ மீட்டிங் என்பது போலீசில் கட்டாயமான ஒன்று.
ஆனால், தற்போதைய நிலையில், 'அப்படி ஒரு மீட்டிங் காவல் துறையில்
இருக்கிறதா?' என்றுதான் இப்போது புதிதாகப் பணிக்கு வந்த போலீசார்
கேட்கிறார்கள். அந்த அளவுக்கு ஆண்டுக் கணக்கில் க்ரைம் ரிவ்யூ மீட்டிங்
என்பதே நடக்காமல் இருக்கிறது. ராதாகிருஷ்ணனின் 3 மணிநேர மீட்டிங்...
சென்னை
போலீஸ் கமிஷனராக ராதாகிருஷ்ணன் இருந்தபோது, மாதம் தவறாமல் இப்படிப்பட்ட
ரிவ்யூ மீட்டிங் நடந்தே தீரும். அந்த மீட்டிங்கில், கமிஷனருக்கு அடுத்த
கீழ்நிலை அதிகாரிகளான கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள்
மற்றும் உதவி கமிஷனர்கள் கண்டிப்பாக ஆஜராகியே தீரவேண்டும்.
ரிவ்யூ மீட்டிங் பலன் என்ன ?
நிலுவையில் உள்ள எஃப்.ஐ.ஆர்., பொதுமக்களின் புகார் மீதான நடவடிக்கை
பட்டியல், க்ரைம் ரேட் விகிதாச்சாரம், ஆர்.டி.ஐ கேள்வி - பதில்கள்,
முடிக்கப் பட்ட வழக்குகள், நிலுவை வழக்குகள், ரவுடிகளின் பட்டியல்
சரிபார்ப்பு, போலீசார் நலன், காவலர் குடியிருப்பு இடமாற்ற மனுக்கள்...
இப்படி பல விஷயங்கள் அங்கே விவாதிக்கப்படும்.
முடிக்காத வழக்குகளின்
பின்னணி என்ன... வழக்கில் என்ன சிக்கல், யார் தலையீடு போன்றவைகளை போலீஸ்
கமிஷனர் சம்பந்தப்பட்ட உதவி கமிஷனரிடம் நேரடியாகவே அந்த மீட்டிங்கில்
கேட்பதும், அதற்கு உதவி கமிஷனர் பதில் அளிப்பதும் சாதாரணமான ஒரு நிகழ்வு.
பல நேரங்களில் குறிப்பிட்ட வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டரையே
கமிஷனர் கூப்பிட்டு, 'வழக்கின் தன்மையைச் சொல்லுங்கள்' என்று கேட்பார்.
'அந்த
வழக்கில் இப்படிச் செய்வதில் சிக்கல் என்றால் இந்த மாதிரிச் செய்யுங்கள்'
என்று கமிஷனரே இன்ஸ்பெக்டர் லெவலில் உள்ள கீழ்நிலை அதிகாரிக்கு ஆலோசனை
சொல்லும் காட்சிகளும் அங்கே அரங்கேறும். போலீஸ் கமிஷனரே நம்மிடம் பேசி
ஆலோசனையும் வழங்குகிறாரே என்ற உற்சாகத்தில் காக்கிகள் இன்னும் விறைப்பாய்
பணியில் கவனம் செலுத்துவார்கள்.
கமிஷனரின் அதிரடியான கேள்விக்கு
பதில் சொல்ல தயாராக இருக்க வேண்டுமே என்பதற்காகவே ரிவ்யூ மீட்டிங்கில்
கலந்துகொள்ள உதவி கமிஷனர்கள் போகும்போது, தங்கள் லிமிட் இன்ஸ்பெக்டரையும்
அங்கே வரச் சொல்லிவிடுவார்கள். இன்ஸ்பெக்டர்களும் மீட்டிங் ஹால் வெளியே
காத்திருப்பார்கள்.
கமிஷனரின் கேள்வியைப் பொறுத்து இன்ஸ்பெக்டர்கள்
உள்ளே போய் விளக்கம் கொடுக்க வேண்டிய சூழலும் அங்கே இருக்கும்.
அப்படிப்பட்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ரிவ்யூ மீட்டிங் என்பதே
தற்போது மறக்கடிக்கப்பட்டுள்ளது. சிட்டி போலீஸ் கமிஷனர் - போலீசார் இடையே
நெருக்கமான உறவை வளர்த்தெடுத்தது இந்த ரிவ்யூ மீட்டிங்குகள்தான்.
அப்படிப்பட்ட மீட்டிங்குகள் இதுவரையில் நடத்தாமலே இருப்பதுதான் தகவல்
பரிமாற்றக் கப்பலில் விழுந்திருக்கும் மிகப் பெரிய ஓட்டை. அந்த ஓட்டையின்
வழியாகத்தான் பொதுமக்களின் நிம்மதியைக் கெடுக்கும் குற்றங்கள் நுழைந்து
விடுகின்றன.
சென்னை போலீசாரின் பலம் தெரியுமா?
சென்னையில்
சட்டம் -ஒழுங்கைக் காப்பாற்ற 134 சட்டம் -ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன.
128 குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் உள்ளன. மொத்தம் 262 இன்ஸ்பெக்டர்கள்
இந்தக் காவல் நிலையங்களை வழிநடத்துகின்றனர்.
பெண்கள் தொடர்பான
புகார்களைப் பெற 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் சென்னையில்
இயங்குகின்றன. 35 பெண் இன்ஸ்பெக்டர்கள் பணியில் உள்ளனர்.
போக்குவரத்துப்
புலனாய்வுப் பிரிவுக்கு 80 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சென்னை போலீஸ் கமிஷனர்
அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவின் 10 பிரிவுக்கும் தலா ஒரு
உதவி கமிஷனர் ஒவ்வொரு பிரிவுக்கும் 3 முதல் 6 வரையிலான இன்ஸ்பெக்டர்கள்
பணியாற்றுகின்றனர்.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு நான்கு
மண்டலங்களில் நான்கு கூடுதல் துணை கமிஷனர்கள் ஒரு மண்டலத்துக்கு தலா ஐந்து
இன்ஸ்பெக்டர்கள், பத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியாற்றுகின்றனர்.
சென்னையின்
சட்டம்- ஒழுங்கைக் காப்பாற்ற 5கூடுதல் கமிஷனர்கள், 12 துணை கமிஷனர்கள், 40
உதவி கமிஷனர்கள், தலைமையக, ஆயுதப்படை கமிஷனர், உளவுப்பிரிவு, க்ரைம்,
மத்தியக் குற்றப்பிரிவு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகவும் சில
பிரிவுகளில் கூடுதலாகவும் துணை கமிஷனர்கள் பணியில் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு
காவல் நிலையத்துக்கும் ஒரு உளவுப் போலீஸ், 'லெவல்-டூ' எனப்படும் கூடுதல்
கமிஷனரின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரும் மண்டல உளவுப் போலீசார் ஆகியோரும்
தனியாக சுற்றிச்சுழல்கின்றனர்.
காவல் துறையில் உள்ள இத்தனை
அதிகாரிகளும் சொல்வதை அப்படியே ஏற்று கடமையாற்ற சென்னையில் (ஆயுதப்படை-
குதிரைப்படை சேர்த்து) 21, 500 போலீசார் எப்போதும் தயார் நிலையில்
இருக்கிறார்கள்
. என்னதான் முடிவு, சொல்லுங்கள் கமிஷனரே?
இத்தனை
வசதிகள் இருந்தும் சட்டம் - ஒழுங்கில் 100 சதவிகித சாதனை இலக்கை எட்ட
முடியாமல் திண்டாடுகிறது காவல்துறை. திட்டமிட்டு நடைபெறும் ஆதாயப்
படுகொலைகளின் எண்ணிக்கை வருடம்தோறும் கூடிக் கொண்டே போகிறது.
தொடர்
கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 'உலகளாவிய புகழ்பெற்ற
தமிழ்நாட்டுப் போலீசாரின் புலனாய்வுத் திறமைக்கு இப்படியான தொய்வுநிலை
சிலகாலம் இருந்தது' என்றுகூட வரலாற்றில் வந்து விடக்கூடாது.
விரைந்து ஒரு முடிவெடுங்கள் மிஸ்டர் ஜார்ஜ்! - ந.பா.சேதுராமன்
Dailyhunt
தலைநகரை தவிக்கவிடும் தண்ணீர்ப் பஞ்சம்! - அதிரும் அரசின் ஆய்வு முடிவுகள்
பொங்கல் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் மனநிலையில் விவசாயப்
பெருமக்கள் இல்லை. ' அனைவருக்கும் மகிழ்ச்சியான ஆண்டாக, 2017 இருக்க
வேண்டும்' என பரிமாறப்படும் வாழ்த்துகளில் எந்தவித உணர்வுகளும் இல்லை. ஆம்,
' இந்த ஆண்டு வறட்சியான ஆண்டாக இருக்கப் போகிறது' என்பதை சொல்லாமல் சொல்லி
இருக்கிறது வானிலை ஆய்வு மையம்.
10 சதவீதம்தான் தண்ணீர்!
தென்மேற்குப் பருவமழையும் தமிழகத்துக்குப் பெரிய அளவில் கை கொடுக்காத
நிலையில், ' வட கிழக்குப் பருவமழை காலமும் முடிவுக்கு வந்து விட்டது' என்ற
அறிவிப்பை ஜனவரி 3-ம் தேதி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. இயல்பாக
பெய்யும் மழை அளவைவிட, 62 சதவீதம் குறைவாக வட கிழக்குப் பருவமழை
பெய்திருக்கிறது என்பது உண்மையிலேயே வேதனைக்குரிய செய்திதான்.
மிகக் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டிய
கட்டாயத்தில் இருக்கிறோம். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள்,
வறண்டு போய் வெடித்துக் கிடக்கின்றன. எஞ்சியிருக்கும் ஒரு சில நீர்
ஆதாரங்களிலும், சொற்ப அளவு நீரே இருப்பதைக் காண முடிகிறது. இந்தக் கோடையை
சமாளிக்க இது நிச்சயம் போதுமானதாக இருக்காது. கடந்த 140 வருடங்களை
ஒப்பிடும் போது, தமிழகத்தில் 2016-ம் ஆண்டு மிகக் குறைந்த அளவு மழை
பெய்திருக்கிறது என்கிறது வானிலை ஆய்வு மையம். ஒரு வருடத்துக்கான சராசரி
மழை அளவான 920 மில்லிமீட்டரில், சுமார் பாதி அளவே, அதாவது 543
மில்லிமீட்டரே மழைப் பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு சென்ற
1846-வது வருடம் 534 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருக்கின்றது.
அப்படியானால், கடந்த 140 வருடங்களில் பார்க்காத கடுமையான தண்ணீர் பஞ்சத்தை
நாம் எதிர்கொள்ளப் போகிறோம். அதற்கான அறிகுறிகளும் தொடங்கி விட்டன.
கடந்த
சில நாட்களாகவே, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தின் பல பகுதிகளில்
குழாய்களில் விநியோகம் செய்யப்படும் தண்ணீர் அளவில் மாற்றம்
ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 83 கோடி லிட்டர் தண்ணீர்
விநியோகம் செய்து வந்த, சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம், இந்த
அளவில் 30 சதவீதத்தைக் குறைத்துவிட்டு, ஜூன் மாதம் வரையில் நிலைமையை
சமாளிக்க திட்டமிட்டுள்ளது. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான
பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், இரட்டை ஏரி ஆகியவற்றில் சுமார் 10
சதவிகிதம் மட்டுமே தண்ணீர் உள்ளது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த
நான்கு ஏரிகளிலும் 9,795 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பி இருந்தது.
இதில், வெறும் 1626 மில்லியன் கனஅடி அளவுக்கே தண்ணீர் உள்ளது. இவை
நான்கும்தான் சென்னை நகரின் 50 சதவீத தண்ணீர்த் தேவையை நிவர்த்தி செய்யும்
நீர்நிலைகள். இவற்றிலேயே இந்த நிலை என்றால், வரக்கூடிய அபாயத்தை உணர்ந்து
கொள்ள முடியும். கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நெம்மேலி, மீஞ்சூர்
ஆகிய நிலையங்களிலும், வழக்கமான அளவை விட 30 சதவீதம் குறைவாகவே, தண்ணீர்
சுத்திகரிக்கப்படுகிறது. வர்தா புயல் காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்பக்
கோளாறுகளும், அடிக்கடி ஏற்படும் மின் தடையுமே இந்த உற்பத்திக் குறைவுக்குக்
காரணமாகச் சொல்கின்றனர். ' இன்னும் சில தினங்களில் இந்தக் கோளாறுகள்
சரிசெய்யப்பட்டு விடும்' என்கின்றனர் அதிகாரிகள்.
வறண்டு போகும் வீராணம்
வீராணம்
கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் கிடைக்கும் தண்ணீரும் இந்த வருடம்
போதிய அளவு கிடைக்கவில்லை. காவிரித் தண்ணீர் மிகச் சொற்பமான அளவே திறந்து
விடப்பட்டதால், வீராணம் ஏரியும் தண்ணீர் இன்றி காட்சியளிக்கிறது. தற்போதைய
நிலவரப்படி, 269 மில்லியன் கனஅடி அளவே வீராணம் ஏரியில் தண்ணீர் இருக்கிறது.
சென்ற வருடம் இதே காலகட்டத்தில், 482 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது.
அதனால், கடலூர் முதல் பண்ருட்டி வரை அமைக்கப்பட்டுள்ள ராட்சத போர்வெல்கள்
மூலம் கிடைக்கும் தண்ணீரைத் தலைநகருக்குக் கொண்டு வருவதற்கான ஆலோசனைகளும்
தீவிரமாக நடந்து வருகின்றன. சென்னை குடிநீர் வாரியம் விநியோகிக்கும்
தண்ணீர், இப்போதே பல இடங்களில் தினமும் வருவதில்லை என்பதால், பணம் கொடுத்து
லாரித் தண்ணீரை வாங்கத் தொடங்கிவிட்டனர்.
கோடைக் காலம் தொடங்க இன்னும்
மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில், தற்போதுள்ள தண்ணீர் இருப்பு அச்சத்தை
அதிகப்படுத்துவதாக உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, அடுத்த ஐந்து
மாதங்களுக்கு மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால், தண்ணீர்
பஞ்சத்தை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும்.
அபாயத்தை உணர்த்திய ஆய்வு
தலைநகரின்
தண்ணீர்த் தேவைக்காக, அண்டை மாவட்டமான திருவள்ளூரிலிருந்து தண்ணீர்
பெறப்படுகிறது. அதுவும், விவசாய நிலங்களில், ராட்சத போர்வெல்கள்
போடப்பட்டு, அதன்மூலம் கடந்த சில வருடங்களாகவே தண்ணீர் எடுக்கப்பட்டு
வருகிறது. இதுநாள் வரை ஆபத்தை உணராமல் இருந்த திருவள்ளூர் மக்கள், நிலத்தடி
நீர்மட்டம் ஒரேயடியாகக் குறைந்துவருவது கண்டு அதிர்ந்து போய்
இருக்கிறார்கள். இருப்பினும், தண்ணீரை விற்று ருசி கண்ட போர்வெல்
உரிமையாளர்களும், லாப வெறி கொண்ட லாரி உரிமையாளர்களும் போட்டி போட்டுக்
கொண்டு தண்ணீரை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.
சென்னையில் சராசரியாக 12
அடியாக இருக்கும் நிலத்தடி நீர்மட்டம், திருவள்ளூரில் 16 அடியாகக்
குறைந்துவிட்டது என்றால், நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
தமிழகத்தின்
தலைநகரத்திலும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் படு
வேகமாக சரிந்து கொண்டே செல்கிறது. சென்னை நகரின் பரப்பளவான, 426 சதுர கிலோ
மீட்டரில் 145 கண்காணிப்பு கிணறுகளில் குடிநீர் வாரியம் அண்மையில் ஆய்வு
ஒன்றை நடத்தியது. அதன்படி, 2015 டிசம்பரில் இருந்த நிலத்தடி நீர்மட்டம்
அளவுடன் ஒப்பிடும்போது, கடந்த டிசம்பர் நிலத்தடி நீர்மட்ட அளவு 0.75
மீட்டர் முதல் 2.92 மீட்டர் வரை சரிந்துள்ளது. வடசென்னையில் நிலத்தடி
நீர்மட்டம் திகைக்க வைக்கும் வகையில் குறைந்துள்ளது. மொத்தம் உள்ள 15
மண்டலங்களில், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம்
ஆகிய பகுதிகளில் 2 மீட்டர் முதல் 2.5 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம்
குறைந்துள்ளது. இதனால், வடசென்னையைப் பொறுத்தவரை, லாரிகளின் வருகைக்காக
குடங்களுடன் மக்கள் திரளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
செய்வீர்களா...நீங்கள் செய்வீர்களா?
பஞ்சத்தின்
அபாயத்தை உணர்ந்து, ' தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யும்படி' குடிநீர்
வாரியம் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ' குழாய் மூலம் விநியோகம்
செய்யப்படும் தண்ணீரை குடிநீர் மற்றும் சமையல் தேவைகளுக்கு மட்டுமே
பயன்படுத்த வேண்டும்' என்கிறார்கள். ஆனால், நம் மக்களுக்கோ இந்த
அறிவிப்பின் முக்கியத்துவம் தெரியவில்லை. அடுத்த மழை வரும் வரை, அதாவது
ஜூன் மாதம் வரையில், நிலத்தடி நீரின் பயன்பாடு அதிகரிக்கப் போகிறது.
நிலத்தடி நீர்மட்டம் ஏற்கெனவே கணிசமாக குறைந்துள்ள நிலையில், மக்கள்
போர்வெல் குழாய்கள் மூலம் தண்ணீர் எடுப்பது அதிகமானால், நிலத்தடி
நீர்மட்டம் மேலும் குறையக்கூடும். மழை இயல்பை விடக் குறைவாகப்
பெய்திருக்கிறது என்பது ஒரு புறம் இருக்க, பெய்த மழையைக் கூட சேமித்து
வைப்பதன் முக்கியத்துவதை உணராதவர்களாக நாம் இருக்கிறோம்.
மழைக்காலங்களில்,
நகர்ப்புற சாலைகளில், கழிவு நீரைப் போல தேங்கி நிற்கும் மழைத் தண்ணீர்,
நீர் நிலைகளுக்கு சென்று சேர வேண்டிய உயிர் நீர் என்பதை நாம் ஒருபோதும்
உணர்ந்ததே இல்லை. இந்தத் தண்ணீர் எப்போது வற்றும், எப்போது இந்த சாலை
இயல்பு நிலைக்குத் திரும்பும் என்ற எரிச்சலோடுதான் கடந்து செல்கிறோம்.
ஆனால்,
அந்த எரிச்சலும் கோபமும் மழைத்தண்ணீரை முறையாக சேமிக்கத் தெரியாத நம்
மீதும், மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகளை முறையாக ஏற்படுத்தாத
அரசாங்கத்தின் மீதும்தான் வர வேண்டும். மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை
வீடுகள்தோறும் செயல்படுத்தி இருந்தால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து
கொண்டே போவதையும் தடுக்கலாம். இது போல சாலைகளில் நீர் தேங்கி நிற்பதையும்
தவிர்க்கலாம். மக்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. நமது வீட்டு மரத்தின்
கனியை யாராவது பறித்தால், பார்த்துக்கொண்டு பேசாமல் அமைதியாக
இருக்கின்றோமா? அதே அக்கரையை வீட்டின் மழை நீர் சேகரிப்பிலும்
காட்டியிருந்தால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கும். ஒவ்வொரு வருடமும்
குறைவாக மழை பெய்யும் தருணங்களில், கோடைக்கால தண்ணீர்த் தேவையை சமாளிக்க
அரசாங்கம் திணறுகிறது.
ஒவ்வொரு ஊரிலும் காலிக் குடங்களுடன் போராட்டம்
நடத்தும் மக்களைப் பார்க்க முடிகிறது. தண்ணீருக்காக ஏன் வீதிகளில் இறங்கி
போராடுகிறோம் என்பதை மக்களும் உணரவில்லை. அரசாங்கமும் உணரவில்லை. தண்ணீரை
நாம் சேமிப்பதும் இல்லை, சிக்கனமாக பயன்படுத்துவதும் இல்லை. டெபிட்
கார்டுகளுடன் பணம் எடுப்பதற்காக, ஏ.டி.எம் வாசல்களில் நிற்பது போல,
தினந்தோறும் தண்ணீருக்காக காத்திருக்கும் நிலை ஏற்படத்தான் போகிறது.
மக்கள் மனங்களில் புரட்சி ஏற்பட்டால் மட்டுமே வறட்சியை வெல்ல முடியும்!
- ஜெனிஃபர் வில்சன்
எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்தநாள் வரும் 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
அவரின் பிறந்த தினத்தை பொதுவிடுமுறையாக தற்போது அறிவித்துள்ளது தமிழக அரசு.
அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு 17-ம் தேதி பொதுவிடுமுறையாக
அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விட
வலியுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் 5
நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.
மருத்துவ கவுன்சில் தலைவரை பதவி நீக்கம் செய்த தீர்மானம் ரத்து
மருத்துவ கவுன்சில் தலைவரை பதவி நீக்கம் செய்த தீர்மானம் ரத்து
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவரை பதவி நீக்கம் செய்து
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் செந்தில்
தாக்கல் செய்துள்ள மனுவில், தனது தேதியிடப்படாத ராஜினாமா கடிதத்தின் மூலம்,
துணைத் தலைவராக இருந்து வரும் ஜெயலாலை, தலைவர் பொறுப்பை கவனிக்கச்
செய்யும் வகையில் மருத்துவ கவுன்சில் செயற்குழு தீர்மானம்
நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தேதியிடப்படாத தனது கடிதத்தின்
மூலம் தன்னிச்சையாக செயற்குழு இந்த தீர்மானத்தை நிறேவேற்றியுள்ளதாகவும்,
அதனால், இதனை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மனுவில்
கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், செயற்குழு கூட்டம்
கூட்டப்பட்டதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனக் கூறி, டாக்டர் செந்திலின்
பதவியை பறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அதிரடியாக ரத்து செய்து
உத்தரவிட்டது.
Wish you a very Happy Pongal 2017 Pot rice to Sun God Sugarcane to Cow and Ox Sweet rice to You and Me Good milk to Friends and Family !! Happy Pongal to all!
Friday, January 13, 2017
Caste a decisive factor in the selection of vice-chancellor?
By Ram M Sundaram | Express News Service | Published: 12th January 2017 02:08 AM
CHENNAI: From casteism to favouritism, the search committee formed a year ago to shortlist potential candidates as the next vice chancellor of the University of Madras seems to have a long list of out-of-syllabus issues to deal with before getting down to work.
As they dabble with these concerns, rarely meeting since it was constituted on January 8, 2015, the actual matters of importance including hundreds of PhD candidates awaiting degrees, new colleges waiting for affiliation, approval of as many as 75 new courses, and promotion for teaching faculty are hanging in balance, said sources.
Highly-placed sources told Express that all three committee members have backed candidates from their own community, which resulted in a logjam. “The convener of search committee recently wrote to the Governor, who is the Chancellor of the university, recommending the name of a senior academician without convening a meeting to get the consent of other members,” sources alleged.
The academician in question is believed to be backed by a senior IAS official, who was influential during the DMK regime between 2006 and 11, sources added.
Sources from the university syndicate said though the Chancellor has instructed to complete the process and come up with three names before the second week of January, the committee has never met since March.
However, rejecting these as baseless allegations, a committee member told Express that there was no difference of opinion between the members.
The other all-important committee, the convener committee, which is vested with the same powers as the vice chancellor, is also in shambles. Formed after the then vice chancellor retired on January 2, 2015, the convener committee has also not performed effectively.
“Affiliation of three new colleges and approval for 75 new courses in various government-aided and self-financing colleges for evening shift has been put on hold,” the syndicate member said, adding that the convener committee has not even constituted an affiliation committee towards this purpose.
Responding to this, a university official said that this panel can’t disburse funds in advance, consequently most development activities were moving at a snail’s phase.
Bhogi smog: Arrival of flights in Chennai airport hit for 90 minutes
By Express News Service | Published: 13th January 2017 12:01 PM
CHENNAI: A total of nine international and domestic flights were diverted to airports in Bangalore, Hyderabad and Kochi due to poor visibility in the city following smog triggered by burning of Bhogi bonfires.
The poor visibility due to Bhogi was felt for more than 90 minutes and the first diversion started with Oman Air’s Muscat-Chennai flight, which was diverted to Hyderabad at 6.20 AM.
The Air India’s flight from Sharjah-Trivandrum-Chennai too was diverted to Bangalore. It was to arrive here at 7.10 AM.
The Spicejet flight from Hyderabad-Chennai was diverted to Bangalore. The flight from Kualu Lumpur to Chennai was diverted to Hyderabad. It was to arrive at 7.57 AM.
Similarly, flights from Abu Dhabi were diverted to Hyderabad. Flights from Colombo were also diverted, airport sources said.
மாசில்லாத போகியைப் போல காசில்லாத பொங்கலா? களைகட்டாத பண்டிகை
By DIN | Published on : 13th January 2017 12:23 PM
சென்னை: மாசில்லாத போகிப் பண்டிகையைக் கொண்டாட வலியுறுத்தி வந்த நிலையில், காசில்லாத பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
போதிய மழையின்மை, வறட்சி, விவசாயிகளின் மரணங்கள் மற்றும் ஜல்லிக்கட்டுக்குத் தடை போன்ற காரணங்கள், பொங்கல் பண்டிகையை தித்திக்க விடாமல் செய்து விட்டன.
எப்போதும் போல பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்குச் செல்வோர் பேருந்துகளிலும், ரயில்களிலும் இடம் பிடித்தாலும், ஏதோ ஒரு குறை, அவர்களது மனங்களில் உற்சாகம் இடம் பிடிக்காமல்செய்து விட்டது.
ஊருக்கே படியளக்கும் விவசாயிகள் நாளைய பொங்கலை எவ்வாறு கொண்டாடுவது என்று கலங்கி உள்ளனர். வறட்சி கோரத் தாண்டவமாடும் விவசாயிகள், பொங்கல் கொண்டாடும் சூழலே இந்த ஆண்டு இல்லை என்று மனம் வெதும்பியுள்ளனர்.
நகரப் பகுதிகளில் ஒரு சில ஆண்டுகளாகவே, பொங்கல் பண்டிகை அதற்குண்டான களையை இழந்து, தொலைக்காட்சி முன்பு தொலைந்து கொண்டே போகிறது. அதையும் தாண்டி, போதிய மழையும் இல்லாமல் வறட்சி காரணமாக இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை களை கட்டவில்லை என்றே தோன்றுகிறது.
கடந்த ஆண்டுகளில் இருந்ததை விடவும், இந்த ஆண்டு கரும்பு விற்பனை சரிந்திருப்பதாகவே வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். போகிப் பண்டிகை வரை மிகக் குறைவான கரும்புகளே விற்பனையாகியிருப்பதாக மொத்த வியாபாரிகள் கூறியுள்ளனர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், மக்கள் கையில் பண நடமாட்டம் குறைந்ததும், இந்த பொங்கல் பண்டிகை களைகட்டாமல் போகக் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது.
சிலம்பு விரைவு ரயில் சேவை: செங்கோட்டை வரை நீட்டிப்பு
சென்னை எழும்பூர் -மானாமதுரை வரை இயக்கப்பட்டு வந்த சிலம்பு விரைவு
ரயில் சேவை ஜனவரி 14 -ஆம் தேதி முதல் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படும் என
தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட
செய்திக்குறிப்பு:
ரயில் எண் 16181: சென்னை எழும்பூரில் இருந்து இரவு
8.20 மணிக்குப் புறப்படும் சிலம்பு விரைவு ரயில், ஜனவரி 14 -ஆம் தேதி முதல்
மானாமதுரைக்கு காலை 5.30 மணிக்கு சென்றடையும்.
மானாமதுரையில் இருந்து
5.40 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் நரிக்குடி, திருச்சுழி,
அருப்புக்கோட்டை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி,
ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பம்புக்கோயில்
கடையநல்லூர், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு காலை 10.20 மணிக்கு
சென்றடையும்.
இதேபோல் மறுமார்க்கத்தில் (ரயில் எண் 16182) அதாவது
செங்கோட்டையில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.45
மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
Dailyhunt
ஏ.டி.எம். மிஷினில் ஒரு பக்கம் அச்சாகாமல் வந்த 500 ரூபாய் நோட்டு
மும்பை:
மத்திய பிரதேச மாநிலத்தில் ஏடிஎம் மிஷினில் பணம்
எடுத்த ஒருவருக்கு இரண்டு 500 ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் அச்சாகாமல்
வெற்றுத்தாளாக வந்துள்ளது.
மத்திய பிரதேசம் கார்கோன் மாவட்டம்
செகோன் கிராமத்தை சேர்ந்த ஹேமந்த் சோனி என்பவர் கடந்த வாரம் பொதுத்துறை
வங்கியொன்றின் ஏடிஎம் மையத்திலிருந்து 1500 ரூபாய் பணம் எடுத்தார்.
இதில்
இரண்டு 500 ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் அச்சாகாமல் வெற்றுத்தாளாக
வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஹேமந்த் இதுகுறித்து சம்பந்தப்பட்ட
வங்கியிடம் புகார் கொடுத்தார்.
இதற்கு அந்த வங்கி அதிகாரிகள் இந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெற்றதாக விளக்கம் அளித்தனர்.
மேலும் "வாடிக்கையாளரின் புகாரைத்
தொடர்ந்து அந்த நோட்டுகளை மாற்றிவிட்டோம். தற்போது ரூபாய் நோட்டுகளை நன்கு
சோதனை செய்த பின்னரே ஏடிஎம்-களில் நிரப்புகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.
Dailyhunt
ரூ.8 கோடி பதுக்கியதாக தொடந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சேகர் ரெட்டி உள்பட 5 பேர் மனு: சிபிஐ.க்கு நோட்டீஸ்
ரூ. 8 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கியதாக பதிவு செய்த
வழக்கை ரத்து செய்யக்கோரி தொழிலதிபர் சேகர் ரெட்டி தொடர்ந்த வழக்கில் சிபிஐ
பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோதமாக ரூ.34 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருந்த்தாக வருமான வரித்துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதில்
தொடர்புடைய சேகர் ரெட்டி, பிரேம்குமார், சினிவாசலு, ரத்தினம், ராமசந்திரன்
ஆகியோர் மீது டிசம்பர் 19-ஆம் தேதியும், டிசம்பர் 30- ஆம் தேதியும் என
இரண்டு தனித்தனி வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது.
ஏற்கெனவே ஒரு
வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அதே போன்ற புகாரில் புதிய வழக்குபதிவு
செய்யப்பட்டுள்ளதால், ரூ.8 கோடி வழக்கில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்-ஐ
ரத்து செய்யக்கோரி ஐந்து பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.பாஸ்கரன்,
மனு குறித்து சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜனவரி
23- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Dailyhunt
தோண்டத் தோண்ட சோகம்!
By ஆசிரியர் |
Published on : 12th January 2017 01:33 AM
ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டம் லால்மாடியா என்கிற இடத்திலுள்ள
நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 50 பேர்
இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருக்கிறார்கள். இதுவரை இவர்களில் 18
பேருடைய சடலங்கள் தேடி எடுக்கப்பட்டிருக்கின்றன. மீட்புப் பணி கடந்த ஒரு
வாரத்துக்கும் மேலாகத் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது.
முந்நூறு அடி ஆழத்தில் நிலக்கரியைத் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தபோது,
சுரங்கத்தின் ஒரு பகுதியில் சுவர் இடிந்து விழத் தொடங்கியது. இப்படி
இடிந்து விழப்போவதற்கான அறிகுறி தோன்றியபோதே, சுரங்கப் பணியை நிறுத்தி
இருந்தால் விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள் விவரம்
தெரிந்தவர்கள். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் இந்த
விபத்து மனித அசிரத்தையால்தான் ஏற்பட்டது என்று தெரிவிக்கிறார்கள்.
உலகளாவிய அளவில் சுரங்கப் பணி என்பது இடர்ப்பாடு கொண்டதுதான். ஆபத்தில்லாத
சுரங்கப் பணி என்பது எங்குமே கிடையாது. தொழில்நுட்ப வளர்ச்சி
ஏற்பட்டிருந்தாலும், சுற்றுச்சுவர் சரிதல், நிலத்தடி வெடிப்பு என்பவை
தவிர்க்க முடியாதவை. இந்த ஆபத்துகளைக் குறைக்க முடியுமே தவிர முற்றிலுமாக
இல்லாததாக்க முடியாது.
இதுபோன்ற விபத்துகளில் பெரும்பாலானவை, பாதுகாப்பு ஏற்பாடுகளைப்
பின்பற்றாமல் இருப்பதாலும், பாதுகாப்பு அம்சங்களே இல்லாமல்
இருப்பதாலும்தான் ஏற்படுகின்றன. சுரங்கப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள்
தேவையில்லாமல் இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
இந்தப் பிரச்னை, அனுமதி பெறாத சட்டவிரோத சுரங்கங்களிலும், வெளி
நிறுவனத்திற்கு ஒப்பந்தப் பணியில் தரப்பட்டிருக்கும் சுரங்கங்களிலும்தான்
மிக அதிகமாகக் காணப்படுகிறது.
லால்மாடியா விபத்து அப்படிப்பட்டதுதான். ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட்
நிறுவனத்தின் ராஜ்மஹல் திறந்தவெளிச் சுரங்கப் பணி மகாலட்சுமி
நிறுவனத்திடம், ஒப்பந்தப் பணியாகத் தரப்பட்டிருக்கிறது. இப்படி ஒப்பந்தப்
பணியாகச் சுரங்கங்களில் நிலக்கரி எடுக்கும் வேலையில் ஈடுபடுபவர்கள்,
பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிப்பதில் அக்கறை காட்டுவதில்லை.
அவர்களுக்குத் தொழிலாளர்களின் நலனையோ பாதுகாப்பையோ உறுதி செய்வதைவிட,
எங்கெல்லாம் மிச்சம் பிடித்துத் தங்கள் லாபத்தை அதிகரிக்க முடியும்
என்பதில்தான் அக்கறை அதிகமாக இருக்கும்.
லால்மாடியா விபத்தில்கூட, முதலில் சிறிய அளவில் சுவர்களிலிருந்து மண் சரிவு
ஏற்படத் தொடங்கியது. அதை அபாய அறிவிப்பாக எடுத்துக் கொண்டு, வேலையை
நிறுத்தத் தயாரானார்கள். ஆனால், ஒப்பந்தக்காரர் எப்படியும் குறிப்பிட்ட
நேரம் வரை வேலை நடந்தாக வேண்டும் என்று உத்தரவிட்டதாகப் பார்வையாளர்கள்
தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவிலேயே மிகவும் ஆபத்தான பணி சுரங்கப் பணிதான். பத்து நாள்களுக்கு
ஒரு மரணம் என்கிற அளவில் கடந்த ஆண்டு விபத்துகள் நடந்தன. நிலக்கரி வெட்டி
எடுப்புத் துறையில் மட்டும் 2015-இல் 100 மில்லியன் டன் நிலக்கரி வெட்டி
எடுப்பதற்கு 7 உயிர்கள் என்கிற அளவில் சுரங்கங்கள் பலி வாங்கியிருக்கின்றன.
2014-ஆம் ஆண்டு தேசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கைப்படி, சுரங்க
விபத்துகளால் ஏற்படும் மரணங்கள், சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.
பயிற்சி, பாதுகாப்பு, விபத்து குறித்த விசாரணை ஆகியவற்றில் சர்வதேச அளவிலான
வழிமுறைகளை சுரங்கத் துறையில் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அந்த
அறிக்கை குறிப்பிடுகிறது.
சுரங்கத் துறையில் பாதுகாப்பு அம்சங்கள் காணப்படவில்லை, சுரங்கத்
தொழிலாளர்களுக்குத் தகுந்த பாதுகாப்பில்லை என்பதை முதலில் உணர்ந்து
செயல்பட்டது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசுதான். 1973-இல்
நிலக்கரிச் சுரங்கங்களை தேசியமயமாக்கிச் சட்டம் இயற்றியதற்குக் காரணமே,
தனியார் துறையினர் சுரங்கங்களில் போதிய பாதுகாப்பை உறுதி செய்யாமல்
இருந்ததும், சுரங்கத் தொழிலாளர்களின் நலனைப் பேணாமல் இருந்ததும்தான்.
அன்றைய நிலைமையிலிருந்து இப்போது சுரங்கத் தொழிலாளர்களின் பணி நேரப்
பாதுகாப்பு மிகவும் அதிகரித்து விட்டிருக்கிறது.
தாராளமயமாக்கல் கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு, தேசியமயமாக்கப்பட்ட
நிலக்கரிச் சுரங்கங்களில், தனியார் ஒப்பந்ததாரர்களின் மூலம் நிலக்கரி
வெட்டி எடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசுத் துறை
சுரங்கத் தொழிலாளர்களின் மெத்தனப் போக்கு நிர்வாகங்களைத் தனியாரிடம்
ஒப்பந்த முறையில் அந்தப் பணியை ஒப்படைக்கத் தூண்டியது. அவர்கள் முறையான
பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்காமல் இருப்பது மீண்டும் பிரச்னையை
எழுப்புகிறது.
2015-இல் மட்டும் இந்தியாவிலுள்ள 570 சுரங்கங்களில் 38 தொழிலாளர்கள்
மரணமடைந்திருக்கிறார்கள். 2016-இல் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து கடந்த
ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் மட்டும் 65 மரணங்கள்
நிகழ்ந்திருக்கின்றன. இது வெளியே தெரியவந்த எண்ணிக்கைதானே தவிர சரியான
எண்ணிக்கை அல்ல. பல மரணங்கள் வெளியில் தெரிவதில்லை அல்லது சுரங்க
ஒப்பந்ததாரர்கள் அவற்றை மரணமாக ஏற்றுக் கொள்வதில்லை.
பாதுகாப்பு அம்சங்கள் ஒருபுறம் இருக்க, அதைவிட அதிர்ச்சி அளிப்பது,
சுரங்கப் பணியில் மரணமடையும் தொழிலாளர்களின் குடும்பத்திற்குத் தரப்பட
வேண்டிய இழப்பீடு. மிகவும் ஏழைகளான அந்தச் சுரங்கத் தொழிலாளர்களின்
குடும்பங்களுக்கு அறிவிக்கப்படும் இழப்பீடுகள் போய்ச் சேர்வதில்லை என்கிற
உண்மை சுடுகிறது. லால்மாடியா நமது விழிகளைத் திறந்து சுரங்கங்களின்
பாதுகாப்பை அதிகரித்தால் மகிழ்ச்சி!
கூமுட்டையிடும் சிறைக்கோழிகள்
By ஆர்.எஸ். நாராயணன் |
Published on : 13th January 2017 01:14 AM |
பாய்ச்சல் காளைகள் சித்தரவதை செய்யப்படுவதாகக் குற்றம் சுமத்தி
உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்துவிட்டது. இது சரியா தவறா
என்ற விவாதம் தொடர்கிறது. எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த
நீதிமன்றத் தடையை நீக்கப் போராடுவதாக மார்தட்டுகிறார்கள்.
ஆனால், கூண்டுச் சிறைக்குள் கூமுட்டையிடும் சிறைக் கோழிகளின் சித்தரவதைக்கு
முற்றுப்புள்ளி உண்டா? இந்தப் பிரச்னை இப்போது உச்சநீதிமன்றத்தின்
கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சென்னையைப்போல் பெரிய நகரங்களில் வாழ்வோர் தினமும் கூமுட்டைகளை உடைத்து
ஆம்லெட் செய்து ரொட்டித் துண்டில் வைத்து ஒரு துரித உணவாக வயிற்றுக்குள்
தள்ளும்போது, ஒரு கணம் இந்த கூமுட்டை எப்படி உற்பத்தியாகிறது என்ற சோகப்
பின்னணியை நினைத்துப் பார்த்தால் அவர்கள் அநேகமாக முட்டை சாப்பிடுவதையே
அன்று முதல் நிறுத்திவிடுவார்கள்.
முக்கியமான மூன்று காரணங்கள் உண்டு. இம்முட்டைகள் அந்நிய தேசத்து வெள்ளைக்
கோழிகளால் இடப்படும் கூமுட்டைகள். அதாவது மலட்டு முட்டைகள். அடைகாத்தால்
குஞ்சு வராது. இப்படிப்பட்ட முட்டைகளைக் கூமுட்டைகள் என்பார்கள்.
இரண்டாவது இவற்றின் தாய்க் கோழிகள் கூண்டுச் சிறைக்குள் அடைக்கப்பட்டுச்
சித்தரவதைக்குள்ளாகி முட்டை இடுகின்றன. மூன்றாவது, இக்கூமுட்டைகளில்
ஆண்டிபயாட்டிக் - பூச்சி மருந்து விஷம் எஞ்சியிருக்கும். தொடர்ந்து இந்த
முட்டைகளை உண்போர் "சூப்பர் பக்' என்ற கொடிய நோய்க்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு
இருக்கிறது.
உலகிலேயே அதிகபட்ச சித்தரவதைக்கு ஆளாகும் ஒரு உயிரினம் என்றால், அது
கூமுட்டையிடும் வெள்ளைக் கோழிதான். செயற்கையாக வர்த்தக ரீதியில்
வளர்க்கப்படும் கோழிகளில் இறைச்சிக் கோழி வளர்ப்புமுறை வேறு. கூமுட்டைக்
கோழி வளர்ப்பு முறை வேறு.
இறைச்சிக் கோழிகளும் சிறைக் கோழிகளே. ஆனால், கூண்டுகளில் அடைக்காமல்
தனித்தனியாக 10 சதுர அடி கொண்ட அறைகள் ஏற்படுத்தப்பட்டு ஒவ்வோர் அறையிலும்
சுமார் 100 குஞ்சுகளை விட்டு அவற்றுக்குத் தீவனம் கொடுத்து தினம் தினம்
ஆண்டிபயாட்டிக் மருந்தை ஸ்ப்ரே செய்வார்கள்.
குஞ்சுகளை கோழிகளாகக் கொழுக்க வைத்து விற்பனைக்கு அனுப்புவார்கள்.
இக்கோழிகளை இறைச்சியாக உண்போருக்கும் "சூப்பர் பக்' நோய்வரும் ஆபத்து
உண்டு. கூமுட்டைக் கோழிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக ஒரு அடி சதுரத்திற்கும்
குறைவான கம்பிச் சிறைக்குள் தன் சிறகை விரிப்பதற்குக்கூட இடமில்லாமல்
அடைத்துவைக்கப்படும். இவை அடைகாக்காத முட்டைகளை ஈனும்.
கூண்டுக்குள் கூண்டு, கூண்டுமேல் கூண்டு, என்று கூண்டுத்தொகுதிக்குள் ஆயிரக்கணக்கான கூமுட்டைக் கோழிகளைக் காணலாம்.
"இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே' என்று மனமுருகி ஆடுகள்
குட்டிகளுக்காக அன்று கவிபாடிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இன்று
உயிரோடிருந்து நாமக்கல்லைச் சுற்றியுள்ள ஊர்களில் வளர்க்கப்படும் கோழிச்
சிறைகளைப் பார்த்திருந்தால் என்ன பாடியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
கவிஞர் வாழ்ந்த காலத்தில் நாமக்கல் பகுதி முட்டை விஷயத்தில் அவ்வளவு
பிரபலமான ஊராக இல்லை. இன்று கூமுட்டை உற்பத்தியில் நாமக்கல் மாவட்டம் முதல்
நிலையில் உள்ளது. இன்று இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும்
ஆயிரக்கணக்கான நாமக்கல்கள் தோன்றியிருக்கின்றன.
பொருளாதாரக் கண்ணோட்டத்தில் ஐ.நா. உணவு மற்றும் விவசாய நிறுவனம் வழங்கும்
புள்ளிவிவர அடிப்படையில் கோழி முட்டை உற்பத்தியில் இந்தியா முதலிடம்
வகித்து வருகிறது. பள்ளிப் பருவத்தில் குறைவான மதிப்பெண் வாங்கிய மாணவனை,
"என்னடா முட்டையா?' என்று கேலி செய்வார்கள்.
ஒலிம்பிக் விளையாட்டில் ஒரு தங்கம் கூடப் பெறாமல் முட்டை வாங்கிய இந்தியா
இன்று முட்டை உற்பத்தியில் முதலிடம் என்று பேசுவது வியப்புக்குரிய விஷயம்
அல்ல. சாதாரண முட்டையல்ல, கூமுட்டைகள்தாம். கூமுட்டை வளர்ச்சி 8 முதல் 10
சதவீதம். இந்த ஆண்டு கூமுட்டை உற்பத்தி இந்தியாவில் எட்டு பில்லியன் (800
கோடி).
இந்த அளவுக்கு முட்டை உற்பத்தி உயர்ந்துள்ள பின்னணி சோகமானது என்பதுதான்
உண்மை. தன் சிறகைக்கூட விரிக்க முடியாத கூண்டுத் தொடர்களில் நெருங்கி
வாழ்ந்து முட்டை போடும் பெட்டைகளை வளர்க்க முதலில் தாய்க் கோழிகள்
வாங்கப்படுகின்றன. அவை முட்டைகளிட்டு அடை காக்கும்.
குஞ்சுகள் பொறித்தவுடன் பெட்டைக் கோழி என்றால் கூண்டில் அடைக்கப்பட்டு
முட்டை உற்பத் திக்கு ஏற்கப்படும். சேவல் என்றால் சிசுவிலேயே கொலை
செய்யப்படும். எப்படி தெரியுமா? மின்சார தோசைக்கல்லில் சிசுச் சேவல்களைப்
போட்டுக் கைமா செய்து அதை பெட்டைக் கோழிகளுக்குச் சத்துணவாக
வழங்கப்படுகிறது.
அந்தக் காலத்தில் கிராமிய அழகில் நாட்டுக் கோழிகளின் பங்கு மிகவும்
சிறப்பானது. கோழி வளர்க்கும் விவசாயிகள் மண் கொடாப்பு போட்டு அதை
வளர்ப்பார்கள். பஞ்சாரம் போட்டு கோழிக் குஞ்சுகளை எதிரிகளிடமிருந்து
காப்பாற்றுவார்கள். சேவல் கூரை மீது ஏறி "கொக்கரக்கோ' என்று கூவி நம்மைத்
துயிலெழுப்பும்.
இயற்கையாக வளரும் நாட்டுக் கோழிகளின் முட்டைகள் இப்போது கிடைப்பது அரிதாக
உள்ளது. நல்லுணவு தரும் நாட்டுக் கோழி முட்டைகளை மறந்துவிட்டு நாம், இன்று
உயிரற்ற கூமுட்டைகளை உண்ணும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம்.
இப்படிப்பட்ட நோய்க்குறியுள்ள சீமைக் கோழி கூமுட்டைகளை உண்போர் சைவப்
பெருமை பேசுவதுண்டு. கூமுட்டை மலடுதானே தவிர, அது சைவம் உணவு என்று
எப்படிக் கருத முடியும்? இப்படிப்பட்ட கூமுட்டைகளை விரும்பி உண்ணும்
மனிதர்கள் திருந்த வழி உண்டா?
கூமுட்டை போடும் சீமை வெள்ளைக் கோழிகளைக் கூண்டில் அடைத்து தினம் தினம்
சத்தூசி, சினை ஊசி, ஆண்டிபயாட்டிக் ஊசி என்று ஊசிக்கு மேல் ஊசி போட்டுக்
கூண்டிலடைத்துச் சித்தரவதை செய்வது என்ன நியாயம்?
இவ்வாறு கூண்டுகளில் அடைத்து, சிறகு விரிக்கக்கூட இடமில்லாமல் சிறைவாசம்
செய்யும் கூமுட்டைக் கோழிகளுடன் ஒப்பிடும்போது ஜல்லிக்கட்டுக் காளைகள்
சித்தரவதைக்குள்ளாவதாகப் பேசுவது வியப்பாயுள்ளது.
வருடம் 365 நாட்களிலும் ஜல்லிக்கட்டுக் காளைகள் சிறையிலா வாழ்கின்றன.
அவற்றுக்கு சிறந்த பலம் வேண்டுமென்று நல்ல போஷாக்குடன் வளர்கின்றன.
ஜல்லிக்கட்டுக்கு வளர்க்கப்படும் காளைகளில் பெரும்பாலும் காங்கேயம்
காளைகள். காங்கேயம் காளைகள் நாட்டு இனம் என்பதால் அப்படிப்பட்ட நாட்டு இனம்
அழியாமல் காக்கவும் ஜல்லிக்கட்டு காரணமாயுள்ளது.
ஜல்லிக்கட்டு விழாவின்போது அந்தக்காளைகளுக்கு ஏற்படும் காயங்களை காரணம்
காட்டி சித்தரவதை என்று முடிவு செய்ய முடியாது. விளையாட்டு வீரர்கள் புதிய
சாதனைகளைப் பெற வேண்டும் என்று கடுமையாக உடற்பயிற்சி செய்வதை யாராவது
சித்தரவதை என்பார்களா?
ஜல்லிக்கட்டின்போது பாய்ச்சல் காளைகள் துன்புறுத்தப்படுவதாச் சித்தரித்துப்
பாயும் அந்த எஸ்.பி.சி.ஏ. (S.P.C.A.) சட்டம் - அதாவது ஜீவராஜிகளின்
பாதுகாப்பு மற்றும் சித்தரவதைச் சட்டம் 1960 பிரிவு ஐஐ (1)(e) கூமுட்டைக்
கோழி வளர்ப்பிலும் பாய்கிறது.
ஆனால் இந்தச் சட்ட விதியின்படி அபராதம் ரூ.50 தான். கோடிக்கணக்கில் பணம்
புரளும் கூமுட்டைக் கோழி நிறுவனங்களுக்கு ரூ.50 எம்மாத்திரம்? அபராதம்
செலுத்திவிட்டு சித்தரவதை மீண்டும் தொடரும்.
இதை மீறி கூமுட்டைக் கோழிகள் கூண்டிலடைபட்டுச் சித்தரவதை செய்யப்படும்
காட்சிகளை வீடியோ ஆதாரத்துடன், 2014-15 ஆண்டுகளில், மும்பை, அலகாபாத்,
சண்டிகர், ஹைதராபாத் மாநில நீதிமன்றங்களில் தொடரப்பட்ட நான்கு பொதுநல
வழக்குகள், இந்தியக் கால்நடை நல வளர்ப்புக்குழு (Animal Welfare Board of
India) வகுத்துள்ள விதிமுறைகளை மீறி கூமுட்டைக் கோழி வளர்ப்பு நிறுவனங்கள்
இயங்குவதாகக் குற்றம் சுமத்திக் கூமுட்டை உற்பத்திக்குத் தடை விதிக்குமாறு
கோரியுள்ளன.
மேற்படி நான்கு பொதுநல வழக்குகளையும் விசாரணை செய்து ஒரே அமர்வில் தீர்ப்பு
வழங்குமாறு ஜீவராசிகள் நல பாதுகாப்புக் குழு மூலம் தில்லி
உச்சநீதிமன்றத்திற்கு மாநில நீதிமன்றங்கள் மாற்றியுள்ளன. விரைவில்
உச்சநீதிமன்றம் முட்டைக் கோழி வளர்ப்புக்குத் தடை விதிக்கலாம் என்று பரவலாக
எதிர்பார்க்கப்படுகிறது.
கூமுட்டை கோழி வளர்ப்பில் ஒரு முன்னணி மாநிலமான தமிழ்நாட்டில் எந்தப்
பொதுநல விரும்பியும் இந்தச் சித்தரவதைகளைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
ஜல்லிக்கட்டு மீதான உச்சநீதிமன்றத்தின் தடையை ஆதரிப்பவர்கள், ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு நிமிஷமும் சித்திரவதைக்குள்ளாகும் கூமுட்டைக் கோழிகளைக்
கண்டு மனம் இறங்காதது ஏனோ?
கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.
சகிப்புத்தன்மை கற்போம்
By எம். அருண்குமார் |
Published on : 13th January 2017 01:10 AM
தனிமனித வாழ்வில் துவங்கி, பொது வாழ்க்கை, குடும்பம், கொடுக்கல்
வாங்கல், அரசியல் என மனித சமூகத்தின் அனைத்திலும் ஆளுமை செலுத்துகிற ஆற்றல்
கொண்ட ஓர் அற்புதப் பண்புதான் சகிப்பு தன்மையாகும்.
சகிப்புத்தன்மையை இழந்து விட்டால் நம் நிலை தவறிவிடும். வாழ்க்கைப் போகும்
வழியும் மாறிவிடும். எப்போது நாம் சகிப்புத்தன்மையை மேற்கொள்கின்றோமோ
அப்போது வியக்கத்தக்க வகையிலான வாழ்க்கையை நோக்கி நாம் பயணிக்க துவங்கி
விடுவோம்.
மனித வாழ்க்கையில் சோதனைகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். சோதனைகள்
பல்வேறு வடிவங்களில் மனித வாழ்க்கையில் இடம் பெறுகின்றது. அதில் ஒன்று பசி,
பட்டினி. அப்படி ஒருவர் பசி, பட்டினியில் வாடும் போது சகிப்புத்தன்மையைக்
கையாள வேண்டும்.
நோயால் முடங்கும் போது சகிப்புத் தன்மை வேண்டும். மற்றவர்கள் அந்நேரத்தில்
நம்மை கவனிக்க தவறும்பட்சத்தில் கோபப்படாமல் சகிப்புத் தன்மையை
வெளிப்படுத்த வேண்டும்.
நமக்குள்ளே பதிலுக்கு பதில் என்ற உணர்வு இயல்பாக இருக்கும். அவன்
பேசிவிட்டால் நாமும் பேசவேண்டும் ,அவன் அடித்து விட்டால் நாமும் அடிக்க
வேண்டும்.
ஒருவர் நம்மிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொண்டால் நாமும் அவரிடம் அப்படியே
நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது தான் பழி வாங்கும் தன்மை. இந்த பழி
வாங்கும் தன்மையை விட்டு விட்டால் அதுதான் சகிப்புத்தன்மை.
அதே போல மற்றவர்கள் எல்லா விதத்திலும் நமது விருப்பத்திற்கு ஏற்பவே நடந்து
கொள்ள வேண்டும் என்று நினைக்காமல் அவர்களுக்குரிய முறையில் அவர்கள்
இருப்பார்கள் என்று ஏற்றுக் கொண்டால் அது சகிப்புத்தன்மை.
உலகில் நிலவும் பல்வேறு கலாசாரங்களையும் ஏற்றுக் கொள்வதையே சகிப்புத்தன்மை
என்று அழைக்கிறோம். மனிதகுலம் வாழ்வதற்குத் தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை
ஆகிய பல உயர்ந்த உணர்வுகளுக்கு அடிப்படையாக, சகிப்புத் தன்மை நம்மிடையே
இருக்க வேண்டும்.
சகிப்பு தன்மை இல்லை, இல்லை என்ற குரல் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இன, மொழி, மத பேதமின்றி ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
ஒரு மனிதன் சக மனிதனை மதித்தல், அவனின் உரிமைகள், சுதந்திரத்தை மதித்தல்,
ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின் மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றுக்கு
மதிப்பளித்து அவர்களின் உரிமைகளில் தலையிடாமல் இருப்பது
சகிப்புத்தன்மையாகும்.
சகிப்புத்தன்மை என்பது ஜாதி, மத, இன, மொழி உணர்வுகளால் வரும் பற்று அல்ல,
மாறாக அது ஒவ்வொருவரின் மனதிலிருந்து எழும் வாழ்வியல் நெறி. அந்த உணர்வை
எந்த ஒரு சமூக நம்பிக்கைகளாலும், நிறுவனங்களாலும், அரசாலும் உருவாக்க
முடியாது.
இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவான முகவுரை இந்தியா ஒரு சமயச்சார்பற்ற சகிப்புத்தன்மை கொண்ட நாடு என விளக்குகிறது.
கருத்து வேறுபாடுகள் எழுதல் என்பது பகுத்தறிவு உலகில் சகஜமான ஒன்று. ஆனால்
வேறுபாடுகளை களைவதற்கான வழி அறவழியாக இருக்க வேண்டும். சகிப்புத்
தன்மையற்றவர்களின் தேர்வே வன்முறை.
எவரிடம் விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சக்தி இருக்கிறதோ, அவரே
சகிப்புத்தன்மையுடையவர். தன் தவறுகளை பிறர் சுட்டிக் காட்டும் போது,
பொறுமையுடனும் பகுத்தறிவுடனும் அதை சரிசெய்ய முயல்பவரே
சகிப்புத்தன்மையுள்ளவர் எனக்கருதலாம்.
புத்தர், மகாவீரர் போன்ற சகிப்புத்தன்மை கொண்ட ஞானிகளைத் தந்த நம்
நாட்டுக்கு, சகிப்புத்தன்மை என்ற மேலான நெறியை உலக அளவில் எடுத்துச்
செல்லும் தகுதி அதிகமாகவே உள்ளது.
வருங்கால தலைமுறையின் வாழ்வு இனிதாக அமைய, சகிப்புத்தன்மை என்னும் வேர்களை நம் குழந்தைகள் மனதில் ஆழமாக ஊன்ற வேண்டியது நமது கடமை.
ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்தை வழங்கும்போது தனி மனிதனின் மானத்துக்கு
மதிப்புக்கொடுக்க வேண்டும். ஒரு மனிதனின் சொந்த வாழ்க்கையை தெருவுக்கு
கொண்டுவரும் இழிசெயல்களில் இறங்கக்கூடாது. அச்சுறுத்தலில் ஈடுபடக்கூடாது.
அவனுடைய குடும்பத்தைப் பற்றி பேசக்கூடாது.
அப்படிச் செய்கிறவர்கள் தங்களுடைய தடுமாற்றத்தையும், பலவீனத்தையுமே
வெளிப்படுத்துகிறார்கள். ஒரு கருத்துக்கு எதிர் விமர்சனமளிக்கும்போது
சகிப்புத்தன்மை இருக்க வேண்டும். இது இன்றைக்கு சமுதாயத்தில் அருகி
வருகிறது.
இன்னா செய்யாமை என்ற திருவள்ளுவரின் அதிகாரத்துக்கு
விளக்கங்கொடுத்துக்கொண்டே ஒருவரையொருவர் வாயாரத்திட்டிவரும் மனிதர்களை நம்
சமுதாயம் கொண்டிருக்கிறது.
படித்தவர்களுக்கு கூட சகிப்புத் தன்மை இருப்பதில்லை. அண்மையில் ஒரு
தமிழாசிரியர், சுய சேவை உணவகத்திற்கு சென்றார். நமக்கு தேவையான உணவை நாமே
கேட்டுப் பெற்று இருக்கைக்கு எடுத்துச் சென்று உண்ணலாம்.
அது சுய சேவை உணவகம் என்பது தெரியாத அந்த ஆசிரியர், தனக்கு தேவையான உணவை
ஆர்டர் செய்துவிட்டு நாற்காலியில் அமர்ந்துவிட்டார். நீண்ட நேரமாகியும்
தாம் ஆர்டர் செய்த உணவு மேஜைக்கு வராதததால் உணவு பரிமாறும் நபரை அழைத்து
கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் இது சுய சேவை உணகம், உங்களுக்குத்
தேவையானதை நீங்களேதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியள்ளார். அது
தெரியாததால் ஆசிரியர் ஆத்திரத்தில் அந்த தொழிலாளியை அடித்துவிட்டர்.
அனைவருக்கும் சகிப்புத் தன்மையை கற்றுத் தர வேண்டிய ஆசிரியர் சகிப்புத் தன்மை இல்லாமல் இருப்பது வருத்ததத்திற்குரியதாகும்.
சகிப்புத் தன்மை அனைவரிடத்திலும் இருக்கும்பட்சத்தில் உலகம் முழுவதும் அமைதிப் பூங்காவாகத் திகழும்.
சென்னை: மார்கழி 29ஆம் தேதி ஜனவரி 13ஆம் தேதி போகிப்பண்டிகை
கொண்டாடப்படுகிறது. தை முதல் நாள் ஜனவரி 14ஆம் தேதி தை பொங்கல் திருநாளும்,
ஜனவரி 15ஆம் நாள் மாட்டுப்பொங்கலும் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.
போகி
பண்டைய காலத்தில் இந்திர விழாவாக கொண்டாடப்பட்டுள்ளது. இது இந்திரனுக்காக
கொண்டாடப்படும் பண்டிகை. இந்திரனைப் போல நாமும் மகிழ்ச்சியுடன் தினசரியும்
போகம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மழை
பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய
நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை 'போகி'யன்று பூஜிக்கும்
வழக்கமிருந்தது. தற்போது, 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற வகையில்
போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சாமி கும்பிட நல்ல நேரம்
பழைய பொருட்களை நீக்கிவிட்டு புதிய பொருட்களை உபயோகிக்க வேண்டும் என்பதற்காக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாளை போகி திருநாளில் பழையவைகளை நீக்கி புதியவைகளை வைத்து பூஜை செய்ய நல்ல நேரம் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை
பொங்கல் பண்டிகை தை முதல்நாள் பொங்கல் வைக்க நல்ல நேரம் பகல் 11.00 - 12.00
மாட்டுப்பொங்கல்
நாளில் பசுக்கள், காளைகளுக்கு நன்றி செலுத்த பொங்கல் வைத்து பூஜை செய்ய
நல்ல நேரம் காலை 8.00 மணி முதல் 10 மணி வரை பிற்பகல் 2.00 மணி முதல் 4.00
வரை நல்ல நேரம்
source: oneindia.com
Dailyhunt
சுப்ரமணியன் சாமியின் கருத்துக்கு இல.கணேசன் விளக்கம்
தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தினால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று பா.ஜ.க எம்.பி சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் கருத்து கூறியிருந்தார். இதற்கு வலைதளங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால், ஆத்திரமடைந்த அவர், தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து கூறியவர்களை, மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சித்தார். இந்நிலையில், பா.ஜ.க எம்.பி சுப்ரமணியன் சுவாமி கருத்து குறித்து விளக்கம் அளித்த பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், சுப்ரமணியன் சுவாமியின் கருத்து, அவரது சொந்தக் கருத்து என்று விளக்கம் அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் அவ்வபோது சுப்ரமணியன் சுவாமி, சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறுவதும், அதற்கு பாஜக தரப்பிலிருந்து யாராவது ஒருவர், "சுப்ரமணியன் சுவாமியின் கருத்து, அவரது சொந்தக்கருத்து" என்று விளக்கம் தருவதும் வாடிகையாக நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
போலீசை அடித்தால் சும்மா விடுவோமா? கடுகடு துணை கமிஷனர்
மத்திய அரசின் செல்லாத ரூபாய் அறிவிப்பைக் கண்டித்து கடந்த டிசம்பர்
மாதம் 31-ம் தேதி பள்ளிக்கரணை மேடவாக்கம் பகுதியில், இந்திய ஜனநாயக
வாலிபர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பிரதமர்
மோடியைக் கண்டித்தும், பா.ஜனதாவைக் கண்டித்தும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்
முழக்கங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தினால் போக்குவரத்து நெரிசல்
ஏற்படுகிறது என்று கூறி போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முற்சித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் மோடியின் உருவ பொம்மையை
ஆர்ப்பாட்டக்காரர்கள் கொளுத்த முயன்றனர். அதனைத் தடுத்த போலீசார், அவர்களை
சரமாரியாக தாக்கி கைது செய்தனர். சம்பவத்தைப் படம்பிடித்த
பத்திரிக்கையாளரையும் தாக்கிய போலீசார் அவரிடமிருந்து கேமராவை
பறித்துக்கொண்டனர்.
கைது செய்த ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை வேனில்
ஏற்றிய போலீசார் உள்ளே வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர்களில் 3
பெண்களும் இருந்தனர். அவர்களையும் அடித்து உதைத்து பாலியல் ரீதியாக
கொடுந்தாக்குதலையும் போலீசார் நடத்தியுள்ளனர். போலீசாரின் தாக்குதலில்
ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 14 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் அனைவரும் நேற்று
(புதன்) ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுக்க அதிர்ச்சியை
ஏற்படுத்திய போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் குறித்து பல்வேறு
தரப்பினரும் கடும்கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தச்
சம்பவம் குறித்துக் கள ஆய்வு நடத்திவரும் மக்கள் கண்காணிப்பகத்தின்
ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம் தாக்குதலில் ஈடுபட்ட சென்னை போலீசாரிடமும்
ஆய்வு நடத்தி வருகிறார். அதனையொட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்,
பள்ளிக்கரணை-மேடவாக்கம் பகுதியில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது
போலீசார் நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் சட்டம்
ஒழுங்கு துணை ஆணையர் சங்கரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். துணை ஆணையர்
சங்கர், 'போலீசை அடித்தால் நாங்க சும்மா விடுவோமா' என்று ஆசீர்வாதத்திடம்
கடுகடுத்துள்ளார்.
இது
தொடர்பாக நம்மிடம் பேசிய ஆசீர்வாதம்,"மனித உரிமை மீறல் எந்த அளவுக்கு
மீறப்படுமோ அதில் கொஞ்சமும் குறைவு இல்லாமல் மேடவாக்கத்தில் போலீசார்
நடந்துள்ளனர். அதனால் மக்கள் கண்காணிப்பகம் இந்த விஷயத்தில் உரிய கள ஆய்வை
நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர முடிவு செய்தது.
அதன்படி
தாக்குதல் நிகழ்வு குறித்து விசாரணை நடத்தி வரும் துணை கமிஷனர் சங்கரை
சந்தித்து விளக்கம் கேட்டோம். மாநகர ஆணையரை சந்திக்கத்தான் அனுமதி
கேட்டிருந்தோம். ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. துணை ஆணையரை
சந்திக்கத்தான் அனுமதி கிடைத்தது. அதுவும் நீண்ட நேர காத்திருப்புக்குப்
பின்னர் துணை ஆணையர் சங்கர் என்னை அவரின் அறைக்கு அழைத்துப் பேசினார்.
அப்போது எனக்கு மேடவாக்கம் தாக்குதல் சம்பந்தமான வீடியோ காட்சியை
காட்டினார்.
"சார், போலீசார் மிகக் கடுமையாக ஜனநாயக வாலிபர்
சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பெண்கள் என்றும் பாராமல்
பாலியல் துன்புறுத்தலோடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையெல்லாம் ஜுனியர்
விகடன் உள்ளிட்ட வார இதழ்கள், நாளிதழ்களில் தொலைக்காட்சி செய்திகளில்
வந்துள்ளன" என்றோம்.
அதற்கு அவர், 'அதெல்லாம் இருக்கட்டும்,
போலீசாரை யார் தாக்கினாலும் நாங்க சும்மா விடமாட்டோம். அதான் நடந்தது.
'என்று கூறினார். மேலும் அவர், 'சார் அமெரிக்காவில் எல்லாம் போலீஸ்
நில்லுன்னு சொன்னா நிக்கணும் சார். இல்லனா சுட்டுருவான் சார்' என
பதிலளித்தார்.
"அத்தோடு இந்த ஆதாரங்களைத்தான் மனித உரிமை
ஆணையத்தில் கொடுக்க உள்ளோம். ஜனநாயக சங்கத்தினர்தான் போலீசார் மீது
தாக்குதலை நடத்தினார்கள் என்று அங்கு தெரிவிக்கவுள்ளோம்" என்றும்
அதிரடியாகக் கூறினார்.
இது மிக அதிர்ச்சியான விஷயம். மக்கள்
கண்காணிப்பகம் நேரடி கள ஆய்வை நடத்தியுள்ளது. ஆய்வு அறிக்கையை இன்னும் சில
தினங்களில் வெளியிடுவோம்" என்றார் கொந்தளிப்பாக. - சி.தேவராஜன்.
Dailyhunt
இது ஜல்லிக்கட்டு அல்ல; ‘ஏறுதழுவுதல்
தமிழர்களுக்கென தனியாக ஒரு
பாரம்பரியம், கலாசாரம், வாழ்க்கை முறைகள், வழிபாடுகள் உண்டு. தமிழர்களிடையே
பல சாதி, பல இனம் இருக்கிறது. பல மதங்களை கடைபிடிக்கிறார்கள். ஆனால்,
எல்லோருக்கும் ஒரு பொதுவான பண்டிகை என்றால், அது ‘‘பொங்கல்’’தான். தனக்கு
உணவு அளிக்கப்பயிர்களை விளைவிக்க செய்த இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும்
வகையில் பொங்கலிட்டு, அது பொங்கும்போது, ‘‘பொங்கலோ பொங்கல்’’ என்று உள்ளம்
நிறைய குலவையிட்டு வாழ்த்தும் பண்டிகைதான் இது. தனக்கும், வேளாண்மைக்கும்
உதவியாக இருந்த மாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பொங்கலிட்டு
மகிழ்வார்கள். இந்த நாளில் ஊரிலுள்ள இளைஞர்கள் தங்கள் வீரத்தையும், உடல்
வலிமையையும் காட்ட, ஒவ்வொரு ஊரிலும் பல்வேறு வகையான வீரவிளையாட்டுக்களை
நடத்துவார்கள். அதில் ஒன்றுதான் சங்க இலக்கியங்களில் எல்லாம் ‘ஏறுதழுவுதல்’
என்ற பெயருடன் சீறிவரும் காளைமாட்டை அடக்கும் வீரவிளையாட்டாகும்.
காலமெல்லாம் ‘ஏறுதழுவுதல்’ என்ற பெயரில் நடந்து வந்தது இந்த
வீரவிளையாட்டாகும். பிற்காலங்களில் என்ன காரணத்தினாலோ, ஜல்லிக்கட்டு என்ற
பெயர் மாறியது.
இந்த நிலையில், 2006–ம் ஆண்டு இந்த விளையாட்டில் கலந்துகொண்ட ஒரு மாணவன்
உயிரிழக்க நேரிட்டது. இதையொட்டி, அந்த மாணவனின் தந்தை மதுரை ஐகோர்ட்டு
கிளையில் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது.
அதன்பிறகு அப்பீல்கள் தொடர்ந்து வழக்குகள், தீர்ப்புகள் என்றநிலையில் கடந்த
இரண்டு ஆண்டுகளாக போட்டி நடக்கவில்லை. ஆனால், இரண்டு ஆண்டுகளாக இந்த ஆண்டு
நடந்துவிடும், நிச்சயம் நடந்துவிடும் என்று அரசியல்வாதிகள் உறுதிமொழிகள்
கொடுப்பதும், அதனை மக்கள் நம்புவதும் ஒருவாடிக்கையாக நடந்துவருகிறது.
ஜல்லிக்கட்டு நடக்கும் நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு, பிறகு அந்த
எதிர்ப்பு உணர்வுகள் அப்படியே மங்கிப்போய்விடும். இந்த ஆண்டும், பொங்கல்
நெருங்குகிற நேரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழ்நாடு முழுவதும் வீறுகொண்ட
புதிய போராட்டங்கள் கிளம்பிவிட்டன. அனைத்து ஊர்களிலும் விவசாயிகள்,
மாணவர்கள் இந்த விளையாட்டை இந்த ஆண்டு நடத்தியே தீரவேண்டும் என்று
போர்க்குரல் எழுப்பி வருகிறார்கள். மத்திய அரசாங்கத்தை எடுத்துக்கொண்டால்,
உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. இந்த வழக்கை மீறி எங்களால் ஒன்றும்
செய்ய முடியாது என்று கூறுகிறது. எதிர்க்கட்சிகள் அவசர சட்டம்
பிறப்பித்தால் நடத்த முடியும் என்கிறார்கள். உச்சநீதிமன்றமோ, உடனடியாக
எங்களால் தீர்ப்பு வழங்க முடியாது. தீர்ப்பை இப்போதுதான்
எழுதிக்கொண்டிருக்கிறோம் என்று நேற்று கூறிவிட்டது. இதற்கிடையில்,
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இடைக்கால மனுதாக்கல் செய்யும் அனுமதியும்
மறுக்கப்பட்டது.
இந்த நிலையில், விவசாயிகளெல்லாம் ஜல்லிக்கட்டு இல்லையென்றால், ‘‘எங்களுக்கு
கரும்பு பொங்கல் இல்லை, கருப்பு பொங்கல் என்கிறார்கள்’’. பல ஊர்களில்
தடையை மீறி, ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என்று சூளுரைத்துவிட்டனர்.
காரைக்குடியில் மஞ்சுவிரட்டு என்றபெயரில், இந்த போட்டி நடந்துவிட்டது. ஆக,
இது ஒரு பெரிய சட்டம்–ஒழுங்கு பிரச்சினையாக உருவெடுக்கப்போகிறது. இதை
தடுக்க பா.ஜ.க. மூத்த தலைவர் டெல்லி மேல்–சபை உறுப்பினரான இல.கணேசன்
அருமையான யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு என்று
நடத்தாமல் ‘ஏறுதழுவுதல்’ என்ற பெயரில் புதிய விழாவாக அறிவிக்கலாம். அதற்கான
அதிகாரம் தமிழக அரசுக்கு இருக்கிறது என்று ஒருகருத்தை தெரிவித்துள்ளார்.
பண்டைய இலக்கியங்களில், தமிழர்களின் வீரவிளையாட்டான ‘ஏறுதழுவுதல்’
என்றுதான் இருக்கிறது. கலித்தொகை, திருவிளையாடல் புராணம், நாலடியார் போன்ற
இலக்கியங்கள் அனைத்திலும் ‘ஏறுதழுவுதல்’ என்ற பெயரில்தான்
நடத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல்–அமைச்சரும்
உறுதிமொழி அளித்துள்ளார். மத்திய அரசாங்கம் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில்
அவசரசட்டம் பிறப்பிக்கவேண்டும். இல்லையென்றால், இல.கணேசன் கூறிய
ஆலோசனையின்படி, ‘ஏறுதழுவுதல்’ என்றபெயரில் ஜல்லிக்கட்டு விளையாட்டை
நடத்தமுடியுமா? என்பதை சட்டரீதியாக பரிசீலித்து, எந்தவித அசம்பாவிதமும்
நடக்காமல் தகுந்த முன்னேற்பாடுகள், மருத்துவவசதிகளுடன் இந்தப்போட்டியை
நடத்த சட்டநிபுணர்களுடன், மத்திய அரசாங்கமும், தமிழக அரசும் ஆலோசனை நடத்தி
உடனடியாக அறிவிக்கவேண்டும்.
தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் 23-ம் தேதி தொடங்குகிறது. புதிய
திட்டங்கள், நிவாரணம், அதிகாரிகளுடன் கலந்தாய்வு என பரபரப்பாக இயங்கி
வருகிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 'முதல்வராக சசிகலா பதவியேற்பதற்காக
குறிக்கப்பட்ட நல்ல நாட்கள் தள்ளிக் கொண்டே போகின்றன. பிரதமரை நேரடியாகச்
சந்திக்கச் சென்ற தம்பிதுரைக்கும் உரிய மரியாதை கிடைக்கவில்லை" என்கின்றனர்
அ.தி.மு.க வட்டாரத்தில்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு
எளிதாக வர முடிந்த சசிகலாவால், முதல்வர் பதவியை நோக்கி நகர முடியவில்லை.
கடந்த சில நாட்களாக வெளிப்பட்டு வரும் முட்டல், மோதல்கள் நேற்று
பகிரங்கமாகவே வெடிக்கத் தொடங்கின. இதை உணர்ந்து, தன்னுடைய நிலைப்பாட்டை
உளவுத்துறை அதிகாரி ஒருவர் மூலம் கார்டன் பார்வைக்குக் கொண்டு சென்றார்
ஓ.பி.எஸ்.
அப்படியும் மன்னார்குடி உறவுகளின் கோபம் தணியவில்லை.
"ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில், பிரதமரை
சந்திக்க முயற்சி மேற்கொண்டார் தம்பிதுரை. அப்போது முடியவில்லை. இரண்டாவது
முறையாக, நேற்று ஜல்லிக்கட்டுக்காக சசிகலா கொடுத்த கடிதத்தை எடுத்துக்
கொண்டு பிரதமரை சந்திக்கச் சென்றார் அ.தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளரும்
மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை. 'கென்ய அதிபருடனான சந்திப்பில்
பிரதமர் இருக்கிறார். அதனால்தான் அவரை சந்திக்க முடியவில்லை' என தம்பிதுரை
சமாதானம் சொன்னாலும், பன்னீர்செல்வத்துக்கு எதிராக நடத்தப்படும் உள்கட்சி
தாக்குதல்களை பிரதமர் கவனித்துக் கொண்டு வருகிறார். ஜல்லிக்கட்டு என்ற
பெயரில் சமரசம் பேசத்தான் தம்பிதுரை சென்றார். அதற்கு மோடி இடம்
கொடுக்கவில்லை" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்,
"டெல்லியில்
நேற்று மீடியாக்களிடம் பேசும்போதும், தமிழகத்தில் முதல்வர் ஒருவர்
இருக்கிறார் என்பதை எந்த இடத்திலும் அவர் நினைவூட்டவில்லை. அதேநேரம்,
'ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம். பின்வாங்க மாட்டோம்' என அதிரடியைக்
கிளப்பினார் பன்னீர்செல்வம். 'ஆட்சிக்குள் பன்னீர்செல்வம் பலம் பெற்றுவிடக்
கூடாது' என்பதற்காகத்தான், கடிதம் எழுதுவது, நிர்வாகிகளை பேச வைப்பது
போன்ற செயல்களை மன்னார்குடி உறவுகள் செய்து வருகின்றன. கட்சிக்குள்
இருக்கும் உள் எதிரியாக பன்னீரையும் வெளி எதிரியாக தீபாவையும் பார்க்கிறார்
சசிகலா. அமைச்சர்கள் மற்றும் சீனியர் நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசித்து
வருகிறார். பன்னீரை வீழ்த்தும் அவர்களின் முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை.
கூட்டத் தொடர் அறிவிக்கப்பட்டுவிட்டதால், சசிகலாவின் முதல்வர் கனவு
தள்ளிப் போய்விட்டது" என்றார் விரிவாக.
"சசிகலா, தினகரன், நடராசன் உள்ளிட்ட மூவரும் அதிகாரத்துக்குள் வந்துவிட முடியாத அளவுக்கு
வழக்குகள்
நெருக்கிக் கொண்டிருக்கின்றன. பணப் பரிவர்த்தனை வழக்கில் டி.டி.வி.தினகரனை
நெருக்கிக் கொண்டிருக்கிறது அமலாக்கத்துறை. லெக்சஸ் கார் இறக்குமதியில்
மோசடி செய்த வழக்கில் நடராசன் வகையாகச் சிக்கியிருக்கிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஜனவரிக்குள் வரலாம் என்பதால்
பதைப்புடன் இருக்கிறார் சசிகலா. இந்த வழக்குகளால் முதல்வர் பதவியைத்
தொட்டுவிடுவது அவ்வளவு எளிதானதல்ல. தீர்ப்பு வருவதற்குள் முதல்வர்
ஆகிவிட்டாலும், உறவுகளில் ஒருவரை பதவிக்குக் கொண்டு வரலாம் எனத்
திட்டமிட்டிருந்தார் சசிகலா.
அவருடைய நினைப்புக்கு குறுக்கே
பன்னீர்செல்வம் இருக்கிறார். அதன் விளைவை தம்பிதுரை நேரடியாகக் காட்டிக்
கொண்டிருக்கிறார். 'உங்கள் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறேன்' என
பன்னீர்செல்வம் கூறினாலும், கார்டன் வட்டாரம் மிகுந்த எரிச்சலில்
இருக்கிறது. பிரதமர் மூலமே விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வேலையில்
மன்னார்குடி உறவுகள் இறங்கியுள்ளன. 'இப்போதுள்ள நிலை தொடர்ந்தால், தமிழக
பா.ஜ.கவின் எதிர்காலத்துக்கு நல்லது' எனத் திட்டமிடுகிறார் அமித் ஷா.
அதனாலேயே, சசிகலாவுக்கு எதிரான சக்திகளை சந்திப்பதற்கு ஆர்வம் காட்டி
வருகிறார். தீபாவுக்குக் கூடும் கூட்டங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு,
விசாரித்திருக்கிறார். விரைவில் தீபாவை அவர் சந்திப்பதற்கும் வாய்ப்பு
இருக்கிறது" என்கிறார் அரசியல் பார்வையாளர் ஒருவர்.
"குடியரசு
தினத்தில் பன்னீர்செல்வம் கொடியேற்றுவார் என ஆளுநர் அலுவலகம்
தெரிவித்துள்ளது. சட்டசபை கூட்டத் தொடர், பட்ஜெட் வேலைகள் என முதல்வருக்கான
பணிகளில் வேகத்தைக் கூட்ட ஆரம்பித்துவிட்டார் பன்னீர்செல்வம். முதல்வரின்
முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில், இருட்டடிப்பு செய்வதற்கான
வேலைகளில் ஆளும்கட்சி ஊடகமும் செயல்பட ஆரம்பித்துவிட்டது. 'ஜெயலலிதா
மரணமடைந்த நாளிலேயே, சசிகலா முதல்வர் பதவியை ஏற்றிருந்தால், இந்தளவுக்கு
விவகாரம் நீண்டிருக்காது' என மன்னார்குடி உறவுகள் பேசி வருகின்றனர்.
வெங்கய்ய நாயுடு சொன்னதால்தான், பன்னீர்செல்வத்தை முன்னிறுத்தினார்.
இப்போது தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, பன்னீர்செல்வதைப் பதவியில்
இருந்து நீக்குவதற்கு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் சசிகலா. எந்த
அசைவையும் காட்டாமல், பளீர் புன்னகையோடு வலம் வருகிறார் முதலமைச்சர்
பன்னீர்செல்வம்" என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.
- ஆ.விஜயானந்த்